Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.3300 கோடியில் உருளும் அரவிந்த் சாமி! அன்று பண்ணை வீட்டில் வெறும் 10 ரூபாய்! சபாஷ் "கலெக்டர்" சார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரவிந்த்சாமி வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து படிப்படியாக உயர்ந்தவர். விருப்பமில்லாமல் நடிக்க வந்தாலும், விதி இவரை மீண்டும் சினிமாவுக்குள்ளேயே இழுத்து வந்துவிட்டது.. இன்றுவரை முன்னணியில் வலம் வருகிறார். பட வாய்ப்புகள் குறைந்தபிறகு பிசினசில் கவனம் செலுத்தினார். இன்று தன்னுடைய உழைப்பால் உயர்ந்து 3300 கோடிக்கு அதிபதியாக மாறியிருப்பதாக சமீபத்தில் செய்திகளும் வெளியாகியிருந்தன. இந்நிலையில், அரவிந்த் சாமியை "பக்குவப்படுத்திய" 10 ரூபாய் குறித்த தகவல் ஒன்றை பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Aagayam Tamil யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த தமிழா தமிழா பாண்டியன், அரவிந்த் சாமிக்கு முதல் படமான தளபதியில் எப்படி வாய்ப்பு கிடைத்து என்பது குறித்து விலாவரியாக கூறியிருந்தார்.

Television Arvind Swamy rs3300 crores Assets

அதில், "அரவிந்த் சாமியின் அப்பா டெல்லிக்குமார்.. இவர் சின்னத்திரை, தூர்தர்ஷன் நாடக நடிகர் ஆவார்.. டெல்லிக்குமாரின் அக்காவின் கணவர் வி.டி. சாமி என்பவர், எஃகு, இரும்பு வியாபாரம் செய்யும் மிகப்பெரிய தொழிலதிபர்..

இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.. எனவே, தன்னுடைய மகன் அரவிந்த்தை, சொந்த அக்காவுக்கு தத்து தந்துவிட்டார் டெல்லிக்குமார்.. வி.டி. சாமி என்ற பெயரை சேர்த்து "அரவிந்த் சாமி" என்று பெயர் மாறியது. அந்தவகையில், ஒரே நாளில் பலகோடி சொத்துக்கு அதிபதியாகிவிட்டார் அரவிந்த் சாமி.
10 ரூபாயை விடவேயில்லை

டான்பாஸ்கோ, பிறகு லயோலாவில் படிப்பை முடித்தார் அரவிந்த்சாமி.. தங்களுடைய பண்ணை வீடுகளில், பங்களாக்களில் விதவிதமான கார்கள், 5 நட்சத்திர உணவு, வேலையாட்கள் என்று நிரம்பி வழிந்துள்ளனர்.. ஆனாலும், தன்னுடைய மகன் வறுமையை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால், விடி சாமி என்ற தொழிலதிபர் அரவிந்த்சாமிக்கு தினமும் வெறும் ரூ.10 பாக்கெட் மணி தந்துள்ளார்.. காலேஜ் படிக்கும்வரை 10ரூபாய்தான் வாங்கி சென்றுள்ளார் அரவிந்த்சாமி..

படித்து முடித்ததும், தன்னுடைய வருமானத்துக்காக மாடலிங் தொழிலை தேர்ந்தெடுத்தார் அரவிந்த்சாமி.. மாடலிங் தொழிலுக்கு சென்றபிறகு சில ஆயிரங்களை சம்பாதித்துள்ளார.. பிறகு பல்லாயிரம் சேர்கிறது.. ஆனாலும் அப்போதும், அவரது அப்பா தந்து கொண்டிருந்த 10 ரூபாயை நிறுத்தவேயில்லை.. அந்த 10 ரூபாய் என்பது, தன்னுடைய மகனை பக்குவப்படுத்தும் பணமாக மாற்றும் என்று வலுவாக நம்பினார்.

சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து

இப்படிப்பட்ட சூழலில், கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து, பெரிய பட்ஜெட்டில் "தளபதி" என்ற படத்தை எடுக்க தயாராகி கொண்டிருந்தார் மணிரத்னம்.. அந்த படத்தில் கலெக்டராக நடிப்பதற்கு வடஇந்திய முகத்துடன் நடிகர் தேவைப்பட்டது. திடகாத்திரமான, கம்பீரமான தோற்றத்தில் அதேசமயம் நடிக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால், அப்படி யாரும் கிடைக்கவில்லை..

அப்போதுதான், அரவிந்த் சாமி நடித்த விளம்பர படம் ஒன்று, மணிரத்னம் கண்ணில் படுகிறது.. உடனே அது யாரென்று விசாரிக்க சொல்கிறார்.. மிகப்பெரிய இரும்பு வியாபாரியின் மகன் என்றும், தன்னுடைய மகனை சினிமாவில் நடிக்க வைக்க அந்த வியாபாரி அனுமதிக்க மாட்டார் என்றும் சொல்கிறார்கள். உடனே சுகாசினி, மணிரத்னம் இருவருமே சென்று தொழிலதிபரிடம் சென்று பேசிப் பார்த்தனர்.

சுகாசினிக்கு போட்ட கண்டிஷன்

சினிமாவில் பெண் சகவாசம், மதுப்பழக்கம் உள்ளிட்ட தீய பழக்கவழக்கங்கள் வந்துவிடும்.. அப்படி வந்தால் தன்னால் தன்னுடைய மகனை மீட்டெடுக்க முடியாது என்று கறாராக சொல்லிவிட்டாராம் அந்த தொழிலதிபர்.

ஆனல, 10 முறைக்கு மேல் சுகாசினி, தொழிலதிபர் வீட்டுக்கு சென்று, மகனை நடிக்க வைக்க அனுமதி கேட்டுள்ளார்.. இறுதியில், "ஒரே ஒரு படத்தில் வேண்டுமானால் நடிக்க மகனை அனுமதிக்கிறேன், ஆனால் படம் முடியும் வரை என்னுடைய மகனை கண்காணித்து கொண்டேயிருக்க வேண்டும். எந்த பழக்கமும் வந்துவிடக்கூடாது, உங்களிடம் இப்போது ஒப்படைப்பது போலவே என்னிடம் மறுபடியும் ஒப்படைக்க வேண்டும்" என்றாராம்.

காரில் வந்த அரவிந்த்சாமி

பிறகு படப்பிடிப்பு ஆரம்பமாகியிருக்கிறது. ஷூட்டிங்குக்கு மம்முட்டி, ரஜினி இருவரும் பிஎம்டபிள்யூ காரில் வந்தால், அரவிந்த் சாமியும் பிஎம்டபிள்யூ காரில் வருவாராம். ரஜினி, மம்முட்டி சம்பாதித்த பணத்தில் காரில் வந்தால், இயற்கையாகவே வசதிப்படைத்த அரவிந்த்சாமியும் காரில் வந்துள்ளார்.. ஒரே டேக்கில் நடித்தாராம் அரவிந்த்சாமி.. இறுதியில் தளபதி படம் பெரிய அளவில் பேசப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+