வீட்டிற்குள் பார் செட்டப் வைத்திருக்கும் சீரியல் நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. காரணத்தை கேட்டு கடுப்பான ரசிகர்கள்!
சென்னை: பிரபல சின்னத்திரை நடிகை ரட்சிதா மகாலட்சுமி சமீபத்தில் வெளியிட்ட ஹோம் டூர் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. குடும்ப கதாபாத்திரங்களில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர், தனது வீட்டில் அமைத்துள்ள 'மினி பார்' அறையை வெளிப்படையாக காட்டியிருப்பது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

நினைவுகளை சுமக்கும் ஒரு அறை
அந்த வீடியோவில், ரட்சிதா மகாலட்சுமி தனது வீட்டில் தனியாக அமைத்துள்ள பார் அறையை ரசிகர்களுக்கு காட்டுகிறார். அது வெறும் அலங்காரத்திற்காக இல்ல; தனது தந்தையின் ஆசையை நினைவுகூரும் விதமாக இந்த அறையை உருவாக்கியதாகவும், அது அவருக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான இடம் என்றும் கூறியுள்ளார்.
அந்த அறையில் பல்வேறு வகையான சரக்கு பாட்டில்கள், போதை சாக்லேட்டுகள், விலை உயர்ந்த மது பாட்டில்களை அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது அதில் ஒவ்வொரு பாட்டில்கள் பற்றிய நினைவுகளையும் அதன் விலையையும் ரட்சிதா சிரித்தபடியே சொல்லிக்கொண்டு இருக்கிறார். அதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
இதற்கு முன்பு சீரியல் நடிகைகள் விஜே மகேஸ்வரி உட்பட ஒரு சிலர் தங்கள் வீட்டிற்குள் பார் செட்டப் இருப்பதை பெருமையாக காட்டி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது இவரும் செய்ய இதுவே விமர்சனங்களுக்கு காரணமாக இருக்கிறது.
ரசிகர்களின் எதிர்வினை
இந்த வீடியோ வெளியானதும், பலரும் அதிர்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். சீரியல்களில் எப்போதும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்கும் இவர், வீட்டிற்குள் இப்படிப்பட்ட அறையை வைத்திருப்பதை வெளிப்படையாக காட்டியிருப்பது சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
"இது தேவையா?", "இதை இப்படி காட்ட வேண்டிய அவசியம் என்ன?" என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், "குடிப்பதை சாதாரணமாக காட்டுகிறார்களா?" என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. அதே சமயம், இது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை என்பதால் அதை மதிக்க வேண்டும் என்றும் சிலர் சொல்லி வருகிறார்கள்.
ரட்சிதா மகாலட்சுமி யார்?
கர்நாடகாவில் பிறந்த ரட்சிதா, ஆரம்பத்தில் கன்னட சீரியல்களில் நடித்தார். பின்னர் தமிழ் சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றார். அதிலும் இவர் அறிமுகமானது பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலமாகத்தான். அதைத் தொடர்ந்து "சரவணன் மீனாட்சி" சீரியலில் மீனாட்சி கதாபாத்திரம் மூலம் பெரும் புகழ் பெற்றார். தொடர்ந்து குடும்ப கதைகளில் நடித்ததால், குடும்ப பெண் என்ற இமேஜ் ரசிகர்களிடம் உருவானது. மேலும், பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது நிஜமான தன்மையை ரசிகர்களுக்கு காட்டியிருந்தார்.
இமேஜ் மற்றும் நிஜ வாழ்க்கை
இந்த விவகாரம் ஒரு பெரிய கேள்வியை எழுப்புகிறது. திரையில் ஒரு மாதிரி தோன்றும் நடிகர்கள், நிஜ வாழ்க்கையிலும் அதே மாதிரி இருக்க வேண்டுமா? அல்லது அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை அவர்கள் விருப்பப்படி வாழ அனுமதிக்க வேண்டுமா? இந்த கேள்விதான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படுகிறது.
மொத்தத்தில் ரட்சிதா பகிர்ந்த ஒரு சாதாரண ஹோம் டூர் வீடியோ, இப்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது. ஒருபுறம் விமர்சனங்கள் இருந்தாலும், மறுபுறம் அது ஒரு மகளின் தந்தை நினைவாக உருவாக்கிய இடம் என்பதும் மறக்க முடியாத உண்மை.
இதன் மூலம், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும், நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் எவ்வளவு வேறுபட்டவை என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications