இந்த நிலைமையில்தான் கண்ணன் கல்யாண சூட்டிங்கில் கலந்து கொண்டாரா?... ஆச்சரியத்தில் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : பார்க்க பொறுப்பில்லாத சுட்டித்தனமான கேரக்டராக வலம் வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவண விக்ரம் (அதாங்க கண்ணன்), உடலில் வலியோடு செய்த செயல்தான் தற்போது அவருடைய ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

ஷூட்டிங்குக்கு வருவதற்கு முன்பு ஆக்சிடென்ட் நடந்துள்ளது. அதில் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல், அதை யாரிடமும் சொல்லாமல் ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்திருக்கிறாராம்.

கையில் காயத்தோடுதான் உணர்ச்சிகரமான அந்த முக்கியமான கல்யாண கலாட்டா காட்சியில் நடித்துள்ளாராம் கண்ணன். இந்த உண்மையை உடைத்துள்ளார் அவருடைய சகோதரி. இதைக் கேள்விப்பட்டதும் அதிர்ச்சியாகி விட்டார்கள் ரசிகர்கள்.

ஷாக் கொடுத்த கடைக்குட்டி சிங்கம்

ஷாக் கொடுத்த கடைக்குட்டி சிங்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பல்வேறு ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இந்த சீரியலில் தற்போது விறுவிறுப்பான, பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. தற்போது பரபரப்பான கதைக்களத்தோடு விறுவிறுப்போடு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் இங்கு சீரியலில் வந்து கொண்டிருப்பது போல ஷுட்டிங் நேரத்திலும் பல செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடிக்கடி ஜாலியான மூவ்மெண்ட்களை வெளியிட்டுவரும் சீரியல் டீமில் இபபோ ஒரு சோகமான செய்தி தான் சமூகவலைதளத்தில் வைரலாக வலம் வருகிறது. அதுவும் அந்த சீரியலில் தற்போது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து இருக்கும் கண்ணன், அதாங்க சரவணன் செய்த செயல்தான் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

சும்மா அசத்திட்டாரே

சும்மா அசத்திட்டாரே

ஏற்கனவே சீரியலில் இவர் செய்த செயல் தற்போது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்து கதைக்கு பெரும் திருப்பத்தை கொடுத்திருக்கிறது. இது அவருடைய கேரக்டர் அதில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் தற்போது நிஜத்திலும் இவர் வேற லெவல் பண்ணி இருக்கிறார். அப்படி என்னதான் இவர் பண்ணினார் என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் இவரைப்பற்றி இவருடைய தங்கை இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அதில் எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய வேலையை விட்டு விடாத என்னுடைய அண்ணன் தான் எனக்கு ஒரு இன்ஸ்பிரக்ஷன் என்று கூறியிருக்கிறார்.

எதிர்பாராத விபத்து

எதிர்பாராத விபத்து


அந்த போஸ்டில் அவர் பாண்டியன் ஸ்டோர் திருமண நிகழ்வின் படப்பிடிப்பின்போது என் சகோதரர் வாகனம் ஓட்டும் போது சின்ன விபத்து ஏற்பட்டு அதில் காயமடைந்த இருக்கிறார். ஆனால் அவர் உடல் முழுவதும் வலியோடு இருந்தாலும் நாலு மணி நேரத்திற்குள் மீண்டும் படப்பிடிப்புக்கு சென்று விட்டார். அவர் அந்த நேரத்தில் அங்கு இருந்தவர்கள் யாரிடமும் தனக்கு நேர்ந்த ஆக்சிடன்ட் பற்றி எதுவும் சொல்லவில்லை. சொல்லாமலே நடித்து முடித்து விட்டார். ஆனால் அதற்குப் பிறகு சில நாட்கள் சரியாக நடக்க முடியவில்லை. தன்னோட வலியை கூட தன்னுடைய டீமிடம் காட்டாமல் நடிப்பிலும் அவருடைய எதார்த்தம் அப்படியே இருந்தது. விபத்தில் அவரது மன உறுதியையும் பார்த்த பிறகுதான் அவரை நினைத்து பெருமைப் பட்டேன். அத்தகைய மாணிக்கம் அவர். ஹாட் ஸ்டாப் யூ அண்ணா! என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருங்கள்,என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் அவரது ரசிகர் குடும்பத்தினர் அனைவருக்கும் சிறப்பு நன்றி என்றும் நன்றிகளை தெரிவித்து இருக்கிறார்.

வலிகளை புறம்தள்ளிய நடிப்பு

வலிகளை புறம்தள்ளிய நடிப்பு

பாண்டியன் ஸ்டோர் சீரியலின் கடை குட்டி செல்லம் கண்ணனை அனைவருக்குமே பிடிக்கும். ஆனால் அவருடைய தற்போதைய திருமணத்தை பார்த்ததும் வீட்டில் இருப்பவர்கள் ரொம்பவே ஷாக் அடைந்து விட்டனர். அவர்கள் மட்டுமல்லாமல் இவர்கள் ஷாக்கானதைப்பற்றி ரசிகர்களும் கொஞ்சம் அதிர்ச்சிதான் அடைந்திருக்கிறார்கள். ஏனென்றால் இதற்கு முன்பு இந்த சீரியலில் காதல் திருமணம் நடந்தால் அதனை ஏற்றுக் கொண்டவர்கள் தற்போது ஏற்றுக்கொள்ள முடியாமல் கண்ணனை வீட்டை விட்டு வெளியேற்றுவது சிலருக்கு பிடிக்காமல் இதைப்பற்றி பல மீம்ஸ்கள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

அதிகரிக்கும் ரசிகர்கள் கூட்டம்

அதிகரிக்கும் ரசிகர்கள் கூட்டம்

மீம்ஸ் கிரியேட்டர்களால் தொடரும் ஆதரவு கண்ணனுக்கு மேலும் ஒரு சிறப்பு தான். இவருடைய நடிப்பை பார்த்து பலர் யதார்த்தமாக இருக்கிறது என்று கூறி வந்தாலும், தற்போதைய இவரது நடிப்பை பார்த்து அவருடைய தங்கை கூறியதை கேட்டு கண்ணனுக்கு தொடர்ந்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இனி சீரியல் சூரியவம்சம் படத்திற்கு டப் கொடுக்கிற மாதிரி இருக்க போகுதா இல்ல வேற ஏதாவது திருப்பம் கொடுக்கப் போகிறார்களா என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+