Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பார்த்தாலே பதறுதே! கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் சன் டிவி நடிகையின் பறக்கும் போட்டோ சூட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அனு கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பலூனில் பறந்தபடி புது போட்டோ ஷூட் எடுத்து இருக்கிறார்.

என்னதான் பார்த்து பார்த்து போட்டோ சூட் எடுத்தாலும் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இந்த மாதிரி ஒரு முயற்சி தேவையா? என ரசிகர்கள் கருத்து கூறுகின்றனர்.

நடிகைகள் தற்போது கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் புது புதுசாக போட்டோ சூட் எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இது புதுசாக இருக்கிறதே என்று சிலர் இதற்கு பாராட்டியும் வருகின்றனர்.

சீரியலிலும் நிஜத்திலும் கர்ப்பம்

சீரியலிலும் நிஜத்திலும் கர்ப்பம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் அனு அந்த சீரியலில் கர்ப்பமாக இருக்கிறார். அதே நேரத்தில் நிஜ வாழ்க்கையிலும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு தற்போது இவர் கர்ப்பமாக இருக்கிறார். இந்த விஷயத்தை இவர் தன்னுடைய ஐந்தாவது மாதத்தில் தான் ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் தற்போது சில நாட்களுக்கு முன்புதான் இவர் ஏழாவது மாத வளைகாப்பு முடித்து இருந்த தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தின் முன்னிலையில் எளிமையாக வளைகாப்பு செய்த இவர் தன்னுடைய குழந்தையை மற்றும் கணவரைப் பற்றி உருக்கமாக பதிவையும் வெளியிட்டு இருந்தார்.

எடிட்டிங் தேவை இல்லை

எடிட்டிங் தேவை இல்லை

இந்த நிலையில் போட்டோ ஷூட் மோகம் தற்போது நடிகைகள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் அணுவும் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வித்தியாசமாக போட்டோ சூட் எடுத்து இருக்கிறார். ஒரு ஊஞ்சலில் முழுக்க பலூன்ஸ் கட்டிக் கொண்டு அதை ஒரு ஜேசிபி இயந்திரத்தின் துணையோடு பறக்க வைத்த படியே, அதில் அனு அமர்ந்து கொண்டு ஊஞ்சலில் பறப்பது போன்று வித்தியாசமாக போட்டோ எடுத்திருக்கின்றார். ஆரம்பத்தில் எல்லாம் போட்டோ சூட் எடுத்து அதில் அதிகமாக எடிட் செய்து அங்கே இங்கே பறப்பது போன்று போட்டோ சூட் எடுப்பார்கள். ஆனால் இப்போது நிஜத்திலேயே பறப்பது போல இவர் எடுத்திருக்கும் போட்டோஸ் மற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ரசிகர்களின் அறிவுரை

ரசிகர்களின் அறிவுரை

அனு மட்டுமல்லாமல் அவருடைய கணவரும் அந்த போட்டோ சூட்டில் சேர்ந்து போட்டோஸ் எடுத்து இருக்கிறார். இருவரும் அந்த ஊஞ்சலில் அமர்ந்திருப்பது போன்றும் அனு தனியாக அமர்ந்திருப்பது போன்றும் விதவிதமாக போட்டோஸ்கள் எடுத்து குவித்து இருக்கின்றனர். என்னதான் இவர்கள் இந்த பறக்கும் ஊஞ்சல் பாதுகாப்பாக எடுத்து இருந்தாலும் இதில் எதுவும் தவறு நடந்து விட கூடாது என்று பலர் பதறி போய் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் ஒரு சில ரசிகர்கள் இவருடைய தைரியத்தையும் கிரியேட்டிவிட்டியையும் பாராட்டி வருகின்றனர். பலர் கர்ப்பமாக இருக்கும் போது சாதாரணமாக டிராவல் கூட செய்யக்கூடாது என்று எச்சரிப்பார்கள். ஆனால் இவர்கள் பறந்தபடியே விதவிதமாக எடுத்து இருக்கும் போட்டோ சூட்டுகள் பலருக்கு உத்வேகம் கொடுப்பதாக இருப்பதாகவும் கருத்து கூறி வருகிறார்கள்.

குழந்தைக்காக கவிதை

குழந்தைக்காக கவிதை

வயல்வெளியின் நடுவில் இவர் வானத்தில் பலூன்ஸ் நிறைந்த ஊஞ்சலில் பறப்பது போன்று இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இவர் தன்னுடைய வானத்தில் அழைந்து திரிந்து பலூன்கள் மற்றும் மந்திரங்களால் நிரப்பப்பட்ட தொட்டிலில், உன்னை இறுக்கமாகவும் மென்மையாகவும் பிடித்து அடிவானத்தை உற்றுப் பார்த்து என் முகத்தை தொடும் உன் குட்டி பாதங்களை எதிர்பார்த்து என்னிடம் வா என் குட்டியே, என தன்னுடைய குழந்தையை பற்றி ஒரு கவிதையும் அந்த போட்டோஸ்களுக்கு கேப்ஷன் ஆக கொடுத்து இருக்கிறார். புதுவிதமாக போட்டோ சூட் எடுத்து இருக்கும் இவருக்கு ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும், பலர் இதில் ஆபத்து இருப்பதால் இந்த மாதிரி முயற்சிகளை கவனமாக கையாள வேண்டும் என்று அறிவுரையும் கூறி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+