பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று நான் சம்பாதித்தது இதுதான் ஓபன் ஆக பேசிய குயின்சி...இப்படி உளறிட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த குயின்சி அந்த நிகழ்ச்சியில் நடந்ததை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

வாக்குகள் அடிப்படையில் கடந்த வாரத்தில் கடைசி இடத்தில் இருந்த குயின்சி பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு முதல் முறையாக அவர் பேசிய வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

கணிக்க முடியாத கேரக்டர்

கணிக்க முடியாத கேரக்டர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக குயின்சி அறிமுகமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது குயின்சி யின் கேரக்டர் என்னவென்று யாராலும் புரிந்து கொள்ள முடியாத வகையாக தான் இருந்தது. ஆரம்பத்தில் எதுவுமே செய்யாமல் மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களும் குயின்சியின் மீது போர் தொடுத்தனர். ஆனால் முதல் முறையாக இவர் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இவர் விளையாட்டு வேறு விதமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனாலும் ஒவ்வொரு முறையும் இவர் நாமினேஷனில் வரும்போது வேறு விதமாக மாறிவிடுகிறார். ஆனால் நாமினேஷன் வரவில்லை என்றால் எதுவுமே செய்யாமல் இருக்கிறார் என்று பலர் இவர் மீது குற்றம் கூறிக்கொண்டு இருந்தனர்.

கவர்ந்த உடை அலங்காரம்

கவர்ந்த உடை அலங்காரம்

குயின்சியை பிக் பாஸ் வீட்டிற்குள் பார்த்த ரசிகர்கள் பலர் இவர் மஞ்சுமா மோகன் மாதிரி இருக்கிறார் என்று இவரை குறித்து குறிப்பிட்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல் குயின்சிக்காக அதிகமாக ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ்களை போட்டி போட்டு திறந்து வைத்தனர். கோயம்புத்தூரை சொந்த ஊராகக் கொண்ட குயின்சி அதிகமாக புடவை மற்றும் தாவணியில்தான் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் சரி அல்லது அவர் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோக்களிலும் சரி இடம்பிடித்து இருக்கிறார். நடிகையாக வேண்டும் என்ற ஆசை வருவதற்கு அவருடைய பாட்டி தான் காரணம் என்று இவருடைய அறிமுக வீடியோவில் கூட கூறி இருப்பார்.

அப்பாவாக மாறிய ராபர்ட்

அப்பாவாக மாறிய ராபர்ட்

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஒவ்வொரு சீசனிலும் ஒரு சிலர் உறவு முறைகளை தொடங்கி விடுவார்கள். அந்த மாதிரி தான் குயின்சியை ராபர்ட் மாஸ்டர் தன்னுடைய மகள் என்று ஆறுதலும் அரவணைப்பும் கொடுத்து வந்தார். யாரிடமும் பேசாத பல ரகசியங்களை கூட தன்னுடைய மகளாக நினைத்து வந்த குயின்சியிடம் பேசிக் கொண்டிருந்தார். ராபர்ட் மாஸ்டர் என்னதான் ரச்சிதாவின் பின்னாடியே சுற்றிக் கொண்டிருந்தாலும் என்னுடைய மகள் என குயின்சிக்கு அதிகமாக சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருந்த ராபர்ட் மாஸ்டர் வெளியே வந்த பிறகு கூட குயின்சிக்கு வாக்கு செலுத்தும் படி ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

 சம்பாதித்த உறவு

சம்பாதித்த உறவு

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு குயின்சி இந்த வாரம் வெளியே வந்திருக்கிறார். வந்ததும் முதல் ஆளாக ராபர்ட் மாஸ்டரை சந்தித்து இருக்கிறார். இவர்கள் இருவரும் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று நான் சம்பாதித்தது என்றால் அது ராபர்ட் மாஸ்டரின் அன்பை தான். அவர் என்னை குழந்தை என்று சொல்கிறார் ஆனால் உண்மையில் அவர்தான் ஒரு குழந்தை போல, பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது கூட நான் பலமுறை சொன்னேன். என்னை மகள் என்று சொல்வதை வெளியில் வைத்துக் கொள்ளலாம் உள்ளே விளையாடவதற்கு வந்திருக்கும் விளையாடை மட்டும் செய்வோம் என்று, ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. எப்போதுமே என் மீது தனி கவனம் செலுத்தி வந்தார். என்னுடைய கைகளில் அலர்ஜி வந்தபோது கூட அவர்தான் எனக்கு டைமுக்கு வந்து ஆயில் எடுத்து அப்ளை செய்ய சொல்லி கொண்டு இருப்பார். பிக் பாஸ் வீட்டிற்குள் பலர் நடித்துக் கொண்டிருந்தாலும் ராபர்ட் மாஸ்டர் உண்மையாக குழந்தை போலவே இருந்தார் என்று அவரைக் குறித்து பெருமையாக பேசி இருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+