சன் டிவியை விட்டு விலகிய பூவரசி.. இப்படி ஒரு காரணமா.. ரசிகர்களுக்கு கூறிய பீலிங் செய்தி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலின் கதாநாயகி திடீரென விலகியுள்ளார்.
பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகிய கதாநாயகி ராதிகா பிரீத்தி தன்னுடைய ரசிகர்களுக்கு உருக்கமான செய்திகளை கூறியுள்ளார்.

திடீர் விலகல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒன்றாக வலம் வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவக்கப்பட்ட இந்த சீரியல் பல எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் உள்ள கதிர் பூவரசி ஜோடி ரசிகர்களின் பேவரைட் ஆன ஒன்றாக இருந்து வருகிறது. இளம் ஜோடியாக இவர்கள் இருவரும் வலம் வருவதை பார்ப்பதற்காகவே பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தற்போதுதான் மீண்டும் கதிர் மற்றும் பூவரசி ஜோடி இணைந்திருக்கும் நிலையில் இந்த சீரியலில் திடீர் விலகல் நடைபெற்றிருக்கிறது.

பூவரசி வெளியிட்ட போஸ்ட்
ஏற்கனவே பூவே உனக்காக சீரியலில் ஆரம்பத்தில் கதிர் கேரக்டரில் நடித்து வந்த அருண் திடீரென்று விலகிவிட்டார். அவருக்கு பதிலாக முகமது அசின் கதிராக தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் சீரியலின் கதாநாயகி பூவரசி வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது பூவரசி கேரக்டரில் நடித்து வந்த ராதிகா ப்ரீத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் உருக்கமான செய்திகளை ரசிகர்களுக்கு வெளியிட்டிருக்கிறார். அதை பார்த்ததும் பல ரசிகர்கள் ஏன் இந்த திடீர் முடிவு என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

உருக்கமான வார்த்தைகள்
ராதிகா ப்ரீத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கனத்த இதயத்தோடு பூவேஉனக்காக சீரியலில் இருந்து விலகுகிறேன். இந்த அற்புதமான வாய்ப்பளித்த சன் டிவிக்கு என்றென்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன். எனது தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் எனது ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் இதை செய்திருக்க முடியாது. எனது வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் நீங்கள் என்னோடு இருப்பீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். மீண்டும் ஒரு முறை நன்றி என்று கூறியிருக்கிறார்.

சீரியல் வாய்ப்பு
ராதிகா ப்ரீத்தியின் தந்தை ஒரு ராணுவ வீரராம். அதனால் அவரது கல்லூரிக்கு முன்னர் இவர் இரண்டு படங்கள்தான் பார்த்து உள்ளாராம். இந்த படங்கள் அவரை சினிமாவில் நடிக்க ஆர்வத்தை தூண்டவே கல்லூரியில் படிக்கும்போதே போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலம் சினிமா வாய்ப்பு தேடி உள்ளார். ஒரு கன்னட படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் படமும் கம்பெனியும் சரியில்லாததால் அதில் நடிக்காமல் மீண்டும் வாய்ப்பு தேடி அலைந்து உள்ளார். அந்த நேரத்தில் தான் இந்த சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தற்போது இந்த சீரியலை விட்டு விலகி இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அவருக்கு மிகுந்த வேதனை இருப்பதாக கூறியிருக்கிறார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications