என் எஸ் கே ரம்யாவின் மகனா இது.. இவ்வளவு வளர்ந்து விட்டாரா..? புகைப்படங்களுக்கு வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: பாடகி என் எஸ் கே ரம்யா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக நன்றாக பிரபலம் அடைந்து விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரைப் பற்றி அதிகமாக தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு தற்போதைய புகைப்படங்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறதாம்.
ரம்யா தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் கன்னடம் மலையாளம் தெலுங்கு முதலிய பல மொழிகளிலும் இவர் பல பாடல்களை பாடியுள்ளார்.
பாடகியாக பலருக்கும் அறிமுகம் ஆகி இருந்தாலும் ரம்யாவின் முகத்தை உலகிற்கே காண்பித்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். ரம்யா பிக் பாஸ் தமிழ் இரண்டாவது சீசனில் 35 வது நாளில் வெளியேறி இருந்தார்.

பிரபலங்களின் வாரிசு
நகைச்சுவை நடிகரான என் எஸ் கிருஷ்ணன், நடிகர் ஆர் கே ராமசாமி மற்றும் நடிகை பி ஏ மதுரம் ஆகியோரின பேத்தியாக இருக்கும் ரம்யா தான் பிரபலங்களின் வாரிசு என்று சொல்வதை விட தனது திறமையின் மூலமாக பலருக்கும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தனது தனித்துவத்தை நிரூபிப்பதற்காக பிக் பாஸ் இரண்டாவது சீசனில் ஒரு பாடகியாக உள்ளே நுழைந்தார். இந்த நிகழ்ச்சியில் இவருடைய கேரக்டரை ரசிகர்கள் புரிந்து இருந்தாலும் இவர் ஆரம்பத்தில் 35 வது நாட்களில் வெளியேற்றப்பட்டார்.

கமலஹாசன் கருத்து
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய தனித்தன்மையான பாடல்கள் பலராலும் பாராட்டப்பட்டது. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பல மொழிகளிலும் தனது குரலால் ரசிகர்களை மயக்கி உள்ளார். இவருடைய பாடல்கள் ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் இருக்கும்போது சில எதிர்மறையான கருத்துக்களை கூறி விட்டார் என்று நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வந்தனர். கமல்ஹாசன் கூட ரம்யாவின் சலிப்பான பாத்திரம் அவருக்கு எதிராக வேலை செய்திருக்கலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

திருமண வாழ்க்கை
என்னதான் போல்டான பெண்ணாக இருந்தாலும் ரம்யாவிற்கு முதல் திருமணம் சரியான முறையில் அமையவில்லை என்று திருமணம் முடிந்த முதல் வருடத்திலேயே அவரை பிரிந்து விட்டார். அதற்குப் பிறகு ஒரு சில வருடங்கள் கழித்து சீரியல் நடிகரான சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரம்யாவின் கணவரான சத்தியா விஜய் டிவியில் ஒளிபரப்பான நீலக்குயில் என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். இவர்கள் இருவருக்கும் திருமணத்திற்கு பிறகு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மகன் புகைப்படம்
தனது மகனின் புகைப்படத்தை அந்த அளவிற்கு சமூக வலைதளத்தில் காட்டாமல் வைத்திருந்த ரம்யா தற்போது மகனின் புகைப்படத்தை காட்டியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரியதாக வளர்ந்து விட்டார்களா?? என்று ஆச்சரியத்தோடு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் ரம்யாவின் கணவர் சத்தியா தனது மகனோடு இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்தது உள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அதிகமாக தனது மகனோடு இருக்கும் புகைப்படங்களை சத்தியா பதிவிட்டு வருகிறார். உடற்பயிற்சியில் தீவிரத்தை காட்டும் சத்தியா தனது மகனோடு இருக்கும் புகைப்படங்கள் அதிகமாக பதிவிடுகிறாரே தவிர மனைவியோடு இருக்கும் புகைப்படங்களை அதிகமாக பதிவிட்டது இல்லை என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications