இப்படி பேசித்தான் மகாலட்சுமியை கவர்ந்தாரா ரவீந்தர்..!? இது தெரியாம போச்சே..புலம்பும் 90ஸ் கிட்ஸ்
சென்னை: தற்போது ட்ரெண்டிங் ஜோடியாக இருந்து வரும் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் ஜோடிகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
வந்தாள் மகாலட்சுமியே என்னும் நிகழ்ச்சியில் இந்த ஜோடிகள் தங்களுடைய காதல் வாழ்க்கையை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோவை பார்த்த 90ஸ் கிட்ஸ்கள் பலர் புலம்பி வருகிறார்கள்.

தொகுப்பாளராக அறிமுகம்
தொகுப்பாளராக அறிமுகமான மகாலட்சுமி தற்போது சின்னத்திரை சீரியல்களில் கலக்கி வருகிறார். இவர் நடிக்காத சேனல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பிரபலமான பல சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார். ஆரம்பம் முதலே இவர் சீரியல்களில் நெகட்டிவ் ரோலில் தான் அதிகமாக நடித்து வந்துள்ளார். ஒரு சில சீரியல்களில் தான் இவர் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறார்கள். இதனால் இவரை பலர் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

எளிமையான திடீர் திருமணம்
சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் மகாலட்சுமி ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அவர் தற்போது திடீரென்று இரண்டாவது திருமணத்தை முடித்து இருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தது. ஏற்கனவே இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கும் நிலையில் இவர் யாரிடமும் எந்த தகவலையும் தெரிவிக்காமல் திடீரென தயாரிப்பாளர் ரவீந்திரரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாம் திருமணம் என்பதால் இவர்கள் எளிமையாக திருப்பதியில் உள்ள கோவிலில் திருமணத்தை முடித்து இருந்தனர்.

ட்ரெண்டிங் ஜோடி
எல்லோரையும் போல சாதாரணமாக திருமணத்தை முடித்து இருந்த இவர்கள் ஒரே நாளில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டனர். சமூக வலைத்தளத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் இவர்களுடைய புகைப்படம் தான் ஒரு மாத காலமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்கு திருமணம் முடிந்து இன்றோடு ஒரு மாதம் முடிவடைந்து விட்டது. ஆனாலும் இவர்கள் ட்ரெண்டிங் ஜோடியாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களை விஜய் டிவியில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர்.

90ஸ் கிட்ஸ்களின் வருத்தம்
வந்தாள் மகாலட்சுமியே என்று நிகழ்ச்சிக்கு பெயர் வைத்து அதில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் காதல் கல்யாணம் பற்றிய சுவாரசியமான தகவல்களை பேசி இருக்கின்றனர். அதில் மகாலட்சுமி தொகுப்பாளராக மாறி இருக்கிறார். அவரிடம் போன் செய்து ரவீந்தர் பேசுவது போன்ற ஸ்கிரிப்ட் கொடுத்திருக்கின்றனர். அதில் நான் உங்களுடைய பயங்கரமான ஃபேன் என்று ரவீந்தர் மகாலட்சுமி இடம் அறிமுகம் செய்து இருக்கிறார். அது மட்டுமில்லாமல் நான் உங்களுடைய ஃபேன், எவ்வளவு பெரிய ஃபேன் என்றால் நீங்கள் பேசுவதை மியூட் போட்டால் கூட நீங்கள் பேசுவது எனக்கு கேட்கும் என்று கூறியிருக்கிறார். அதற்கு தேங்க்யூ என்று கூறிய மகாலட்சுமி, நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? என்று பதில் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு நீங்க பேசுறத நான் கேட்டுகிட்டு இருக்கேன் என்று கூறுகிறார். அடுத்து மகாலட்சுமி உங்களுக்காக என்ன பாடலை நான் ப்ளே பண்ணலாம் என்று கேட்க, அதற்கு வந்தாள் மகாலட்சுமியே என்று ஒரு பாடல் இருக்கிறது அதை போடுங்களேன் என்று கேட்டிருக்கிறார். இந்த மாதிரி இவர்கள் பேசும் ப்ரோமோ தற்போது வெளியானதும் நெட்டிசன்கள் இப்படி பேசி தான் மகாலட்சுமியை ரவீந்தர் கரெக்ட் பண்ணி விட்டார் போல என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.
-
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
சிறகடிக்க ஆசையில் அதிரடி ட்விஸ்ட்... வீட்டையே அதிர வைத்த விஜயாவின் முடிவு... புது சிக்கலில் சிக்கிய முத்து! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications