வீட்டு வேலை செய்தால் அதை மட்டும் தான் செய்ய வேண்டுமா??தலைவர் பதவிக்கு தகுதி இல்லையா??
சென்னை: தாமரை விஷயத்தில் பிரியங்காவின் கருத்து பலரையும் கடுப்படைய செய்திருக்கிறது.
என்ன பிரியங்கா இப்படி ஒரு வார்த்தையை சொல்லி விட்டார் என்று அவருடைய ரசிகர்களே புலம்பி வருகின்றனர்.
வீட்டு வேலையைத் அழகாக செய்வதற்குத்தான் தாமரை சரி தலைவர் பதவிக்கு தகுதி அல்ல என்று இவருடைய கருத்தை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

தொடரும் பிரச்சனைகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு பிரச்சனை ரசிகர்களை கவர்ந்து விடுகிறது. அந்த மாதிரிதான் நேற்றைய டாஸ்க் விஷயத்தில் பிரியங்கா மற்றும் தாமரையின் வாக்குவாதங்கள் பலருடைய கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. இந்த மாதிரி பிரச்சனைகள் ஏற்கனவே பல சீசன்களை தொடர்ந்து கொண்டிருந்தாலும் இந்த சீசனிலும் இதே பிரச்சனை வரும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை போல. ஏற்கனவே முதல் சீசனில் இந்த விளையாட்டைப் பற்றி தெரியாத ஒரு சிலரை சக போட்டியாளர்கள் ஒதுக்கித் தள்ளி அவர்கள் இந்த வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு மனரீதியாக பிரச்சனைகள் ஏற்பட்டது போலத்தான் இப்போதும் தாமரை விஷயத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று தாமரையின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

தாமரையை சுற்றும் அனுதாப வலை
ஐந்தாவது சீசனில் அதிகமான போட்டியாளர்கள் சினிமா மற்றும் மாடல் துறைகளில் பல உயர்ந்த இடங்களில் இருந்தாலும், தாமரை கிராமத்தில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் பரிச்சயமான ஒரு நபராக இருந்து இந்த போட்டியில் கலந்து கொண்டு இருக்கிறார். அதனால் ஆரம்பத்திலிருந்தே இவர் மீது அனுதாப வலைகள் கொஞ்சம் அதிகமாகத்தான் வீசி வருகிறது. இவர் என்ன செய்தாலும் இவர் கிராமத்துப் பெண்ணாக, அதிகமாக விவரம் தெரியாமல் இப்படி செய்து கொண்டிருக்கிறார் என்று இவருக்கு பலர் சப்போர்ட் செய்து கொண்டிருக்கும் வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமே போட்டியாளர்களுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டுதான் இருந்தனர்.

பிரியங்காவின் கருத்து
நாட்கள் செல்லச் செல்ல தாமரை செல்வியும் இந்த விளையாட்டை நன்றாக புரிந்து கொண்டு தன்னுடைய பாணியில் தனித்துவமாக விளையாட்டை தொடங்கிவிட்டார் என்று இவருடைய ரசிகர்கள் இவருக்கு சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, ஆரம்பத்தில் அவருக்கு ஆறுதலாக இருந்த பிரியங்கா தற்போது இவரிடத்தில் நடந்துகொள்ளும் முறை சரியில்லை என்று அவருடைய ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த வார தலைவர் பதவிக்கான போட்டிகளில் தாமரை செல்வியை பற்றி பிரியங்கா பேசியது பலருடைய வெறுப்பையும் சம்பாதித்து இருக்கிறது.

பிரியங்காவுக்கு எதிரான கமெண்ட்கள்
தாமரை இந்த வாரம் பல பிரச்சனைகளை மனதில் வைத்து இருப்பதால் அவரால் தலைவர் பதவியில் சரியாக செயல்பட முடியாது என்று கூறிக் கொண்டு இருந்த பிரியங்கா, அடுத்ததாக தாமரை வீட்டை அழகாக வைத்திருக்கிறார். சமையல் செய்வதில் கவனமாக இருக்கிறார் ஆனால் அவரால் தலைவர் பதவியில் இந்த வாரம் சிறப்பாக செய்ய முடியாது என்று தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் அப்போ வேலை செய்பவர்கள் கடைசி வரைக்கும் வேலை செய்து கொண்டுதான் இருக்கவேண்டுமா??அவர்கள் தலைவர் பதவிக்கு ஆசைப்படக்கூடாது அப்படி தானே என்று பிரியங்காவிற்கு எதிராக கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications