Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சன் டிவி சீரியலில் “பெரியார்”.. பூஜை செய்த நடிகை! ஆலியா மானசாவின் "இனியா"வில் மாஸான பகுத்தறிவு வசனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் புதிதாக தொடங்கி ஒளிபரப்பப்பட்டு வரும் இனியா சீரியலில் பெரியார் படத்துக்கு பெண் ஒருவர் பூஜை செய்து பெண் உரிமை குறித்த வசனம் பேசும் காட்சி சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான சன் டிவியில் ஏராளமான சீரியல்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதில் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளன.

மெட்டி ஒலி, கோலங்கள், திருமதி செல்வம் தொடங்கி பல சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் பட்டாளத்தையே குவித்தது. இந்த வரிசையில் இன்னும் பல சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன.

பிற்போக்கு கருத்துடைய சீரியல்கள்

பிற்போக்கு கருத்துடைய சீரியல்கள்

இதற்கு போட்டியாக எத்தனை தொலைக்காட்சிகளில் சீரியல்கள் வந்தாலும், நம்பர் ஒன் என்ற இடத்தை சன் டிவியே தக்க வைத்து உள்ளது. ஆனால், சினிமாக்களை விட சீரியல்களில்தான் அதிகளவில் பிற்போக்கான கருத்துக்களும், பெண் அடிமைத்தனத்தை ஆதரிக்கும், ஆணாதிக்கத்தை ஹீரோயிசமாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்று வருகின்றன.

முற்போக்கு வசனங்கள்

முற்போக்கு வசனங்கள்

சமூகத்தில் தொடர்ந்து பிற்போக்கான கருத்துக்கள் நிலவி வருவதற்கு இந்த சீரியல்களும் காரணம் என்ற விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்தான், தற்போது சினிமாக்களைபோல் சீரியல்களிலும் முற்போக்கு கருத்துக்களை பேசும் வசனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளன.

இனியா சீரியல்

இனியா சீரியல்

அந்த வகையில்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றி பிரதிபலிக்கும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் என்ற சீரியல் ஒளிபரப்பானது. இந்த நிலையில் அண்மையில் சன் டிவியில் ஒளிபரப்பை தொடங்கிய இனியா சீரியலின் காட்சி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆலியா மானசா

ஆலியா மானசா

மானாட மயிலாட நடன நிகழ்ச்சி, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி ஆகிய சீரியல்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஆல்யா மானசா மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் காட்சிதான் தற்போது டிரெண்டாகி உள்ளது.

ஆட்டோவில் பெரியார் படம்

ஆட்டோவில் பெரியார் படம்

அதில் கோயிலுக்கு முழு தேங்காயுடன் செல்லும் நடிகை பிரவீனா, "கடவுளே இனியாவுடன் சேர்ந்து ஆட்டம்போட்டதில் கோயிலுக்கு செல்ல மறுந்துவிட்டேனே! முழு தேங்காயுடன் வீட்டுக்கு போனால் கண்டுப்பிடிச்சுருவாங்களே." என்று புலம்புவார். அப்போது சாலையில் நின்றுகொண்டிருந்த ஆட்டோவில் தந்தை பெரியாரின் படம் ஒட்டப்பட்டு இருப்பதை அவர் பார்த்தார்.

பெரியார் படத்துக்கு பூஜை

பெரியார் படத்துக்கு பூஜை

உடனே ஐயா என்று கூறி சிரித்துக்கொண்டே அருகில் சென்ற பிரவீனா, தேங்காயை பெரியார் படம் அருகே உடைத்து பத்தி கொளுத்து பூஜை செய்வார். அதன் பின், "ஐயா பெரியவரே.. பெரியாரே! உங்க புத்தகத்தையெல்லாம் நான் படிச்சது இல்ல. ஆனால், ரேடியோவில் கேட்டு இருக்கேன்.

பெண் அடிமைத்தனம்

பெண் அடிமைத்தனம்

பெண்கள் அடிமையானதை பற்றி அப்பவே பேசிய ஆளாமே நீங்க. அதுவும் ஒரு ஆம்பளையாக இருந்துகொண்டு இப்படியெல்லாம் பேச பெரிய மனசு வேண்டும். அதனால்தான் உங்களை எல்லோரும் பெரியார் பெரியார் என்று கூறுகிறார்கள். உங்க புத்தகத்தை எல்லாம் படித்தால் இந்த ஆளுக்கு அடிமையாக நான் இருந்திருக்க மாட்டேன். போனதெல்லாம் போகட்டும். இனியாவது உங்க புத்தகத்தை படிக்கிறேன்.

பெரியாரின் கருத்துக்கள்

பெரியாரின் கருத்துக்கள்

'பெண்கள் சமையலரையில் இருந்து வெளியே வந்து சுதந்திரம் என்றால் என்னவென்று பார்க்கட்டும்.' என நீங்கள் சொல்லி இருக்கீங்களாமே. அது நூற்றில் ஒரு வார்த்தை. அதை நான் அனுபவித்துவிட்டேன். அந்த அருமையை ஒரு பொண்னுதான் உணர வைத்துள்ளார். அவர் உங்க வம்சத்தை வந்தவராக இருப்பார்." என்று சொல்வார்.

94 வயது வரை வாழ்ந்த பெரியார்

94 வயது வரை வாழ்ந்த பெரியார்

இதனை பார்த்த அந்த ஆட்டோ ஓட்டுநர், "சாமி இல்லை என்று சொன்னவரையே சாமி ஆக்கிவிட்டீர்களே! விட்டால் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்துவிடுவீர்களோ. இவருக்கு சாமியே பிடிக்காதுமா." என்று சொல்ல, ரவீனாவோ ஆனால், சாமிக்கு இவரை புடிக்குமே. அதான் 94 வயது வரை வாழ்ந்துட்டு போயிருக்காரு." என்று சொல்வார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+