
தன்னுடைய மனைவியை பிரித்து செல்ல பலர் முயற்சித்தார்கள்..உருகிய சினேகன்
சென்னை: தன்னுடைய காதல் மனைவியை தன்னிடமிருந்து பிரிப்பதற்காக பலர் முயற்சி செய்தார்கள் என்று சினேகன் கூறியுள்ளார்.
அடுத்தவர்கள் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலைப்படாமல் அவருடைய மனைவி நடந்து கொண்டது அனைவருக்கும் வியப்பை கொடுத்துள்ளது.
காதல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

காதல் தம்பதிகள்
திரைத்துறையில் காதல் தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சினேகன் மற்றும் கன்னிகா ரவிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் காதலித்த விஷயம் சமூகவலைதளத்தில் தெரியும் போது முதலில் பல ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் சினேகன் மற்றும் கன்னிகா ரவி இருவருக்கும் வயது வித்தியாசங்கள் அதிகமாக இருப்பதால் குறையாக கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் மனமொத்த தம்பதிகளாக இவர்கள் இருவரும் அதைப் பற்றி கவலைப் படாமல் இருந்ததால் தற்போது வெற்றிகரமான திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் இவர்கள் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது .

பிஸியான வாழ்க்கைதான்
திருமணத்திற்கு பிறகும் கன்னிகா ரவி வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். அதுபோல சினேகன் தன்னுடைய துறையில் பாடல்களை எழுதி வருகிறார். இவர்கள் இருவரும் பிஸியாக இருந்தாலும் அடிக்கடி சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிடுவதில் ஆர்வமாக இருந்து வருகின்றனர். அதிலும் கன்னிகா ரவி தன்னுடைய கணவரின் மீது வைத்திருக்கும் பாசத்தை அடிக்கடி காட்டி வருகிறார். அதுபோல நானும் குறைந்தவர் அல்ல என்று சினேகனும் தன் மனைவி தனக்காக செய்திருக்கும் தியாகங்களையும் கிடைக்கும் இடங்களில் பேசி வருகிறார்.

மாறாத காதல்
ஆரம்பத்திலிருந்தே கன்னிகா ரவியை சினேகன் காதலிக்கும் செய்தியை கேட்டதும் பலர் அவரிடம் இருந்து பிரித்து விட வேண்டும் என்று
பல செயல்களை செய்து கொண்டிருந்தார்களாம். ஆனால் சினேகன் மீது தான் வைத்திருக்கும் அன்பு எப்போதும் மாறாது என்று கன்னிகா விடாபிடியாக இருந்துள்ளார். அதுபோல அவரிடம் வந்து யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே சினேகன் இடம் சொல்லி விடுவாராம். கோபப்படும் நேரங்களிலும் அவருக்கு ஆறுதலாக கன்னிகா ரவிதான் இருந்து வருகிறாராம்.
Recommended Video

மனைவியின் கட்டளை
திருமணத்திற்கு முன்பும் சரி, திருமணத்திற்குப் பின்பும் சரி தன்னுடைய காதல் கணவரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் கன்னிகா ரவி எப்போதும் சினேகனை மாமா என்று தான் அழைப்பாராம். அடுத்தவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை மாமா என்று கூறிக்கொண்டு இருப்பாராம். அது மட்டுமல்லாமல் சினேகன் கோபப்பட்டு யாருக்கும் மெசேஜ் அனுப்பும் போது அதை முதலில் எனக்கு அனுப்பி விட்டு பிறகு அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். அந்த மாதிரி தான் சினேகன் இப்ப வரைக்கும் நடந்து கொண்டு வருகிறாராம்.