பாட்டு வாத்தியார் ஆன ராஜு...ஆனால் பாட்டுதான் அல்லல்படுகிறது
சென்னை: பல திறமைகள் இருக்கிற ராஜூ தற்போது பாட்டுவாத்தியார் ஆகவும் கலக்கி வருகிறார்.
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் மதுவுக்கு கொஞ்சலான பாடலை சொல்லிக்கொடுக்கும் திறமையே திறமைதான்.
நீங்க ஒன்னு சொல்லித் தந்தால் நான் வேறு விதமாக தான் சொல்லுவேன் என்று பிடிவாதமாக பாடலை கொலை பண்ணிக் கொண்டிருக்கிறார் மதுமிதா.

ஐந்தாவது சீசன் தொடக்கம்
ஒரு வீட்டுக்குள் 100 நாட்கள் சும்மாவே இருப்பது எவ்வளவு கடினம் என்பதை தற்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் நிரூபித்து வருகிறார்கள். இந்த வீட்டிற்குள் இவர்கள் சமையல் செய்து கொண்டு வீட்டை பெருக்கி துடைத்து சுத்தமாக வைத்துக் கொண்டு இருந்தாலும், மீதம் இருக்கும் நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தான் அடிக்கடி கூட்டம் சேர்ந்து அரட்டை அடித்து வருகின்றனர். இதைப் பார்ப்பதற்காக பலர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தவம் கிடக்கின்றனர். இதனாலேயே இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்களில் வெற்றி பெற்று தற்போது ஐந்தாவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

பாட்டுக் கச்சேரி
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் டாஸ்க்கள் ஒருபுறமென்றால் சேட்டைகள் மறுபுறம் ரசிகர்களை ரசிக்க தூண்டிவிடுகிறது. தற்போதும் கூட அப்படித்தான் ஒரு பாடல் கச்சேரியே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதைப் பார்த்து பலர் கவலைகளை மறந்து சிரித்து வருகின்றனர். இந்த சீசனில் பல புதுமுகங்கள் அறிமுகமாகி இருந்தாலும் அதில் ஒரு சிலருடைய முகங்கள் ரசிகர்களின் மத்தியில் நன்றாக பதிந்துவிட்டது. அதில் ஒருவர்தான் மதுமிதா. இவர் பேசும் கொஞ்சலான தமிழை கேட்பதற்காகவே பலர் இவர் எப்போது ப்ரோமோவின் வருவார் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
Recommended Video

ராஜு வாத்தியார்
ரசிகர்களின் ஆசையை தற்போது பிக்பாஸ் நிறைவேற்றியிருக்கிறது. இன்றைய ப்ரோமோவில் மதுமிதாவின் பாடல் பலரையும் புல்லரிக்க வைத்து இருக்கிறது. இவருடைய குரலால் ஒரு பாட்டு பாடினால் நன்றாக இருக்கும் என்று நேற்று இமான் அண்ணாச்சி இவருக்கு பாட்டு சொல்லிக் கொடுக்க தொடங்கி விட்டார். இந்த நிலையில் இன்றும் இமான் அண்ணாச்சி இவருக்கு பாட்டு சொல்லிக் கொடுக்க, அதற்கு இடையில் வந்த ராஜு நான் வருகிறேன் என்று வாத்தியாராக இவருக்கு மாறிவிட்டார். ராஜூ சொல்லிக்கொடுக்கும் பாட்டை தன்னுடைய இஷ்டத்திறகு மாற்றி பாடி இவர் தற்போது ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

கலக்கும் பாட்டுகள்
அடிக்கடி ப்ரோமோவில் அழுகை சீன்கள் வந்து கொண்டிருந்தால் ரசிகர்கள் வெறுத்து விடுவார்கள் என்று தெரிந்துதான் பிக் பாஸ் இப்படி எல்லாம் ப்ரோமோ போட்டு ரசிகர்களை கவர்கிறதா என தெரியவில்லை. தற்போது அப்படித்தான் நடந்திருக்கிறது. ப்ரோமோவில் மதுமிதாவை பார்த்ததும் ரசிகர்கள் குக் வித் கோமாளியில் ஒரு சுனிதா போல, பிக்பாஸ் ஐந்துக்கு ஒரு மதுமிதா என்று கூறி வருகின்றனர். எப்படியோ இன்று இரவு பல சோகங்கள் எபிசோட் ஆக வந்தாலும் இவருடைய காமெடி பாடல் ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுக்கும் என்று பலர் கூறி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications