"சினிமாக்களில் அப்போ நடிக்காத காரணம்” டிடி கூறிய நெகிழ்ச்சியான பதில்.. கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள பிரபல தொகுப்பாளினி டிடி யின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சுவாரசியமாக பகிரப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு பல பேட்டிகளில் டிடி தன்னை பற்றி கூறியிருந்தாலும் இந்த வீடியோக்களில் கூறியுள்ள தகவல்களும் புதுமையாகத்தான் இருக்கிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வீடியோவில் பகிர்ந்துள்ள டிடி யின் அனுபவங்களை கேட்ட அவரது ரசிகர்கள் டிடி ஐ வாழ்த்தி கொண்டாடி வருகிறார்கள்.

மனசு தான் எல்லாமே
வெள்ளித்திரை நாயகிகளை விட பெயர்,புகழ்,திறமை என அனைத்திலும் ஒரு படி மேலிருப்பவர் சின்னத்திரை குயினாக வலம் வரும் டிடி ஆவார். தான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது 13 வயதிலேயே சின்னத்திரையில் அறிமுகமானதாக கூறும் இவர் இன்று வரை அதே பொலிவுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் சின்னத்திரை மார்க்கண்டேயன் என்று கூட இவரை சிலர் அழைப்பதுண்டு. அதற்குக் காரணம் நல்ல ஹேர் ஸ்டைலிஸ்ட்,மேக்கப் மேன்கள் தனக்கு இருந்தாலும் முக்கிய காரணம் மனசு தான் என்று கூறியுள்ளார் டிடி.

எல்லா நாளும் பொன்னாள்
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜே களை வெறும் அறிவிப்பாளர்களாக மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையை மாற்றி தொகுத்து வழங்கப்படும் நிகழ்ச்சியின் முக்கிய நபராக தொகுப்பாளர்களையும் முன்னிறுத்த வைத்த பெருமை டிடி ஐ தான் சேரும். கேமராவிற்கு முன்பாக நிற்கும் ஒவ்வொரு நாளும் தனக்கு பொன்னான நாள் தான் என்று கூறியுள்ள டிடி,நடிகை ரம்யா கிருஷ்ணன் உடனான பேட்டிக்கு தான் தயாராகிக் கொண்டிருந்த பொழுதுதான் தன்னுடைய விவாகரத்து செய்தி தனக்கு கிடைத்ததாகவும் மனதளவில் தான் உடைந்து இருந்தாலும் அந்த நேரத்தில் அதையெல்லாம் கடந்து போக அந்த ஷோவும், நான் பார்த்த வேலையின் முக்கியத்துவமும் தான் ஒரு கருவியாக இருந்தது.

வலிய போய் வேலையை நிராகரித்த டிடி
தன்னை பற்றி மேலும் சில தகவல்களை வீடியோவில் கூறியுள்ள டிடி, செலிபிரிட்டி ஆன பின்பும் தான் ஒரு தனியார் நிறுவனத்திற்கு இன்டர்வியூக்கு சென்றதாகவும், அனைத்து கட்ட இன்டர்வியூவிலும் பாஸ் ஆகி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் பெற போகிற சமயத்தில், எனக்கு இப்போதைக்கு வேலைக்கு சேரும் எண்ணம் இல்லை என்றும் கூறி அந்த நிறுவனத்தினரை ஆச்சரியப்பட வைத்ததாக கூறியிருக்கிறார்.சேனல்களில் எனக்கு வேலை இல்லை என்று கூறினாலும், என்னால் வேறு வேலைக்கு செல்ல முடியும் என்ற தன்னம்பிக்கையை பெறவே தான் அவ்வாறு சோதனை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.

எவர்கிரீன் குயின்
தான் சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலமாக ஆரம்பித்த நேரத்தில் தன்னை பலர் உடனே சினிமாவில் நடிக்க சொல்லியும், இல்லையென்றால் சின்னத்திரையில் மக்கள் உன் முகத்தை பார்த்து பார்த்து அலுத்து விடுவார்கள் என்றும் கூறியதாகவும், ஆனால் நான் சின்னத்திரையிலேயே எனக்கென்று ஒரு ராஜ்யத்தை உருவாக்கி ராணியாக இருப்பேன் என்று பதில் அளித்ததாகவும் கூறியுள்ளார். அவர்கள் அப்படி கூறிய அந்த நேரத்தில் பிரபல கதாநாயகிகளாக சினிமாவில் இருந்தவர்கள் கூட தற்பொழுது ஃபீல்டில் இல்லை ஆனால் தான் இன்றும் அன்று போலவே மக்கள் மனதில் ராணியாக இருப்பதாக பெருமையாக கூறியுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications