அடிபொலி... ஆட்டம் போட்டு கலக்கும் சிவாங்கி... கமெண்ட்களில் கொஞ்சும் ரசிகர்கள்
சென்னை: வராத டான்ஸை வரவைத்து ஆட்டம்போடும் சிவாங்கியை பார்த்ததும் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு செய்கின்றனர்.
சூட்டிங் செட்டில் அடிபொலி பாட்டுக்கு ஆடிக் கொண்டிருக்கும் போதே பிளாப்பர் ஆனாலும் அதையும் சமாளித்து ஆடி முடித்த சிவாங்கியை ரசிகர்கள் கொஞ்ச தவறவில்லை.
இவர் மட்டும் என்ன செய்தாலும் க்யூட்டாக இருக்கிறதே என்று ஆர்ப்பரிக்கும் ரசிகர்களால் இன்ஸ்டாகிராமே ஆடி போய்விட்டதாம்.

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை
விஜய் டிவியின் செல்லக் குழந்தையாக மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் பெறும் இளைஞர்கள் பட்டாளத்தையே ரசிகர்களாக வைத்திருக்கும் சிவாங்கிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இவர் என்ன செய்தாலும் ரசிக்கும் ரசிகர்கள் இருக்கின்ற வரைக்கும் இவருடைய காட்டில் நல்ல மழைதான். ஆரம்பத்தில் இவர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஏழாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு பாட்டுப்பாடி தன்னுடைய திறமையை நிரூபித்து கொண்டிருந்தார். குழந்தையாக இருந்தாலும் இவருடைய குரலுக்கும் பாடலுக்கும் சம்பந்தமே இல்லை என்று ரசிகர்கள் முதல் நடுவர்கள் வரை அனைவருமே அதிசயப்பட்டு தான் போயிருந்தனர்.

பாடகராக ஆசை
இந்த சீசனில் இவர் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதில் விதையை போல விழுந்துவிட்டார். அதற்கு அடுத்ததாக அடுத்த ஆண்டு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சாம்பியன் என்ற நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டு தன்னுடைய விடாமுயற்சியை காட்டிவிட்டார். ஆனால் அதிலும் இவர் வெற்றி பெறவில்லை. பாட்டு கை கொடுக்கவில்லை என்றாலும் அதே விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார். இந்த நிகழ்ச்சியின் சீசன் ஒன்றிலும், இரண்டாவது சீசனிலும் கலந்துகொண்டு ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். இவருடைய சேட்டைகளும் துறுதுறு துடுக்குதனமும் ரசிகர்களுக்கு நன்றாகவே பிடித்துவிட்டது.

குக் வித் கோமாளியில் பிரபலம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதுலயும் தன்னுடைய பாட்டு திறமையை காட்டி ரசிகர்களின் மனதில் யாருடா இந்த பொண்ணு இவ்வளவு திறமையை வைத்திருக்கிறது என்று பொறாமைப்பட வைத்துவிட்டார். பல ரசிகர்கள் அவருக்கு பேன்ஸ் பேஜ்களை ஆரம்பித்துவிட்டனர். இவருக்கும் இந்த நிகழ்ச்சியில் அஸ்வினுக்கும் இருக்கும் க்யூட்டான மூவ்மெண்ட் பல இளைஞர்களை கவர்ந்து விட்டது. அது மட்டுமல்லாமல் இவரும் அந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருந்த புகழும் அண்ணன் தங்கச்சிகளாக செய்த சேட்டைகளும் ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்துவிட்டது. நமக்கு இப்படி ஒரு தங்கச்சி இல்லையே என்று பல அண்ணன்களை ஏங்க வைத்து விட்டார்.

அடிபொலி டான்ஸ்
ஒரு போட்டியாளராக இவ்வளவு நாளா இதே விஜய் டிவியில் தன்னுடைய பயணத்தை தொடங்கி கொண்டிருந்த இவர் தற்போது காமெடி ராஜா கலக்கல் ராணி என்னும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களம் இறங்கியிருக்கிறார். இவரை முதன் முறையாக தொகுப்பாளராக பார்த்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர் நான் தொகுப்பாளராக இருந்தாலும் என்னுடைய சேட்டைகள் குறையாது என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த சூட்டிங் ஸ்பாட்டில் பாட்டு போட்டு ஆட்டம் போட்டிருக்கிறார். அடிபொலி பாட்டுக்கு இவர் போட்ட ஆட்டம் பார்த்து பல ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு வருகின்றனர். கடைசியில் அந்த பாட்டு பிளாப்பர் ஆனாலும் அதையும் சமாளித்து சிரிச்சுகிட்டே இவர் ஆடியது தான் பலருடைய கண்ணுக்குள்ளே நிற்கிறதாம்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய்












Click it and Unblock the Notifications