குணசேகரனை போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிவிட்டு ஜனனி இப்படி எல்லாம் பண்ணலாமா? ஆனாலும் வர்ணிக்கும் ரசிகர்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்கும் மதுமிதா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அசந்து போய் இருக்கிறார்கள்.
சீரியலில் இவர் தற்போது குணசேகரனை போலீஸ் ஸ்டேஷன் அனுப்பி இருக்கிறார். ஆனால் தற்போது மதுமிதா வெளியிட்ட போட்டோஸ் அதை கொண்டாடும் விதமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

ஆரம்ப வாழ்க்கை
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்து வரும் மதுமிதா பெங்களூரை சார்ந்தவராம். இவர் நடிக்க வேண்டும் என்பது எல்லாம் இவருக்கு சின்ன வயதிலேயே தோன்றியது கிடையாதாம். படிப்பு மட்டும்தான் தனது குறிக்கோள் என்று ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்த இவர் தன்னுடைய குடும்பத்தோடு சுற்றுலா சென்றிருந்த நேரத்தில் இவரைப் பார்த்த இவருடைய அப்பாவின் நண்பர் தான் இவருடைய அப்பாவிடம் உன்னுடைய பொன் அழகாக இருக்கிறார். அதனால் இவருக்கு சினிமாவில் நடித்தால் நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று கூறி இருந்தாராம்.

கிடைத்த பாராட்டு
ஏற்கனவே டான்ஸ் கற்று இருந்த மதுமிதா அதற்குப் பிறகுதான் சீரியலில் நடிக்கலாம் என்று வாய்ப்புக்காக ஆடிஷன் சென்று இருக்கிறாராம். பல இடங்களில் இவர் ஆடிஷனலில் செலக்ட் ஆகவில்லையாம். ஆனால் இறுதியாக கன்னடா சீரியல் ஒன்றில் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருடைய நடிப்பை பார்த்து பிடித்துப் போன டைரக்டர் இவர் அழகாக நடிப்பதாகவும் இவருக்கு நல்ல ஒரு ஃபியூச்சர் இருக்கிறது என்று இவரை கூப்பிட்டு வாழ்த்தினராம்.

திருமுருகனின் அழைப்பு
ஆரம்பத்தில் சைடு கேரக்டரில் நடித்து வந்த மதுமிதா பிரியாத வரம் வேண்டும் எனும் சீரியலில் நடித்திருந்தாராம். இந்த சீரியலில் இவருடைய நடிப்பை பார்த்து தான் இவரிடம் திருமுருகன டீம் புது சீரியலில் நடிக்க விருப்பம் இருக்கிறதா என்று விருப்பம் கேட்டு இருந்தார்களாம். அப்போது இவர் குழப்பத்தில் இருந்து சரி என்றும் சொல்லவில்லையாம் இல்லை என்றும் சொல்லவில்லையாம். ஆனால் போனை கட் செய்த பிறகு தான் கூகுளில் திருமுருகன் பற்றி சர்ச் செய்து பார்த்திருக்கிறார். அதற்கு பிறகு தான் இவர் மனப்பூர்வமாக எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க ஓகே சொன்னாராம்.

ரசிகர்களின் கிண்டல்கள்
தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்து வரும் மதுமிதா சீரியலில் நடிப்பு மட்டுமல்லாமல் சில நேரங்களில் போட்டோ சூட் எடுத்து வருகிறார். அந்த மாதிரி எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலர் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு நீங்கள் இப்படி ஜாலியாக போட்டோ சூட் எடுத்து கொண்டாடுகிறீர்களா? என்று செல்லமாக கோபித்து கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். என்னமா! சீரியலில் நடிப்பதை எல்லாம் இப்படி சொந்த வாழ்க்கையில் கோர்த்து விடலாமா?என்று மதுமிதா மனசுக்குள்ளே நினைத்தபடி ஸ்மைலை மட்டும் ரசிகர்களுக்கு அனுப்பி இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications