• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிறந்தநாளுக்கு கண்ட வார்த்தைகளால் திட்டி சொதப்பல் வீடியோ வெளியிட்ட கனி

Google Oneindia Tamil News

சென்னை: பிறந்தநாளுக்கு யாராவது இந்த மாதிரி எல்லாம் திட்டி வாழ்த்து சொல்வார்களா என்று அனைவரும் ஷாக் ஆகுற மாதிரி 'காரக்குழம்பு' கனி மிரட்டியிருக்கிறார்.

ரீல்ஸ் வீடியோ என்றாலும் உறுதியாய் வெயிட்டா பால் என்று பார்ப்பவர்கள் எல்லாம் பதறிப்போய் வருகிறார்கள்.

நள்ளிரவில் வீடு புகுந்த 4பேர்.. திமுக முன்னாள் எம்பியின் பேரன் வெட்டிக்கொலை.. பின்னணியில் மருமகன் நள்ளிரவில் வீடு புகுந்த 4பேர்.. திமுக முன்னாள் எம்பியின் பேரன் வெட்டிக்கொலை.. பின்னணியில் மருமகன்

எல்லாம் சரிதான் ஆனால் கடைசியாக திட்டுவதை கூட சொதப்பிய கனியை பார்த்துதான் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அப்படி என்ன சம்பந்தம்

அப்படி என்ன சம்பந்தம்

என்னடா..!! இந்தக் கனி மேடம்... திடீர்ன யார்..? யார்..? கூட யோ ரீல்ஸ் பண்றாங்களே!! என்று பெரும்பாலான நெட்டிசன்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றனர். விஜய் டிவி ரக்ஸனுக்கும், 'குக் வித் கோமாளி' புகழ் கனிக்கும் விஜய் டிவி னு ஒரு லிங்க் இருக்கு, மத்தவங்களுக்கு கனிக்கும் என்ன சம்பந்தம்?... சம்மந்தம்னா.. சாதா சம்பந்தம் இல்லிங்க!! ரத்த சம்பந்தம்.

காதல் கோட்டை அகத்தியன்

காதல் கோட்டை அகத்தியன்

இயக்குனர் அகத்தியன் என்று கேட்டால் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் தல அஜித்தின் 'காதல் கோட்டை' படத்தின் இயக்குனர் அகத்தியன் என்று விளங்க சொல்லி கேட்டால், முகம் தெரிகிறதோ இல்லையோ.. பெயர் அளவில் அனைவருக்கும் நினைவில் வந்து விடுவார். அந்த அளவிற்கு தல அஜித்தின் கேரியரில் காதல் கோட்டை ஒரு முக்கியமான மைல்கல். காதல் கோட்டை மூலம் அஜித்தின் வாழ்க்கை கோட்டைக்கு பாதை அமைத்துக் கொடுத்தவர் இயக்குனர் அகத்தியன்.

சினிமா குடும்பம்

சினிமா குடும்பம்

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் இயக்குனர்களில் ஒருவரான அகத்தியன் அவர்களின் மகள்கள் தான்.. விஜி, கனி, நிரஞ்ஜனி,தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சினிமா குடும்பங்கள் ஆன சிவாஜி, விஜயகுமார்,சிவக்குமார், போன்றவர்களை போன்று இவர்கள் குடும்பமும் மிகப்பெரிய சினிமா குடும்பமாக தான் இருக்கிறது. ஏற்கனவே இவரது மகள் 'விஜி' என்ற விஜயலட்சுமி 'சென்னை28' படம் மூலம் அறிமுகமாகி, மேலும் சில படங்களிலும் நடித்து பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் வந்து நன்றாகவே பிரபலமாகிவிட்டார்.தற்போது கூட சர்வைவர் ரியாலிட்டி ஷோக்களிலும் இவர் பார்டிசிபேட் செய்து வருகிறார்.

காரக்குழம்பு கனி

காரக்குழம்பு கனி

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் 'குக் வித் கோமாளி' புகழ் கனி அவர்களைப் பற்றி பெரிய அளவிற்கு அறிமுகம் தேவையில்லை, ஏனென்றால் விஜய் டிவியின் குக் வித் கோமாளி மற்றும் அதைத் தொடர்ந்து வந்த சில ரியாலிட்டி ஷோக்களில் பங்குபெற்று சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமின்றி இணையவாசிகள் இடமும் நன்கு பரிச்சயமானவர் ஆகிவிட்டார் கனி. 'காரக்குழம்பு'கனி என்று அடைமொழியோடு அறிமுகப்படுத்தும் அளவிற்கு நன்றாகவே பேமஸ் ஆகிவிட்டார். இவரது கணவர் தான் இயக்குனர் திரு அவர்கள்... 'தீராத விளையாட்டுப் பிள்ளை, நான் சிகப்பு மனிதன், சந்திரமெளலி' போன்ற திரைப்படங்களை இயக்கியவர்.

காதல் திருமணம்

காதல் திருமணம்


சின்னத்திரை ரசிகர்களுக்கு பெரும்பாலும் 'நிரஞ்ஜினி' பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் நடித்தது என்னவோ.. ஒரே ஒரு படம்தான்.. தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற துல்கர் சல்மானின்.. 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் விஜய் டிவி ரக்ஸனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். நிரஞ்ஜனி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும் பொழுது இயக்குனர் தேசிங்கு பெரியசாமி அவர்கள் கேமராவுக்கு முன்னால் 'கட்' சொல்லிவிட்டு.. கேமராவுக்கு பின்னால் காதல் 'ஆக்ஷனில்' இறங்கி விட்டார் போல...அது கொஞ்ச நாட்களுக்கு முன்பு திருமணத்தில் வந்து முடிந்திருக்கிறது.

சொதப்பல் ட்ரீம்ஸ்

சொதப்பல் ட்ரீம்ஸ்

அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தை இயக்குவார்? தளபதி விஜய் படத்தை இயக்குவாரா?என்றுபேசப்படும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி அவர்களின் பிறந்தநாளுக்கு மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து கொண்டாடியுள்ளனர்.. இயக்குனரின் ஃபர்ஸ்ட் பட செகண்ட் ஹீரோ நம்ம விஜய் டிவி ரக்ஸனும் கலந்துகொண்டு செளிப்ரேட் செய்திருக்கிறார். பங்ஷனில் கனியும், ரக்ஸனும பண்ண ரீல்ஸ் வீடியோ,இன்ஸ்டாகிராமில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அகத்தியன், திரு, தேசிங்கு பெரியசாமி, போன்ற மூன்று இயக்குனர்கள் குடும்பம்னா சும்மாவா என்ன!!??

English summary
After Cook with Comali, Kani has been participating in many of Vijay TV's shows. Moreover, he has opened a YouTube channel in which he is showing off his culinary art to the world. Fans have been congratulating them on seeing this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X