ரூ.200 கோடி.. சிவகார்த்திகேயனுக்கு வந்த ஆசை.. காசை திரும்ப வாங்காமல் என்ன பண்ணுவாங்க?: பிரபலம் பளிச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல தயாரிப்பார்களே நஷ்டத்தைதான், சினிமாவில் அதிகம் இதுவரை பார்த்துள்ளார்கள்.. பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாமே தமிழ் சினிமாவில் காணாமல் போயிருக்கின்றன என்று கூறியிருக்கும் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, சிவகார்த்திகேயன் தயாரிப்பு குறித்தும் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "அமரன்" படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல் வெளியானது..

Television Sivakarthikeyan Rs200 crore 200

முழு சம்பளம் இல்லை

2 நாட்களுக்கு முன்பு, அமரன் படத்தின் 100வது நாள் விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "எனது படங்கள் வெளியாகும் முந்தைய நாள், அன்புச்செழியன் அலுவலகத்தில் தான் இருப்பேன். சம்பளம் கொடுக்காமல் விடுவது ஒருபுறம் என்றால், பாதி சம்பளத்தையும் கொடுக்காமல் விட்டுவிடுகிறார்கள்..

ஆனால், அமரன் படத்துக்காக சம்பளம் சரியாக வந்துவிட்டது சார். படம் வெளியாவதற்கு 6 மாதத்திற்கு முன்பே முழுசம்பளத்தையும் கொடுத்து, அதை தாண்டி மரியாதையும் தெளிவாக கொடுத்தார்கள். இப்படியிருக்கும் ஒரு நிறுவனத்தைப் பார்ப்பது ரொம்பவே அரிது" என்று கமல்ஹாசன் முன்னிலையில் பேசியிருந்தார்.

தயாரிப்பாளர்களின் வலி, வேதனை

சிவகார்த்திகேயன் இதை கேஷூவலாக கூறியிருந்தாலும், இதுகுறித்து, பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபுவிடம் Realone Media என்ற சேனல் சார்பாக கேள்வி எழுப்பப்பட்டது..

தொடர்ந்து தயாரிப்பாளர்களின் வலியையும், வேதனையையும் மீடியாக்களில் பதிவு செய்து வருபவர் பாலாஜி பிரபு.. பிரபல தயாரிப்பாளரின் மகனாகவும் மட்டுமல்லாமல், தானே ஒரு தயாரிப்பாளராகவும் உள்ளதால், தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை வேதனையுடன் கூறிவருகிறார். அந்தவகையில், சிவகார்த்திகேயன் குறித்த பேச்சுக்கும் தன்னுடைய கருத்தை விரிவாகவே கூறியிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:

"ஏன் பணத்தை திருப்பி வாங்கணும்? கொடுத்த பணத்தை திரும்ப வாங்குகிறார்கள் என்றால், அதற்கு என்ன அர்த்தம்? உங்களுக்கு மார்க்கெட் இருக்கிறது என்று நம்பி படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம்.. பஞ்சாயத்துதான் காரணம்.

அன்றைய காலத்தில் தயாரிப்பாளர்கள், பட ரிலீசுக்கு முன்பு, லேப்பில் உட்கார்ந்திருந்தார்கள்.. ஆனால், இன்றைய காலத்திலல், பைனான்சியர்கள் ஆபீசில்தான் தயாரிப்பாளர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.. இந்த நிலைமை தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.

சிவகார்த்திகேயனுக்கு வந்த ஆசை

அது இது எது என்று விஜய் டிவியில் ஷோ செய்து கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கும், மற்றவர்களை போல சினிமா ஆசை வந்தது.. பிறகு, மெரினா, மனம் கொத்திபறவை படங்களில் நடித்தார். இதனால் அவர் பேசப்பட்டார். தனுஷின் எதிர்நீச்சல் படத்தில் நடிக்க துவங்கினார்.. பின்னர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பெரிய அளவில், எல்லா தரப்பு மக்களிடமும் அவருக்கு ரீச் கிடைத்தது.

ரெமோ, டாக்டர், ஹீரோ, மிஸ்டர் லோக்கல் என்று வரிசையாக படங்கள் நடித்தாலும், இதில் வெற்றிப்படங்களும் உண்டு, தோல்விப்படங்களும் உண்டு. பிறகு திடீரென சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் ஆகணும் என்ற ஆசைவந்துவிட்டது.. இவர் நடிகர்தானே? சினிமாவுக்கு வந்தே 12 வருஷம்தானே ஆகுது? நடிகராக பிரபலமாகி, தயாரிப்பாளர்களும் நல்ல சம்பளம் பேசுகிறார்கள். சந்தோஷமாக நடிச்சுத்தந்துட்டு போகலாமே? அப்பறம் ஏன் படம் தயாரிக்க வரணும்?

தயாரிப்பாளர்கள் என்பவர்கள், தயாரிப்பு என்றால் என்பதை தெரிந்து கொண்டு வருபவர்கள்.. ஆனால், 13 வருஷத்துக்கு முன்னாடி, கொஞ்சம் கொஞ்சம் படிப்படியாக மேலேறிவந்த வந்த சிவகார்த்திகேயனுககு தயாரிப்பு என்றால் என்ன? என்று தெரியுமா?

நம்மை வைத்து தயாரிப்பாளர் எடுத்தால், பல கோடி ரூபாய் அவருக்கு லாபம் கிடைக்கிறது.. அதற்கு நாமே தயாரித்தால், டபுள் லாபம் எடுக்கலாமே என்பதுதான் சிவகார்த்திகேயனின் எண்ணம்.. இது நல்ல விஷயம்தான், ஆனால், அந்த படம் நஷ்டமடைந்தால்? அந்த நஷ்டத்திலும் பங்கெடுக்க தயாரா?

ரூ.200 கோடி நஷ்டம்

ஒரு படம் எடுத்து 30 கோடி நஷ்டம், அடுத்த படத்தில் 40 கோடி நஷ்டம்.. ஒரு கட்டத்துக்கு மேல் சிவகார்த்திகேயனுக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகிவிட்டது. 200 கோடி கடன் வாங்கினால், பைனான்சியர்கள் சும்மா விடுவார்களா? கடனை எப்படி அடைப்பீர்கள்? உங்களை வைத்து படம் எடுக்கும்போது, அந்த பைனான்சியர்களுக்கு வட்டி கட்ட வேண்டியிருக்கிறது.. அதனால்தான் கொடுத்த பணத்தை வாங்கிட்டு போகிறார்கள்.

பிரபல தயாரிப்பாளர்களே நஷ்டத்தைதான் அதிகம் இதுவரை பார்த்துள்ளார்கள்.. பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாமே தமிழ் சினிமாவில் காணாமல் போயிருக்கின்றன.

ரஜினி சொல்லும் மாற்றங்கள்

மிஸ்டர் லோக்கர் படத்தில் கதை மாற்றம் செய்தது யார்? சிவகார்த்திகேயன்தான் கதை மாற்றம் செய்தார்.. ஹீரோ என்ற படத்திலும் கதை மாற்றங்களை செய்தது சிவகார்த்திகேயன்தான்.. அப்படியென்றால் கதை கேட்கும்போதே சரியாக கேட்க வேண்டும்தானே?

எப்படியும் புதுமுக டைரக்டர்களை அறிமுகப்படுத்தப்போவதில்லை.. ஏற்கனவே ஹிட் படங்களில் நிரூபித்த டைரக்டர்களை அழைத்து, அவர்களிடம் கதையை கேட்கும்போதே, என்னென்ன மாற்றங்கள் தேவை என்பதை சொல்லிவிடலாமே?

ரஜினி சார் அப்படித்தான் செய்வார்.. தனக்கு தேவையானதை முன்கூட்டியே சொல்லி, அதற்கேற்ப அவைகள் இருந்தால் மட்டுமே ஷூட்டிங் செல்வார்.. அப்படி ஷூட்டிங் சென்றுவிட்டால், அதற்கு பிறகு எதிலும் தலையிட மாட்டார். ஆனால், இங்கே அப்படி இல்லை..அப்பா மகனை வழிநடத்துவதா? மகனை அப்பா வழிநடத்துவதா? " என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+