குழந்தை பிறந்த 2 மாதத்தில் ஆல்யா மானசா செய்த காரியம்..பாத்து சூதானம் என பதறும் ரசிகர்கள்
நம் ஊரில் குழந்தை பிறந்தாலே பச்சை உடம்பு பார்த்து பத்திரமாக இருக்கணும் என்று சொல்வார்கள். ஆனால் நடிகை ஆல்யா மானசாவோ 2 மாதத்தில் ஜாலி ட்ரிப் கிளம்பி விட்டார்.
சென்னை: ஜில்லென்ற வாட்டர் ரைடில் கூலாக விளையாடிக்கொண்டிருக்கிறார் ஆல்யா மானசா. நம் ஊரில் குழந்தை பிறந்தாலே பச்சை உடம்பு பார்த்து பத்திரமாக இருக்கணும் என்று சொல்வார்கள். ஆனால் நடிகை ஆல்யா மானசாவோ 2 மாதத்தில் ஜாலி ட்ரிப் கிளம்பி விட்டார்.
Recommended Video
ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ஆல்யா மானசா குழந்தைகளுக்காக தற்போது நடிப்புக்கு தற்காலிகமாக முழுக்கு போட்டிருக்கிறார். சீரியல் நடிப்பில் இருந்து விலகிய பிறகு தற்போது முழு நேர இல்லத்தரசியாகவே மாறிவிட்டார்.
நடன நிகழ்ச்சியில் திறமை காட்டினாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பாவாக நடித்து சின்னக் கண்களில் க்யூட் எக்ஸ்பிரசன்களை காட்டி ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தவர் ஆல்யா மானசா.

சஞ்சீவ் ஆல்யா மானசா ஜோடி
அவரது கணவர் சஞ்சீவ் சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்தவர். ரீல் ஜோடிகளாக வலம் வந்த இருவரையும் இணைத்து வைத்தது ராஜா ராணி டிவி சீரியல். திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடிகளாகவும் ரசிகர்களிடம் வாழ்த்து பெற்றனர். டிவி சீரியல் நடிப்பு போக சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஆல்யா மானசா, சஞ்சீவ் இருவரும் தங்களின் வீட்டில் நடப்பதை இன்ஸ்டா பக்கத்திலும் யுடுயூப் சேனலிலும் பதிவிட்டு வருகின்றனர்.

ராஜா ராணி 2 சீரியல்
முதல் குழந்தை ஐலா பிறந்த உடன் நடிப்பில் இருந்து பிரேக் எடுத்த ஆல்யா சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜா ராணி 2 சீரியல் மூலம் ரீ என்ட்ரி ஆனார். சஞ்சீவ் விஜய் டிவியின் வேறு ஒரு சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியல் முடியவே, சன் டிவியில் கயல் சீரியலில் எழில் ஆக நடித்து வருகிறார்.

இரண்டாவது குழந்தை
ஆல்யா மீண்டும் கர்ப்பமானாலும் பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு வரை ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். கடந்த மாதம்தான் அவருக்கு பையன் பிறந்தது. அதையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ஆல்யா மானாசா. பையனுக்கு அர்ஸ் என்று பெயர் வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ளன.

ஜில்லுன்னு ஒரு பயணம்
சென்னையில் இருந்து போர் அடித்துப்போகவே அடிக்கிற வெயிலுக்கு இதமாக சில தினங்களுக்கு முன்பு கோத்தகிரிக்கு குடும்பத்தோடு டூர் கிளம்பி விட்டார் ஆல்யா. பனிக்காற்றில் பயணிப்பதை வீடியோவாகவும் பதிவிட்டிருந்தார். சுற்றுலா முடிந்து தீம் பார்க்கில் ஆட்டம் போட்டிருக்கிறார்.

சொந்த ஊரில் உற்சாகம்
நான் இப்போது சொந்த ஊரில் இருக்கிறேன் என்று கோவையில் மகள் ஐலா உடன் யானைகளோடு இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ஆல்யா மானசா. அதைப்பார்த்த ரசிகர்கள் நல்லா என்ஜாய் பண்ணுங்க என்று கமெண்ட் போட்டிருக்கின்றனர்.

வாட்டர் ரைடில் ஜாலி
கோவை மேட்டுப்பாளையம் அருகில் இருந்த தீம் பார்க்கில் குடும்பத்தோடு என்ஜாய் செய்திருக்கிறார். ஜில்லென்ற வாட்டர் ரைடில் கூலாக ரொம்பவே உற்சாகமாக விளையாடும் வீடியோவை தனது யுடூயூப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ஆல்யா மானசா.

பச்சை உடம்பு சூதானம்
நம் ஊரில் பொதுவாகவே குழந்தை பெற்ற பெண்களை பச்சை உடம்பு என்று சொல்வார்கள். பத்திய சாப்பாடு சாப்பிட வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். சுடுதண்ணீர்தான் குடிக்க வேண்டும் என்று பாதுகாப்பாக இருக்கச் சொல்வார்கள். ஆல்யாவோ குழந்தை பிறந்து 2 மாதத்திற்குள் வாட்டர் ரைடில் விளையாடுகிறார். அதற்கு குடும்பத்தினரும் சப்போர்ட் செய்கிறார்களே வாழ்த்துக்கள் என்று ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். பார்த்து சூதானம் என்று பதறுகின்றனர் ரசிகர்கள். அதே நேரத்தில் நல்லா என்ஜாய் பண்ணுங்க என்றும் உற்சாகப்படுத்தியுள்ளனர் ரசிகர்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications