நெகிழ்ச்சியாய் மகிழ்ச்சியை காட்டிய புகழ்... வாழ்த்தும் பிரபலங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகைச்சுவை நடிகர் ஆன புகழ் தன்னுடைய திருமணத்திற்கு வாழ்த்து கூறிய திரை பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் உருக்கமாக நன்றி தெரிவித்திருக்கிறார்.

திடீர் திருமணம் செய்து இருந்தாலும் ரசிகர்கள் கொடுத்த பேராதரவையும் வாழ்த்துக்களையும் பார்த்து புகழ் ஒரு நிமிடம் திகைத்துத்தான் போயிருக்கிறாராம். அதனால் தான் இந்த மாதிரி உருக்கமான போஸ்ட்டா?? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு இருக்கின்றனர்.

என்னதான் பிரபலம் அடைந்திருந்தாலும் ரசிகர்களை மதிக்கும் குணம் புகழிடம் அதிகமாகவே இருக்கிறது. அதனால் தான் ரசிகர்களுக்கும் புகழ் நன்றி தெரிவித்து இருக்கிறார் என்று புகழுடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிரபலமான நிகழ்ச்சி

பிரபலமான நிகழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளான கலக்கப்போவது நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய திறமையை பலருக்கும் வெளிக்காட்டிய புகழ் அந்த நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு பலரையும் மகிழ்வித்து இருந்தார். ஆனால், அப்போது கூட அவருக்கு கிடைக்காத பெயரும் புகழும் அதற்குப் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக கிடைத்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் புகழ், ரம்யா பாண்டியனுடன் ஜோடி சேர்ந்து செய்த சேட்டைகள் அனைவரையும் ரசிக்க வைத்திருந்தது. முதல் சீசனில் பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளின் மனதிலும் புகழ் இடத்தை பிடித்து விட்டார்.

திடீர் திருமணம்

திடீர் திருமணம்

குக் வித் கோமாளி முதல் சீசனில் கிடைத்த வெற்றியின் காரணமாக இரண்டாவது சீசனிலும் புகழ் தொடர்ந்து கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிகளில் இவருக்கு கிடைத்த ரசிகர்களின் பட்டாளத்தை பார்த்து தற்போது புகழுக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் வாய்ப்புகளுக்காக ஏங்கி எவ்வளவோ சோதனைகளை தாண்டி வந்த புகழ் தற்போது வாழ்க்கையின் உயரத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் தற்போது திருமணம் செய்து கொண்டது அவருடைய ரசிகர்களிடம் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறதாம்.

நெகிழ்ச்சியான பதிவு

நெகிழ்ச்சியான பதிவு

புகழ் எப்போதும் ஜாலியான கேரக்டராக அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவருடைய திருமண வாழ்க்கையிலும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவருடைய தீவிரமான ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். புகழ் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் எளிமையாக திருமணத்தை முடித்துவிட்டார் என்று ரசிகர்கள் பலர் வருத்தத்தில் இருந்தாலும் வாழ்த்துக்களை கூற தவறுவதில்லை.

குவியும் வாழ்த்துக்கள்

குவியும் வாழ்த்துக்கள்

புகழுடைய திருமண போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வந்ததும் வந்தது ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைபிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி போட்டோக்களை அதிகமாக ஷேர் செய்து சமூக வலைத்தளத்தை திணறடித்து வருகின்றனர். இந்த நிலையில் தனக்கு வாழ்த்துக்கள் கூறிய அனைத்து பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இவருடைய வாழ்க்கையில் வெற்றிக்கு துணையாக இருந்த நலம் விரும்புகளுக்கும் உருக்கமாகவும் நெகிழ்ச்சியாகவும் நன்றியினை தெரிவித்து இருக்கிறார். இதை பார்த்ததும் அவருடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர்கள் வரிசை கட்டிக் கொண்டு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+