ரூ.500 கோடி அள்ளிய ரஜினி படம்.. செண்ட்டிமென்ட்டை தகர்த்த கூலி.. அசத்திய லோகேஷால் பிரபலம் மகிழ்ச்சி
சென்னை: ரிலீசுக்கு முன்பேயே ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படம், 500 கோடி வசூல் செய்திருப்பதாக தெரிகிறது. ஓவர்சீஸ் உரிமை, டிஜிட்டல் ரைட்ஸ், ஆடியோ உரிமை போன்ற அனைத்தும் சேர்ந்து இப்போதே 500 கோடியை கூலி படம் தாண்டிவிட்டதாம். அப்படியானால் 1000 கோடி வசூலை இப்படம் எளிதாக அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமல்ல, தமிழ் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாகவும் கூலி அமையும் என்ற பாசிட்டிவ் கருத்துக்களும் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகின்றன. இந்நிலையில், கூலி படம் குறித்து, சில தகவல்களை மூத்த பத்திரிகையாளர் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Madras Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், "கூலி படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.. மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் இதில் உள்ளது.. ர-ரிக்கார்டிங் போவதற்கு முன்பு, இந்த படத்தின் ரஃப் காட்சிகளை கண்டு ஃபயர் விட்ட முதல் நடிகர் அனிருத்தான்.. இப்போது படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

படம் ரிலீசுக்கு 40 நாட்களுக்கு முன்பிருந்து, படத்தின் புரமோஷனை வெளியிட்டால் நன்றாக இருக்கும், அதற்கு பிறகு ஆடியோ லான்ச் என ஒவ்வொன்றாக செய்யலாம் என்று சன் பிக்சர்ஸ் திட்டமிடுவதாக தெரிகிறது.
அனிருத் - டி.ராஜேந்தர்
இந்த மாதம் சிங்கிள் அல்லது புரமோ பாடல் ரிலீஸ் செய்யலாம்.. அனிருத், டி.ஆர். இருவரும் சேர்ந்து பாடி, டான்ஸ் ஆடியிருக்கிறார்கள்.. இந்த பாடல் படத்தில் இடம்பெறுகிறதா? அல்லது புரமோ பாடலா என்று தெரியவில்லை. சன் ஸ்டுடியோவிலேயே இந்த பாட்டை ஷூட் செய்து முடித்தாகிவிட்டது.. இந்த பாட்டைதான் முதலில் வெளியிட உள்ளனர்..
சன் பிக்சர்ஸ் + ரஜினி + லோகேஷ் கனகராஜ் + நாகார்ஜூனா + அமீர்கான் + அனிருத் என பெரிய பிரபலங்கள் உள்ளதால், இன்றுள்ள சூழ்நிலைகளையும் தாண்டி, ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக் கொண்டு, இந்த படத்தை ஒரு பெரிய விலை தந்து வாங்கியிருக்கிறது.
இந்த படத்தை 4 மொழிகளில் ரிலீஸ் செய்ய போகிறார்கள்.. முதல்பாதி படத்தை பார்த்துவிட்டு, லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டி விட்டாராம் ரஜினி..
சென்ட்டிமென்ட் இம்சை
ஆனால், கூலி என்ற படம் சென்ட்டிமென்ட்டாக சரியில்லை, அன்றைய காலத்தில் அமிதாப் பச்சனை வைத்து கூலி என்ற படம் எடுக்கப்பட்டபோது, பெரிய விபத்தை சந்தித்தார் அமிதாப் பச்சன்.. அதாவது, படத்துக்கு சென்ட்டிமென்ட் இல்லை, ஆனால், கூலி என்ற பெயருக்கு சென்ட்டிமென்ட் உள்ளதால், தலைப்பை மாற்றும்படி சிலர் கிளப்பி விட்டார்கள். ஆனால், எந்த புரளியையும் படக்குழுவினர் கண்டுகொள்ளாமல், படத்தை முழு ஈடுபாட்டுடன் எடுத்து முடித்துள்ளனர்..
நாகார்ஜூனா - அமீர்கான்
அமீர்கான் போன்ற ஸ்டார்கள், இதுவரை தன்னுடைய படத்துக்கே புரமோஷன் செய்யாத நிலையில், இந்த கூலி படத்துக்காக புரமோஷன் செய்வதும், பப்ளிசிட்டி செய்வதும் மிகப்பெரிய விஷயம்.. அதேபோல நாகார்ஜுனாவும், தெலுங்கிலும் புரமோஷன் செய்து வருகிறார்.. தமிழகத்துடன் அவருக்கு நெருங்கிய தொடர்பும் நீண்ட காலமாகவே உள்ளது..
இதனிடையே, அடுத்த படத்துக்காக ரஜினியை பெரிய பெரிய நிறுவனங்கள் இப்பவே நெருங்க தொடங்கிவிட்டன.. ரஜினிக்கு பெரிய மார்க்கெட், பிசினஸ் இன்றும் உள்ளது.. எனினும், ஜெயிலர்-2 முடித்தபிறகு அதை பற்றி ரஜினி முடிவெடுப்பார் என தெரிகிறது. இந்த கூலி படம் எப்படி இருக்க போகிறது என்ற ஆர்வம் எழுந்துள்ளது.. இப்போதுள்ள லோகேஷ் கனகராஜ் படத்தில் பழைய ரஜினியை பார்க்கலாம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications