பாண்டியன் ஸ்டோர்ஸ்: பாண்டியனுக்கு தெரிந்த உண்மை.. கர்ப்பமாக இருக்கும் மயிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சரவணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் 2025 ஜூன் 18ஆம் தேதிக்கான எபிசோடில் தங்கமயில் தான் கர்ப்பமாக இருப்பதை சொன்னதும் மொத்த குடும்பத்தினரும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். ஆனால் சரவணன் இதை நம்பாமல் பேசிக் கொண்டிருக்க அதை கேட்டு தங்கமயில் அழுது கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதை சரவணன் பார்த்ததும் சரவணன் மகிழ்ச்சி அடைவார் என்று எதிர்பார்த்து இருக்கும்போது சரவணன் அனுப்பிய ஆடியோவை சந்தோஷமாக கேட்கிறார். ஆனால் அதில் மறுபடியும் உன் பொய்யை நம்ப நான் ஆள் இல்லை.. இன்னும் எத்தனை பொய்தான் சொல்லப்போகிறாய் என்று திட்டி இருக்கிறார்.

Pandian Stores Vijay TV

அழுத தங்கமயில்

இதை கேட்டதும் தங்கமயில் அழுது கொண்டு இருக்க, அதை கேட்டு அவருடைய அம்மா இது என்ன பேச்சு இவரு இப்படி பேசிகிட்டு இருக்கிறாரு என்று கடுப்பாகி திட்டிக் கொண்டிருக்கிறார். பிறகு தங்கமயிலை அழைத்துக் கொண்டு பாண்டியன் வீட்டிற்கு வருகிறார். அங்கு கோமதி மற்றும் ராஜு மட்டுமே இருக்க அவர்களிடம் தங்க மயில் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் என்ன விஷயம் என்று புரியாமல் கோமதி புலம்பி கொண்டிருக்கிறார்.

பாண்டியன் குடும்ப வாரிசு

அப்போது ஸ்வீட்டை கொடுத்து கோமதியிடம் இந்த பாண்டியன் குடும்பத்திற்கு வாரிசு வரப்போகுது, இந்த பாண்டியன் குடும்பத்தோட வாரிசு என் பொண்ணு வயித்துல சுமக்குறா. தங்கமயில் இப்போ கர்ப்பமா இருக்குறா என்று சொன்னதும் கோமதி சந்தோஷமாகி விடுகிறார். பிறகு சந்தோஷமாக தங்க மயிலை பாராட்டி தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார்.

கோமதி சொன்ன விஷயம்

அதோடு பாண்டியனுக்கும் வீட்டில் இருந்த எல்லோருக்கும் போன் செய்து உடனே வீட்டிற்கு வர சொல்கிறார். என்ன விஷயம் என்று தெரியாமல் மொத்த குடும்பத்தினரும் வீட்டிற்கு பதறி அடித்து வருகிறார்கள். அப்போது மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்ல எல்லோரும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். ஆனால் சரவணன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.

மனம் மாறும் சரவணன்

பிறகு அங்கிருந்து எல்லோரும் போனதும் மயில் மற்றும் சரவணன் இருவரும் மட்டும் ரூமில் தனியாக இருக்கின்றனர். அப்போது மயில் சரவணன் தன்னிடம் பேசுவார் என்று எதிர்பார்த்து இருக்க, சரவணன் நான் கர்ப்பத்தை நம்பவே இல்லை என்று கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார் அப்போது டெஸ்ட் கிட்டை மயில் சரவணனிடம் கொடுக்க, அதை பார்த்துவிட்டு இந்த கோடு கூட நீயே போட்டு இருக்க கூடாதா? என்று கேட்டதும் மயில் உடைந்து போய் அழுது கொண்டிருக்கிறார்.

சந்தோஷத்தில் குடும்பம்

அப்போது உண்மைதான் என்று நினைத்துக் கொண்ட சரவணன் மனசு மாறி தங்கமயிலை சமாதானப்படுத்தி அமைதிப்படுத்துகிறார். பிறகு தங்கமயில் ஹாலில் உட்கார்ந்து இருக்கும்போது ஆபீஸிலிருந்து வந்த மீனா மயிலுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார். அதை தொடர்ந்து ராஜி மற்றும் மீனா எல்லோரும் தங்கமயிலை சந்தோஷமாக பார்த்துக் கொள்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் அரசி குமாரிடம் நான் எங்க வீட்டில் இருந்து கொண்டு வந்த நான்கு டிரஸ் தான் எனக்கு இருக்கு, இனி எனக்கு வேற டிரஸ் எடுக்கணும் கடைக்கு போகணும் என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய, எல்லோரும் சொன்னதால் குமாரும் கடைக்கு கூட்டிக்கொண்டு போகிறார். ஆனால் கடைக்கு போன இடத்தில் நீ டிரஸ் எடுத்துட்டு இரு நான் வரேன் என்று சொல்லிவிட்டு குமாரவேல் அங்கிருந்து வீட்டிற்கு வந்து விடுகிறார். தன்னுடைய அப்பாவிடம் அந்த அரசியை கடையிலேயே விட்டுட்டு வந்துட்டேன். எடுத்த டிரஸ்ஸுக்கு பணம் கொடுக்க முடியாமல் அழுதுட்டு நிற்க போறா என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது குமாரின் ஏடிஎம் கார்டை வைத்து அரசி பில்லுக்கு பணம் கொடுக்கிறார். அப்போது தன்னுடைய போனுக்கு வந்த மெசேஜை பார்த்து பதறிப்போன குமாரவேல் அரசியை கூப்பிட போகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+