அலைமோதும் கூட்டத்தில் மாட்டிக்கொண்ட புகழ்... எந்த சூழ்நிலையிலும் மாறாத எளிமை
சென்னை: விஜய் டிவி புகழ் கலந்துகொண்ட, ஒரு ஹோட்டல் திறப்பு விழாவிற்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து சமூக வலைதளங்களில் பலவிதமான கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான பழசை மறக்காத புகழ் எங்கு சென்றாலும் பெரிதளவு பந்தா இல்லாமல் எளிமையாகவே கேஷுவலாக அனைவருடன் பழகுவதால் நல்ல பெயரை பெற்று இருக்கிறார்.

புகழின் வளர்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் காமெடி ஷோக்களில் பலவற்றில் பத்தோடு பதினொன்றாக பல நிகழ்ச்சிகளில் வந்து தன் திறமையை காட்டியிருந்தாலும், அதன்மூலம் கிடைக்காத பெயரையும் புகழையும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னுடைய பெர்பாமன்ஸ் மூலம் பெற்றவர் விஜய் டிவி புகழ் ஆவார். மிக எளிமையான குடும்பப் பின்னணியை சேர்ந்தவரான இவர் இத்தனை வருடங்கள் சினி ஃபீல்டில் இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பின்னால் தான் இவரது கேரியர் புதிய கார் வாங்கும் அளவிற்கு கொஞ்சம் உயர ஆரம்பித்து இருக்கிறது.

பழசை மறக்காத புகழ்
என்ன இருந்தாலும் பழசை மறக்காத புகழ் எங்கு சென்றாலும் பெரிதளவு பந்தா இல்லாமல் எளிமையாகவே கேஷுவலாக அனைவருடன் பழகுவதால் கொஞ்சம் நல்ல பெயரை பெற்று இருக்கிறார்.ஏதேனும் புதிய கடை, ஷோரூம் போன்றவற்றை திறந்தால்,அந்த நேரத்தில் பிரபலமாக இருக்கும் சில செலிபிரிட்டிககளை வைத்து திறந்து அதன் மூலம் கடைகளுக்கு விளம்பரத்தையும் தேடிக்கொள்வது தற்பொழுது ஃபேஷனாகிவிட்டது.

அதிகரித்த கூட்டங்கள்
செலிபிரிட்டிகளும் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு, எந்த கடையாக இருந்தாலும் வந்து இறங்கி ஒரு ரிப்பனை கட் செய்து கூட்டத்தைப் பார்த்து ஹாய் சொல்வது வழக்கமாகி விட்டது. மிகவும் பிரபலமான சினிமா பிரபலங்கள் இந்த மாதிரியான திறப்பு விழாவிற்கு வந்தால் மட்டுமே கூடிய கூட்டங்கள் தற்பொழுது கொஞ்ச நாட்களாக எந்த செலிபிரிட்டி வந்தாலும் கூட்டமாக சென்று வேடிக்கை பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது.
Recommended Video

பழசை மறக்காத பந்தா இல்லாத புகழ்
அப்படித்தான் தற்பொழுது விஜய் டிவி புகழ் திருச்சியில் பவுன்சர் புடைசூழ பந்தாவாக வந்து இறக்கி தங்கள் உணவகத்தை திறக்க வைத்து தெறிக்க விட்டிருக்கிறது ஒரு பிரபல தனியார் உணவகம்.விஜய் டிவி புகழ் ஐ பார்க்க கூடிய கூட்டத்தை பார்த்து கடை உரிமையாளர் புகழும் மகிழ்ச்சி அடைந்தாலும், கொரனா காலத்தில் இப்படியான கூட்டத்தை அரசு கண்டு கொள்ளாதது குறித்து பலர் தங்கள் வருத்தத்தை தெரிவித்திருக்கின்றனர். இன்னமும் சினிமா மோகத்தில் இருந்து தமிழகம் மீளவில்லையே!!!???என்று பலர் தங்கள் புலம்பல் களையும் பதிவிட்டுள்ளனர். அடிப்படையிலே புகழ் நல்ல மனிதர் என்றும் இன்றைக்கும் பழசை மறக்காத பந்தா இல்லாத மனிதர் என்றும் அவருக்கு ஆதரவு கொடுப்பதில் என்ன தவறு என்று ஒரு கூட்டமும் எதிர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications