புது முல்லை வந்த நேரம்.. பழைய சீரியலை காப்பி அடிக்கலாமா? ஆனாலும் உங்க பிளான் வேற லெவல் தான்!!
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புது முல்லையாக லாவண்யா அறிமுகம் ஆகி இருக்கிறார்.
புது முல்லை வந்த நேரத்தில் பழைய சீரியலை காப்பியடித்த கதை வரப்போவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு சரவணன் மீனாட்சி சீரியலில் வந்த கதையை இப்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ரிப்பீட் அடிக்க போகிறார்களாம்.

விலகிய காவியா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஆயிரம் எபிசோடுகள் தாண்டி ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் வெற்றி விழாவை கொண்டாடியது .இந்த நிலையில் கதிர் முல்லை ஜோடி பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை விட்டு தனியாக வசித்து வருகின்றனர். இவர்கள் இப்போது ஹோட்டல் வைத்து அதில் லாபத்தை பார்க்க தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த காவியா சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.

புது ஐடியா
ஏற்கனவே முல்லை கேரட்டரில் இரண்டு நடிகைகள் நடித்த நிலையில் இப்போது மூன்றாவது நடிகை யாக லாவண்யா களம் இறங்கி இருக்கிறார். இந்த நிலையில் சீரியலின் விறுவிறுப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக,கதிரை புதிய போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக முல்லை இன்றைய எபிசோட்டில் கெஞ்சி கொண்டிருக்கிறார். இளம் ஜோடிகள் கலந்து கொள்ளும் சமையல் நிகழ்ச்சியில் நாம் கலந்து கொண்டால் அதில் 10 லட்சம் ஜெயிக்கலாம் பணத்தை சீக்கிரமாக ஜெயித்து விட்டால் நாமும் வீட்டிற்கு சென்று விடலாம் என்று முல்லை கூறி வருகிறார்.

காலம் காலமாக நடக்கிறது
இதே சீன்களை ஏற்கனவே சரவணன் மீனாட்சி சீரியலிலும் ராஜா ராணி சீசன் 2 சீரியலிலும் ரசிகர்கள் பார்த்திருக்கின்றனர். அதே தான் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் வரப்போகிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். சரவணன் மீனாட்சி சீரியலில் சரவணன் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடைசி நேரத்தில் வெற்றி பெற்று விடுவார், அதுபோல ராஜா ராணி 2 சீசனில் சரவணன் சந்தியா வழிகாட்டலின்படி சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடைசியில் வெற்றி பெற்று அவருடைய அம்மாவின் கோபத்தை குறைப்பார். அதுபோல இப்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலின் நடக்க இருப்பதாக தெரிகிறது.

பழைய கதையா இருக்குமோ
இந்த எபிசோட்டில் முல்லை கதிரிடம் இந்த சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவோம் என்று கூறும்போது கதிர் அதற்கு எங்கள் குடும்பத்திற்கு இதுவெல்லாம் செட் ஆகாது நாங்கள் இப்படி எல்லாம் கலந்து கொண்டது கிடையாது என்று கூறி வருகிறார். ஆனாலும் தனக்கு சமையலைப் பற்றி எதுவும் தெரியாது என்றும் கூறுகிறார். சமையல் பற்றி தெரியாமல் தான் தற்போது கதிர் ஹோட்டல் நடத்தி வருகிறாரா? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். புது முல்லை வந்த நேரத்தில் பழைய சீரியலில் எல்லாம் காப்பி அடித்து சீரியலுக்கு விறுவிறுப்பு ஏற்படுத்தப் போகிறார்களா ?என்று பொறுத்திருந்து பார்த்தால் தெரியும் என்பது பலருடைய பதிலாக இருக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications