டீலிங் படியலயா? ரூ.4 கோடி செட்டை விஜய்க்கு தானம் தந்த நடிகர் தனுஷ்? அதென்ன நயன்தாரா மட்டும்: பிரபலம்
சென்னை: தனுஷின் புதிய படத்திற்காக போடப்பட்ட 4 கோடி செட்டில், ஜனநாயகன் படத்தின் ஒரு பாடல் காட்சி படமாக்க விரும்பினார்கள். இதற்கு தனுஷூம் ஒப்புக் கொண்டாராம்.. மற்ற நடிகர்களுக்கு தராமல் விஜய்க்கு மட்டுமே தந்துள்ளதற்கு காரணம், அவர் மீதான அன்பு , மரியாதைதானாம்.. அதேசமயம், விஜய்க்கு செட்டை தானம் தரும் தனுஷ், நயன்தாரா விவகாரத்தில் மட்டும் ஏன் கோர்ட் வரை செல்ல வேண்டும்? சந்திரமுகி பட சீன்களை நயன்தாரா பயன்படுத்தியது சரியா? என்பது போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி கருத்து தெரிவித்துள்ளார்.
Behind Talkies என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி, "சமீப காலமாகவே நயன்தாரா மீது அனைவரும் குறி வைப்பதாக சொல்ல முடியாது..

எந்த நிறுவனத்துக்கும், எந்த விஷயத்துக்கும் உரிமையாளர் உண்டு. அப்படி சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி வாங்கியே பிறர் பயன்படுத்த வேண்டும்.. இதுதான் சட்டமும் கூட.. அதுதான் நியாயமும்கூட. அனுமதி இல்லாமல் எதையும் பயன்படுத்துவது ஏற்புடையதும் இல்லை.
சந்திரமுகி சீன்
சந்திரமுகி விவகாரத்தில் ஏபி இண்டர்நேஷனல் வழக்கு தொடுத்துள்ளது. ஆனால், நயன்தாராவின் ஆவணப்படம் வந்து பல மாதங்களாகிவிட்டது. தனுஷ் வழக்கு போட்டபோதே, அதனை ஏபி இண்டர்நேஷனலும், சந்திரமுகி பட சீன்கள் ஆவண படத்தில் இருப்பதையும் பார்த்திருப்பார்கள்.. அன்றே அவர்கள் சட்டப்போராட்டத்தை துவங்கியிருக்க வேண்டும்.
இவ்வளவு தாமதமாக வந்து, சந்திரமுகி சீன்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. சட்டவிரோதமாக சீன்களை பயன்படுத்தியிருப்பதால், அதற்கான நஷ்ட ஈடு கேட்கலாம்.. அது ஓரளவு நியாயமாகவும் இருக்கும்..
டீலிங் படியவில்லையா?
ஆனால், அந்த ஆவணப்படம் வந்து இத்தனை மாதத்தில், அனைவரும் பார்த்து முடித்த பிறகு, கண்டெண்ட்டை நீக்க சொல்லியிருப்பதன் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியவில்லை..
ஒருவேளை, நீதிமன்றம் போவதற்கு முன்பு, ஆஃப்தி ரெக்கார்டாக, நயன்தாராவிடம் பேரம் பேசியிருக்கலாம்.. அதுசம்பந்தமான பேச்சுவார்த்தை நீண்டுகொண்டே போய், இவர்கள் எதிர்பார்த்தது நடக்காமல், இப்போது நீதிமன்றத்துக்கு சென்றிருப்பதாக நினைக்கிறேன்.. எப்படியிருந்தாலும், யார் உரிமையாளரோ, அவர்களின் அனுமதியை பெறுவதே சரியானது.
ரூ.4 கோடி செட் தானம்
ரூ.4 கோடி செட்டை கலைப்பதற்கு முன்பு, அதில் விஜய்யின் ஒரு பாடல் ஷூட்டிங்கிற்கு தந்ததாக கூறப்படுகிறது.. விஜய்க்கு மட்டும் ரூ.4 கோடி செட்டை தானமாக தரும் தனுஷ், நயன்தாராவுக்கு நானும் ரவுடிதான் படத்தின் 3 செகண்ட் வீடியோவை தந்திருக்கலாமே? என்றும் கேட்கிறார்கள். ஆனால், தனுஷ் ரூ.4 கோடி செட்டை விஜய்க்கு தந்ததாக சொல்வதே தவறு.. அப்படி ஒரு விஷயமே நடக்கவில்லை..
ஏனென்றால் பையனூரில் உள்ள ஃபெப்சி ஸ்டுடியோவில்தான் பெரும்பாலான ஜனநாயகன் பட சீன்கள் ஷூட்டிங் எடுக்கப்பட்டுள்ளது.. 90 சதவீதம் படம் இங்குதான் எடுத்துள்ளனர்.. ஜனநாயகன் படத்துக்காகவே பிரத்யேகமான செட் போட்டு ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. எனவே விஜய்க்கு தனுஷ் படத்தின் செட் பயன்படுத்தப்படவில்லை.
சம்பந்தமேயில்லை
தனுஷ் பட செட் உண்மையிலேயே பயன்படுத்தப்பட்டது கூலி படத்துக்குதான்.. அதாவது ராயன் படத்துக்கு இவர்கள் போட்ட செட்டை, அதை சற்று மாற்றி, கூலி படத்துக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்..
அதேசமயம், இதெல்லாம் ஒன்றும் புதிய விஷயமும் இல்லை.. ஏனென்றால், ராயன் படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ், கூலி படத்தின் தயாரிப்பாளரும் சன் பிக்சர்ஸ்தான்.... இதனால், தங்களுடைய படத்துக்கு போட்ட செட்டை, தங்களுடைய படத்துக்கே பயன்படுத்தி கொள்கிறார்கள்.. இதற்கும் தனுஷ், விஜய், நயன்தாராவுக்கும் சம்பந்தமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications