நீங்களே உங்களை கலாய்ச்சிக்கிட்டா எப்படி? மீனா கேட்ட கேள்வி?பாண்டியன் ஸ்டோரை கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது முல்லை கர்ப்பமாக இருப்பதாக சீரியலில் காட்டப்படுகிறது.
இதைக் குறித்து ஏற்கனவே நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரசிகர்கள் கேட்கும் அதே கேள்வியை இன்றைய பிரமோவில் மீனா கேட்டதை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு குடும்ப ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். இந்த சீரியல் அண்ணன் தம்பி கதையை மையமாக கொண்டதாலே இங்கு அடிக்கடி ஃபங்ஷனுக்கும் கொண்டாட்டத்திற்கும் பஞ்சமில்லாமல் தான் இருந்து வருகிறது. மாதத்திற்கு ஒரு கொண்டாட்டத்தையும், ஒரு புது பிரச்சனையும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புதுசு புதுசாக வந்த வண்ணமாகவே இருக்கிறது. அதுவும் சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தின் பூர்வீக வீட்டை மீனாவின் அப்பா எழுதி வாங்கியதும் அதைத்தொடர்ந்து சூப்பர் மார்க்கெட் மூடப்பட்டது என புது புது பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது.

செண்டிமெண்ட் அழுகை
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் குடும்ப வீட்டை விட்டு மீனாவின் அப்பா அனைவரையும் வெளியேற்றியதும் அனைவரும் கதிர் முல்லை ஏற்கனவே இருந்த பழைய வீட்டிற்கு மொத்த குடும்பத்தினரும் ஒன்றாக வந்துவிட்டனர். இவர்கள் வந்து நான்கு மாதம் ஆகின்றது. அனைவருமே ஒரே அறையில் தான் தூங்குகின்றனர். இந்த நிலையில் தற்போது முல்லை கர்ப்பமாக இருக்கிறார். இந்த பிரமோ ஏற்கனவே வெளியாகி ஒரு வாரமாக முல்லை தான் கர்ப்பமாக இருக்கிறோமா இல்லையா என்று தெரியாமல் முதலில் அழுது புலம்பி வந்தார். பின்பு மருத்துவமனைக்கு சென்று கன்பார்ம் செய்து அனைவரிடமும் கூறியதும் ஒருவர் மாற்றி ஒருவர் சென்டிமென்டாக அழுது தங்களுடைய சந்தோஷத்தை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

சரியான கேள்வி
இந்த நிலையில் புது சந்தேகம் தோன்றியிருக்கிறது. அனைவரும் ஒரே அறையில் படுக்க தொடங்கி நான்கு மாதம் ஆகி இருக்கும் நிலையில் முல்லை மட்டும் எப்படி இரண்டு மாதமாக கர்ப்பமாக இருக்கிறார் என்று குறும்புக்கார நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் தற்போது வெளியான பிரமோவில் ரசிகர்களின் கேள்வியை மீனா கதிரிடம் கேட்டு விட்டார். இதை பார்த்து பலரும் மீனாவை பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனாவின் கேரக்டர் ரசிகர்கள் அதிகமாக கவர்ந்த ஒரு கேரக்டராக இருக்கிறது. என்னதான் துடுக்குத்தனமாக மீனா பேசிக்கொண்டிருந்தாலும் பல நேரங்களில் அவர் பேசுவது பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

கேள்வியை பாராட்டும் ரசிகர்கள்
வீட்டில் உள்ளவர்கள் மீனாவை ஒரு காமெடி பீஸ் ஆக பார்த்தாலும் மீனா எதார்த்த வாதியாகவும் சரியாகவும் பேசி வருகிறார். எந்த இடத்திலும் ஓவராக செண்டிமெண்டாக நடிக்காமல் நியாயமாக இருக்கிறார் என்று அவருக்கு ரசிகர்கள் கருத்து கூறி வரும் நிலையில் தற்போது மீனா பேசிய வார்த்தைக்கு பலர் மீனாவை தவிர பாண்டியன் ஸ்டோரில் வேற யாராலும் இப்படி எல்லாம் யோசிக்க முடியாது. இதற்கு கதிராலால் மட்டுமல்ல இந்த சீரியலின் இயக்குனராலும் பதிலை கூற முடியாது. ஏற்கனவே கதிர் நடத்தி வந்த ஹோட்டலையும் மூடியாச்சு. இனி அடுத்து என்ன விருப்பம் மறைக்கலாம் என்று நினைத்திருந்த நிலையில் இப்படி ஒரு சந்தோஷத்தை கொடுப்பது போன்று சீரியலில் நகர்த்துகிறார்கள். அதில் எதையும் ஆழமாக யோசிக்க கூடாது என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications