அப்படி பாதி... இப்படி பாதி கலக்கும் பாவனா...கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: ஒரு பக்கம் சிவப்பு மறுபக்கம் வெள்ளை என கலக்கும் உடையில் மிரட்டும் பாவனாவை பார்த்து ரசிகர்கள் கலாய்க்க தொடங்கி விட்டனர்.
மாடர்ன் உடையில் செம மாடலாக வந்த அமர்ந்திருக்கும் பாவனாவை பார்த்ததும் ரசிகர்களுக்கு ஏக்கம் கூடி போச்சாம்.
மிரட்டும் பார்வையால் பார்த்தாலும் கொஞ்சமும் மிரளாமல் பாவனாவை சுற்றிவரும் ரசிகர்களால் இன்ஸ்டாகிராமில் கூட்டம் அலைமோதுகிறது.

பன்முகத்திறமை
ஆர்ஜே, சிங்கர்,ஆங்கர்.. என்று பன்முகத் திறமை கொண்ட விஜே பாவனா.. ஒரு சிறப்பான ஸ்போர்ட்ஸ் கமாண்டேடரும் கூட...மற்ற நேரங்களில் எல்லாம் அமைதியாக இருக்கும் பாவனா,ஸ்போர்ட்ஸ் சீசன்.., என்றால் ட்ரெண்டிங்கில் வந்துவிடுவார் .அப்படித்தான் தற்பொழுதும் ஐபிஎல் சீசன் இரண்டாம்பாதி துவங்கியதும் ட்ரெண்டிங்கில் வந்துவிட்டார் விஜே பாவனா...

ரேடியோ ஜாக்கியாக அறிமுகம்
ரேடியோ ஜாக்கியாக தன் வாழ்க்கையைத் துவங்கிய பாவனா.. விஜே வாக ராஜ் டிவி மூலம் களம் புகுந்தாலும், பாவனாவின் பாவனைகளை பப்ளிகில்.. பக்காவாக ரீச்சாக வைத்தது என்னவோ.. விஜய் டிவிதான். எம்பிஏ பட்டதாரியான பாவனா ஒவ்வொரு துறையாக படிப்படியாக முன்னேறி வந்திருந்தாலும், பெரும்பாலான விஜே கலை போல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி.. பத்தோடு பதினொன்றாக.. இருக்க விரும்பவில்லை. விஜே துறையிலே தனித்து தெரிய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தார். அதற்கேற்றார்போல் அவருக்கு வரமாய் அமைந்ததுதான் 'ஸ்டார் ஸ்போர்ட்ஸ்' தமிழ் சேனல்.

விளையாட்டு வர்ணனையாளர்
பல விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்வதோடு சரி... விளையாட்டு வர்ணனையாளர் ஆவதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. விஜே துறையில் தனித்து தெரிய வேண்டும் என்ற ஆசையில் இருந்த பாவனாவிற்கு விஜே விற்கும் வர்ணனையாளருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை என்பதால்.. வர்ணனையாளர் துறையை தேர்ந்தெடுப்பது மிகவும் எளிதான ஒரு விஷயமாக இருந்தது. வெளிநாட்டில் மட்டுமே பெண் விளையாட்டு வர்ணனயாளர்கள் இருந்ததால்,தமிழ்நாட்டின் முதல் பெண் விளையாட்டு வர்னையாளராக பாவனா செயல்பட்டது இவரை தனித்துக் காட்ட ஆரம்பித்தது.

பெண்களுக்கு பெருமை
அதுவரை ஸ்போர்ட்ஸ் கமாண்டேடர் ஸ்டுடியோவில் ஆண்கள் முகத்தையே பார்த்து பழகியிருந்த விளையாட்டு ரசிகர்களுக்கு, பாவனாவின் விளையாட்டு வர்ணனை செய்யும் ஸ்டைல் .. ஒரு புது அனுபவமாக இருந்தது. அந்த விளையாட்டிலேயே ஊறியவர் போல் அந்த விளையாட்டைப் பற்றிய விவரங்களை இவர் புட்டு..புட்டு.. வைக்கும் ஸ்டைலுக்கு என்றே குறிப்பிடத்தக்க பார்வையாளர்கள் உருவாகினர். விஜே பாவனா அதுவரை அவர் பண்ணியிருந்த பழைய நிகழ்ச்சிகளை எல்லாம் மறந்து..இவர் முழு நேர விளையாட்டு வர்ணனையாளர்..! என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு ஸ்போர்ட்ஸ் சேனலில் அவரது பெர்பாமன்ஸ் இருந்து வருகிறது. தற்பொழுது ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தமிழில் மட்டுமே கமாண்டேடராக கலக்கி வரும் விஜே பாவனா..எல்லா ஸ்போர்ட்ஸ் சேனல்களிலும்.. எல்லா மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்து கலக்கி..தமிழ் பெண்களுக்கு பெருமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கலாம்...












Click it and Unblock the Notifications