ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா தம்பதிக்கு யார் கண்ணு பட்டுச்சோ! அடுத்தடுத்து பஞ்சாயத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணத்துக்கு பிறகு ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் தொடர்ந்து இணையத்தில் பேசுபொருளாகி வருகிறார்கள். இருவரும் தங்களுடைய காதல், திருமணம் குறித்து பகிரும் விஷயங்கள் ஒருபக்கம் கவனம் பெற்றாலும், சில கருத்துகள் சர்ச்சையாகி ரசிகர்களின் விமர்சனத்துக்கும் உள்ளாகின்றன. அந்த வகையில், விஜய் தேவரகொண்டாவின் பேச்சு சர்ச்சையான நிலையில், ராஷ்மிகா பேசியிருக்கும் ஒரு விஷயம் இப்போது கவனம் ஈர்த்திருக்கிறது.

விஜய் தேவரகொண்டா பேச்சு

சமீபத்தில் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா இருவரும் தங்களுடைய காதல் மற்றும் திருமணம் பற்றி பல விஷயங்களை பகிர்ந்துகொண்டனர். அப்போது, ராஷ்மிகா கல்யாணம் செய்து கொள்ளுவோம் என 100 முறைக்கும் மேல் கேட்டதாகவும், சுமார் ஒரு வருஷமாக தொடர்ந்து வலியுறுத்திய பிறகுதான் தான் சம்மதித்ததாகவும் விஜய் தேவரகொண்டா கூறியிருந்தார்.

Rashmika Mandanna Vijay Deverakonda Bollywood Tollywood Tamil cinema

இந்த பேச்சுதான் இணையத்தில் விவாதத்தை கிளப்பியது. ராஷ்மிகா தன்னை காதலித்ததையும் திருமணம் செய்துகொள்ள விரும்பியதையும் விஜய் ஒரு பெருமையை போல பேசுவதாகச் சிலர் விமர்சித்தனர். மனைவியின் காதலை இப்படி பொதுவெளியில் விவரிப்பது தேவையா? என்றும் கேள்வி எழுப்பினர். இந்த சர்ச்சை ஒருபக்கம் இருக்க, அதே நிகழ்ச்சியில் ராஷ்மிகா பேசிய மற்றொரு விஷயமும் இப்போது கவனம் பெற்றுள்ளது.

Rashmika Mandanna Vijay Deverakonda Bollywood Tollywood Tamil cinema

ராஷ்மிகா பதிலடி

இந்தி திரைப்படங்களான அனிமல், தம்மா, காக்டெய்ல் 2 ஆகிய படங்களில் ராஷ்மிகா பேசிய இந்தி உச்சரிப்பு குறித்து சமூக வலைதளங்களில் கேலி, கிண்டல்கள் எழுந்திருந்தன. இதை பற்றி கரண் ஜோஹர் கேட்டபோது, ராஷ்மிகா, "என் பேச்சில் தென்னிந்திய உச்சரிப்பு இருப்பதாக கூறுவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஏனென்றால், நான் தென்னிந்தியாவை சேர்ந்தவள். எனவே, என் பேச்சில் அந்த உச்சரிப்பு இருப்பது இயல்பானதுதான். அதை தவறாகப் பார்ப்பதுதான் முட்டாள்தனம் என்று அவர் கூறியிருக்கிறார்.

Rashmika Mandanna Vijay Deverakonda Bollywood Tollywood Tamil cinema

மேலும், எனது திரைப்பயணத்தின் தொடக்கத்திலிருந்தே நடிப்பு, மொழி, உச்சரிப்பு என பல விஷயங்களுக்காக விமர்சனங்களையும், கிண்டல்களையும் சந்தித்து வருகிறேன். ஆனால்என்னை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. ஒரே மொழியில் மட்டும் கவனம் செலுத்தாமல் அனைத்து மொழிகளிலும் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.

திருமணத்துக்கு பிறகு இருவரும் பேசும் ஒவ்வொரு விஷயமும் இணையத்தில் விவாதமாகும் சூழலில், தனது உச்சரிப்பை குறித்த விமர்சனங்களுக்கு ராஷ்மிகா இப்படி நேரடியாக பதிலளித்திருப்பது கவனம் பெற்றுள்ளது. மொழி என்பது ஒருவரின் பின்னணியையும் அடையாளத்தையும் பிரதிபலிப்பது, அதைக் கேலிக்குரியதாக பார்ப்பது ஏன் என்று அவருக்காக ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+