உருக்கமாக காதலை வெளிகாட்டிய தயாரிப்பாளர் ரவீந்தர்.. வேற லெவலில் அறிவுரை கூறும் ரசிகர்கள்
சென்னை: திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் தன்னுடைய காதல் மனைவியான சின்னத்திரையை சார்ந்த மகாலட்சுமிக்கு உருக்கமாக சமூக வலைத்தளத்தில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
திருமணம் முடிந்த இரண்டு நாளில் இப்படி ஒரு பதிவா..!!?? என்று ரசிகர்கள் கலாய்த்து கொண்டிருந்தாலும் ரவீந்தரின் காதலை பார்த்த சிலர் வாழ்த்துக்களை கூற தவறவே இல்லை .
சமூக வலைத்தள பக்கத்தை பார்த்தாலே தற்போது இரண்டு நாட்களாக சின்னத்திரை சேர்ந்த மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரரின் திருமண போட்டோக்கள் தான் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மகாலட்சுமிக்காக ரவீந்தர் எழுதிய கவிதைகள் தான் சிங்கிள்ஸ்ஸை கொஞ்சம் கொதிப்படைய செய்திருக்கிறதாம்.

மறைத்து வைத்த காதல்
திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் இரு தினங்களுக்கு முன்பு சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுடைய திருமணம் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தி இதுவரைக்கும் சமூக வலைத்தளத்தில் யாருக்குமே தெரியாமல் இருந்த நிலையில் திடீரென இவருடைய திருமண புகைப்படங்கள் பலருக்கும் வியப்பை தான் கொடுத்திருந்தது. இந்த நிலையில் திருமணம் முடிந்த பிறகு கணவன் மனைவி இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாற்றி மாற்றி காதல் மழைகளை பொழிகின்றனர். இந்த மழை நீரோடு பல சிங்கிள்ஸ் பொறாமை கண்ணீர் சிந்தி வருகிறார்களாம்.

பிக் பாஸ் ரிவ்யூ
தயாரிப்பாளர் ரவிந்தர் என்று சொன்னால் டக் என்று நினைவிற்கு வரவில்லை என்றாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்பவர் என்று சொன்னால் பலருக்கும் டக்கென தெரிந்துவிடும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனையும் இவர் அலசி ஆராய்ந்து தன்னுடைய தனித்துவமான நக்கல் நையாண்டித்தனத்தோடு ரிவ்யூ செய்யும் விதத்தை பார்ப்பதற்காக பலர் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள். அதுவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்ட சீசனை இவர் வறுத்தெடுத்ததை யாராலும் மறக்கவே முடியாது என்றும் வனிதா விஷயத்தில் மட்டும் ரவீந்தர் காரசாரமாக இருந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வியப்பை கொடுத்த திருமணம்
ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவருக்குமே ஏற்கனவே திருமணம் முடிந்திருந்தாலும் இவர்கள் இருவரும் அந்த திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்று அதிலிருந்து விலகி விட்டனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் மனதிற்கு ஒத்துப் போனதால் இவர்கள் இருவரும்
மன மகிழ்ச்சியோடு திருமணத்தில் இணைந்து இருக்கின்றனர். இவர்களுடைய திருமணத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். திரை துறையில் இருந்த பலருக்கும் கூட இவர்களுடைய திருமணம் வியப்பாகத்தான் இருந்து வந்துள்ளது. அழகையோ வேறு எதையும் பார்க்காமல் இவர்கள் திருமணம் நடந்துள்ளதாக ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அடங்காத காதல் மழை
திருமணம் முடிந்த மறுநாளே மகாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவீந்தரை டேக்ஸ் செய்து, "வாழ்க்கை அழகாக இருக்கிறது, நீ செய்தாய்...என் புருஷா...என்று குறிப்பிட்டிருந்தார் " இதற்கு நானும் சலித்தவர் அல்ல என்று ரவீந்தர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், "வாழ்க்கைக்கு அன்பு வேண்டும்...காதலுக்கு மகாலட்சுமி வேண்டும்.. ஐ லவ் யூ பொண்டாட்டி.."என்று பதிவிட்டு இருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் உங்களுடைய காதலை வீட்டிற்குள்ளே வைத்து விடுங்கள். சமூக வலைத்தளத்தில் ஏற்கனவே உங்கள் மீது பலர் பொறாமையில் புழுங்கி கொண்டிருக்கிறார்கள் அதனால் கண்ணு பட்டுவிட போகிறது என்று இவர்களுக்கு அன்பு அறிவுரைகளை கூறி வருகிறார்கள்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications