குடுகுடுன்னு ஏறிய சாக்ஷி... பார்த்ததும் வியர்த்து விறுவிறுத்து போன ரசிகர்கள்
சென்னை : ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கிற மாதிரி சாக்ஷி அகர்வால் சாகசம் செய்திருப்பதுதான் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதுவரைக்கும் கிளாமரில் கலக்கி கொண்டிருந்த சாக்ஷி அகர்வால் தற்போது நான் சாகசத்தில் கெட்டிக்காரி என்று நிரூபித்து விட்டார்
காட்டுக்குள்ள இவர் செய்யும் அதிரடிகளை பார்த்த ரசிகர்கள் இவரும் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறாரா? என்று சந்தேகத்தை கேட்டு வருகின்றனர்.

பேரை சொன்னாலே சந்தோஷம்தான்
சாக்ஷி அகர்வால் என்ற பெயரை கேள்விப்பட்டதுமே இணையதள ரசிகர்களின் மனதில் ஒரு புன்னகை பூத்து விடும். அந்த அளவிற்கு படு ஆக்டிவாக ரசிகர்களுக்கு எனர்ஜி ஊட்டி கொண்டு கொண்டிருக்கிறார். பொதுவாக பல நடிகைகள் திரைப்படங்களாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி அதில் நடித்து தான் ரசிகர்கள் வட்டாரத்தை பெருக்கி கொண்டிருப்பார்கள். ஆனால், சாக்ஷி அகர்வால் டோட்டலாக தலைகீழ் தான். இவர் சினிமாக்களில் நடித்ததை விடவும் சமூக வலைத்தளத்தில் தான் அதிகமாக ஆக்டிவ் ஆக இருந்து ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறார். இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. அதற்கு காரணம் இவருடைய போட்டோஷூட் தான்.

விளம்பர நடிகையாக அறிமுகம்
இவர் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பு இம்போசிஷன் நிறுவனத்தில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டிருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் மாடலிங்கில் தன்னுடைய ஆசைக்காக கலக்கிக்கொண்டு இருந்திருக்கிறார். அப்படியே ஒரு சில விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். துணிக்கடை முதல் ஜவுளிக்கடை வரை பலகடை விளம்பரங்களுக்கும் இவர் நடித்திருந்தாலும் அந்த அளவிற்கு இவர் பிரபலமாகவில்லை. ஆனால் அதற்கு பிறகு ஒரு சில தமிழ் படங்களில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இவர் திரைப்படங்களில் சைட் ரோலில் வந்தாலும் கூட அதிலும் நன்றாக ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டார். அதுவும் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக அவருடைய கேரக்டரை சிறப்பாக செய்திருந்தார்.

எல்லா பொருத்தமும் இருக்கு
தற்போது வரைக்கும் ஹீரோயின் கேரக்டருக்கு தேவையான அத்தனை அம்சங்களும் இவரிடம் இருந்தாலும் இவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் சைடு ரோலாக தான் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் பற்றி இவர் கவலைப்படாமல் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இவருடைய முயற்சியின் பயனாக தற்போது ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் எப்படியும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற இவருடைய ஆசை மட்டும் குறையவே இல்லை. அதற்காக உடலை குறைத்து அழகை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். உடற்பயிற்சியில் அதி தீவிரமான ரசிகையான இருக்கும் இவர் உடற்பயிற்சிகளை செய்து கொண்டும் ரசிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்.

பார்க்கும்போதே பயமாயிருக்கு
சினிமா வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் தினமும் போட்டோசூட் களையும் எடுத்து விடுகிறார். மாடர்ன் உடை முதல் டிரடிஷனல் உடை வரைக்கும் எல்லாமே இவருக்கு கைவந்த கலைதான். அனைத்திலும் தன்னுடைய அழகை அப்பட்டமாக காட்டி ரசிகர்களுக்கு எனர்ஜியை ஊட்டிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கும் புத்துணர்வு பெற வைத்துக்கொண்டிருக்கிறார். இவருடைய வீடியோக்களை பலர் பாலோ பண்ண தொடங்கிவிட்டனர். அதனாலேயே தற்போது காட்டுக்குள்ளே இவர் ஒரு கலக்கலான வீடியோவை எடுத்திருக்கிறார். அந்தரத்தில் வலைகளை கட்டி தொங்க விட்டு அதில் சூ காலோடு குடுகுடுவென இவர் ஓடி மேலே சென்று விட்டு மீண்டும் கீழே இறங்கி வருவதைப் பார்க்கும்போது பல ரசிகர்களுக்கு மூச்சு முட்டுகிறதாம்.
-
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications