இப்படி துள்ளி...அப்படி மாறிய ரோஷினி...பின்னாடியே சுற்றும் ரசிகர்கள்
சென்னை: வசீகரா என்னும் பாட்டுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களின் மனதை வசீகரிக்கும் ரோஷ்னி ஹரிப்ரியனை பார்த்ததும் வச்ச கண் வாங்காமல் பார்த்து ரசிகர்கள் திணறுகிறார்கள்.
Recommended Video
அலைபாயும் கூந்தலை பார்த்து ரசிகர்களின் மனதும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறதாம்.
எந்த மாதிரி பார்த்தாலும் பேரழகியாக தெரியும் கண்ணம்மாவுக்கு சீரியலை தாண்டியும் சமூக வலைத்தளத்திலும் ஆதரவு பெருகுகிறது.

அழகுக்கும் பொறாமைதான்
அடடா அழகே பொறாமைப்படும் பேரழகியாக தன்னுடைய சுருள் முடியை அங்கேயும் இங்கேயும் ஆட்டி ஆட்டம் போட்டிருக்கும் ரோஷ்னி ஹரிப்ரியனை பார்த்ததும் ரசிகர்களின் மனதும் துள்ளிக்குதித்து விளையாடிக் கொண்டிருக்கிறதாம். அழகு என்றால் இதுதானோ என்று ரசிகர்கள் பலர் கவிஞர்களாக மாறி கவிதை பாட ஆரம்பித்து விட்டார்கள். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கருப்பு பேரழகியாக இவரை பார்த்ததும் ரசிகர்களின் மனமும் கலங்கித்தான் போய்விட்டதாம். சீரியலில் தான் இவர் அசத்தும் கதாநாயகி என்றால் நிஜத்திலும் தான் ஒரு சூப்பர் ஹீரோயினி தான் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய வீடியோக்கள் ஒவ்வொன்றும் சமூகவலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத இவருடைய அழகை பார்த்த ரசிகர்கள் லைக் பட்டனை அழுத்தாமல் இருக்க முடியவில்லையாம்.

பிரபலமான கண்ணம்மா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் தெரியாத ரசிகர்களே இருக்க மாட்டார்கள். சீரியலின் ரசிகர்களுக்கு நன்றாகவே பரிச்சயமான நபர்தான் கண்ணம்மா. இவர், சீரியல் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த சீரியலில் நடிப்பதற்கு காரணம் இவருடைய இன்ஸ்டாகிராம் போஸ்ட் தான். இன்ஸ்டாகிராம் மூலமாக இவருக்கு சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அந்த இடத்தை மறக்காத இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். சீரியல்தான் இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகி விட்டார் என்று பார்த்தால் சமூக வலைத்தளத்தில் நான் சளைத்தவரல்ல என்று நிரூபித்து வைத்துக்கொண்டிருக்கிறார்.

ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கலாமே
பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து பல எபிசோடுகளை கடந்து விட்டாலும் இந்த சீரியலின் கதையை ரசிகர்கள் இன்னமும் கலாய்த்து கொண்டுதான் வருகிறார்கள். ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து முடிக்க வேண்டிய விஷயத்தை முடிக்காததால் இந்த சீரியல் இவ்வளவு நாட்கள் இழுத்துக் கொண்டே இருக்கிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருந்தாலும், சீரியல் ரசிகர்கள் விறுவிறுப்பு குறையவில்லை என்று ஒவ்வொரு நாளும் இந்த சீரியலுக்காக காத்திருக்கின்றனர். அதுவும் கண்ணம்மாவை பல பெண்கள் தங்களுடைய ரோல்மாடலாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கணவரால் பிரச்சனைகள் ஏற்பட்டால் வீட்டிலேயே அழுது கொண்டு இருக்காமல் தன்னுடைய சுய மரியாதையை காத்துக் கொண்டு இவர் படும் கஷ்டங்களை பார்த்ததும் பெண் ரசிகர்களின் பெரும் ஆதரவை இவர் பெற்றுக் விட்டார்.

அழகு அள்ளுதே
சீரியலில் இவர் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் பல ரசிகர்கள் இவர் உண்மையிலேயே திருமணம் முடிந்து குழந்தைகளுக்கு அம்மாவாக இருப்பார் என்று எதிர்பார்த்து இருப்பார்கள் போல, ஆனால் சமூக வலைத்தளத்தில் இவருடைய லேட்டஸ்ட் வீடியோவை பார்த்ததும் அசந்து போய் விட்டார்கள். இவ்வளவு இளமையான ரோஷ்னி சீரியலில் கண்ணம்மாவாகவும், சமையல் அம்மாவாகவும் தத்ரூபமாக மாறிவிட்டார். இதைப் பார்த்து கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து இருந்தாலும் இந்த எக்ஸ்ட்ரா அழகு என்னமோ பண்ணுகிறது என்று இவருடைய அழகான வீடியோவை மீண்டும் மீண்டும் ரசித்து வருகிறார்கள். என்னதான் இவர் சீரியலில் புடவை கட்டிக்கொண்டு தேவதையாக வந்தாலும் மாடர்ன் உடையில் எந்த மேக்கப்பும் இல்லாமல் வெள்ளித்திரை நடிகைகளுக்கு சவால் விடும் இவருடைய க்யூட் அழகுதான் பலருக்கும் ஃபேவரைட் ஆக மாறிவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications