தொப்புன்னு குதித்த ஷிவானி..சர்வமும் ஆடிப்போன ரசிகர்கள்
சென்னை: தண்ணீரிலே ஃபுட்பால் விளையாடி ரசிகர்களின் மனதை துடிக்க விட்ட ஷிவானியின் லேட்டஸ்ட் வீடியோக்கள் செம வைரலாக பரவி வருகிறது.
Recommended Video
துள்ளுவதோ இளமை என்று துள்ளி துள்ளி ஆட்டம் போடும் ஷிவானியை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் இன்ஸ்டாகிராமில் அலைமோதுகிறது.
இரவு நேரத்தில் இவர் போடும் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் தூக்கத்தை தொலைத்து சுற்றிக் கொண்டிருக்கிறார்களாம்.

என்ன ஒரு துள்ளல்
தேங்கிய மழை நீரை பார்த்ததும் மழை படத்தில் வரும் ஸ்ரேயா வாக மாறிய 'ஷிவானி போட்டாங்க இரண்டு ஸ்டெப் தண்ணீல'.. 'அதை நல்லா பார்த்த ரசிகர்கள் எல்லாம் ஜன்னில' மேக்கப் இல்லாம சிம்பிளான டிரஸ்ல இப்ப இவர் போட்டுள்ள வீடியோ தான் அவரைப்போன்ற இணையத்திலும் துள்ளிக்குதித்து வலம் வருகிறது.எப்பவும் அங்கங்க.. கொஞ்சம்.. கொஞ்சம்.. கேப் தெரிகிற காஸ்ட்யூம்ல, ஸ்ட்ராங்கான மேக்கப்பில அவருடைய ரசிகர்களுக்காகவே ஜம்முனு போட்டோ போடுவது ஷிவானியோட பழக்கம்.

அது போரடித்துவிட்டது
மேக்கப்பும் காஸ்ட்யூமும் போட்டு.. போட்டு.. போரடித்து விட்டதோ..!என்னவோ..? இல்லை என்றால் தண்ணியை பார்த்ததும் துள்ளிக் குதிக்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டதோ என்று தெரியவில்லை..! டக்கென்று வீடியோ எடுத்து அப்லோட் செய்துள்ளார். ஷிவானியின் முகம் என்னவோ மேக்கப் இல்லாமல் டல்லாக இருந்தாலும், அவரது ஆட்டம் துள்ளலாக தான் அவரது ரசிகர்களுக்கு இருக்கிறது.

முரட்டு குத்தால்ல இருக்கு
இருட்டில் இந்த முரட்டு குத்து ஆட்டத்தை பார்த்த இவரது ரசிகர்கள், இந்த வீடியோவை ஸ்லோமோஷனில்.. ஜூம் செய்து., பார்த்து தங்கள் தலைவியை வர்ணித்து கமெண்ட் பாக்ஸ்களை கவிதைகளால் சூடேற்றி வருகின்றனர்.சில ரசிகர்கள் சில நாட்களாக கொஞ்சம் மெலிந்தது போல் தெரிந்த தங்கள் அபிமான செலிபிரிட்டி இந்த வீடியோவில் திடீரென்று சற்று எடை போட்டது போல் இருப்பதாக சொல்லி வருத்தப்பட்டு வருகின்றனர். என்னடா...இது...! எல்லாமே நல்ல காமெண்ட்டா இருக்கு..!அதுவும் இவ்ளோ கமெண்ட் வருது..! என்பதைப் பார்த்த சில ரசிகர்கள் என்னங்கம்மா...? காசு கொடுத்து கமென்ட் பண்ண ஆள் செட் பண்ணி இருக்கீங்களா?என்று அவரிடமே நக்கலாக கேட்டு வருகின்றனர்.

அப்டேட் கிடைக்குமா
நம்ம தமிழ்நாட்டு ரசிகர்கள் யாரேனும் ஒரு செலிபிரிட்டி ஒரு பெரிய படத்தில் இணைந்து ஒர்க் பண்ண போறாரு என்று கேள்விப்பட்டால்,அந்தப் படத்தை குறித்த அப்டேட்களை அவரிடம் துருவி..துருவி.. கேட்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதுவும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி போன்றவர்கள் என்றால் சும்மா விடுவார்களா..!வழக்கம்போல அவரிடம் அவர் கமிட்டாகி இருக்கும், 'மாஸ்டர்'புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நடிக்கும் மல்டி ஸ்டார் படமான விக்ரம் படம் குறித்த அப்டேட்களை கேட்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் இவரோ அதைப்பற்றி எந்த மூச்சும் விடுவதாக தெரியவில்லை.

இது டிரைலர் தான்
இப்பொழுது இந்த ஆட்டத்தை பார்த்த இவரது ரசிகர்கள், இது சும்மா டிரெய்லர் தான் படத்துலதான் மெயின் பிக்சர் இருக்குமோ?என்று தாங்களாகவே யோசித்து வருகின்றனர். இந்த ஆட்டத்தை பார்த்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் இவருக்கென்று ஒரு குத்துப்பாடல் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி ஏதேனும் நடந்து முழு பாட்டுக்கு நம்ம ஷிவானி டான்ஸ் பெர்ஃபாமன்ஸ் பண்ணாங்கன்னா..! ஷிவானி ரசிகர்களுக்கு அது பெரிய ட்ரீட்டு தான்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications