குடும்பத்தால் ஒதுக்கப்பட்ட பாரதி எடுத்த முடிவு.. அடங்காமல் வெண்பா போடும் நாடகம்..இதை எதிர்பார்க்கலையே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட பாரதி வில்லத்தனமாக அனைவரையும் மனதிற்குள்ளேயே திட்டிக் கொண்டிருக்கிறார்.
ரோஹித்தோடு திருமண நடைபெற்று விட்டதால் இனி இந்த குழந்தையே வேண்டாம் என்று வெண்பா புது வில்லத்தனத்தை தொடங்கி இருக்கிறார்.

பாரதியை ஒதுக்கிய குடும்பத்தினர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாரதியின் வீட்டில் அனைவரும் சோகமாக இருக்கின்றனர். அப்போது அஞ்சலி வந்து என்ன சமைக்கட்டும் என்று கேட்கிறார் அதற்கு அனைவரும் எங்களுக்கு பசிக்கவில்லை வேண்டாம் என்று மாறி மாறி கூறிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் பாரதி அங்கே வருகிறார் பாரதியை கண்டதும் அனைவரும் முகத்தை திருப்பிக் கொண்டு ஒவ்வொருவராக கிளம்புகின்றனர். நாங்கள் உன்னுடைய முகத்தை பார்த்து பேசுவதற்கு தயாராக இல்லை என்று குடும்பத்தினர் அனைவரும் பாரதியை வெறுப்பாக பார்த்துவிட்டு கிளம்பி விடுகின்றனர். ஹேமாவிடம் பேச பாரதி சென்றபோது ஹேமா முகத்தைக் கூட பார்க்காமல் நான் பாட்டி இடம் படுக்கப் போகிறேன் சித்தப்பா என்று அகிலனிடம் சொல்லிவிட்டு கிளம்பி விட்டார் இதனால் வேதனையோடு தவித்துக் கொண்டு பாரதி அங்கே நிற்கிறார்.

கண்ணம்மாவின் தவிப்பு
அடுத்த பக்கம் கண்ணம்மாவின் வீட்டில் லட்சுமி மற்றும் கண்ணம்மா இருவரும் பெட்டில் படுத்து இருக்கின்றனர். அப்போது லட்சுமி ஒரு பக்கம் பாரதியை திட்டியதை நினைத்துக் கொண்டிருக்கிறார் .அதே நேரத்தில் கண்ணம்மாவும் வெண்பா கலுத்தில் பாரதி தாலி கட்ட இருந்ததை நினைத்து கோபமாக எழுந்து உட்கார்ந்து விடுகிறார். இருவரும் தூக்கம் வராமல் இருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். கண்ணம்மா, லட்சுமி நீ குழந்தை இப்படி கோபப்படக்கூடாது நீ படுத்து தூங்கு என்று லட்சுமியை சமாதானப்படுத்தி தூங்க வைக்கிறார். கண்ணம்மாவால் பாரதியின் இந்த செயலை தாங்கிக்கொள்ள முடியாமல் தூக்கம் வராமல் நடந்து கொண்டிருக்கிறார்.

நடந்ததை நினைத்து வருத்தத்தில் வெண்பா
அடுத்ததாக வெண்பா ரூமுக்குள் இருந்து காலையில் நடந்த நிகழ்வுகளை நினைத்துக் கொண்டிருக்கிறார். கண்ணம்மா வந்து தாலியை பிடுங்கி தூர வீசியதும் ரோஹித் தனக்கு தாலி கட்டிதை நினைத்து கோபத்தில் இருக்கிறார். அப்போது சர்மிளா வந்து உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது . ரோஹித் கட்டண தாலி உன் கழுத்துல இருக்கு. இனிமேல் புரிஞ்சி நடந்துக்கோ என்று கூறி பால் சொம்பை எடுத்துக் கொடுத்த ரோஹித் ரூமுக்கு செல்லுமாறு கூறிவிட்டு கிளம்புகிறார். ரோஹித் அறையில் வெண்பாவுக்காக பெட்டில் பூ அலங்காரம் செய்து கொண்டு காத்திருக்கிறார்.

அடங்காத வெண்பாவின் புது திட்டம்
வெண்பா பால் சொம்பை தூக்கிக்கொண்டு மாடிப்படியில் இறங்கும்போது இந்த குழந்தையை நான் பாரதி என்னுடைய கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்பதற்காகத்தான் சுமந்து கொண்டு இருந்தேன். இதை பயன்படுத்தி மிரட்டி பாரதியை தாலி கட்ட வைக்கலாம் என்று ஆனால் பாரதியே எனக்கு இல்லை என்று ஆகிவிட்டது இனி எதற்கு இந்த குழந்தை என்று நினைத்து அப்படியே படிக்கட்டை பார்க்கிறார். கடைசியில் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்த போல கத்தி வயிறு வலிக்கிறது என்று அலறிக் கொண்டிருக்கிறார். வெண்பாவை பார்த்து ஓடி வந்து ஷர்மிளா ரோஹித் எல்லாரும் பதறி போய் வெண்பாவை ஹாஸ்பிடலுக்கு தூக்கிக்கொண்டு ஓடுகின்றனர். இந்த பக்கம் பாரதி, நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். அதுக்காக எல்லாரும் என்ன ஒரு குற்றவாளி மாதிரி நிக்க வச்சு தலை குனிய வச்சுட்டாங்க. அந்த கண்ணம்மாவை இதே மாதிரி நிக்க வச்சு நான் கேள்வி கேட்பேன். டி என் ஏ டெஸ்ட் வரட்டும் அவளுக்கு இருக்கு என்று வில்லத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார் .இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications