சிறகடிக்க ஆசை: குழந்தைக்கு ஆசைப்பட்ட மீனா! அண்ணாமலை சொன்ன விஷயம்! மகிழ்ச்சியில் முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், முத்து மற்றும் மீனாவுக்குள் குழந்தை ஆசையை விதைக்கும் காட்சிகள் நிறைந்ததாக இருந்தது. நண்பர்களின் பேச்சு, அண்ணாமலையின் அறிவுரை என, இருவரும் ஒரே விஷயத்தைப் பற்றி யோசிப்பது, இனிவரும் எபிசோட்களுக்கான புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்களால் பிறந்த ஆசை
இன்றைய எபிசோடில், முத்துவின் நண்பர்கள் அனைவரும் அவரிடம், "நீயும் ஒரு குழந்தையைப் பெத்துக்கோ. அப்போதான் உங்களுக்கு அன்பு வளரும், உங்க பெயர் சொல்றதுக்கும் ஒரு குழந்தை இருந்தாதான் சந்தோஷமா இருக்கும். அவங்களைப் பார்க்கிறதுக்கும், அவங்களைப் படிக்க வைக்கிறதுக்குமே லைஃப் ஓடிப் போயிடும்" என்று சொல்கின்றனர். அதைக் கேட்ட முத்துவுக்குள் குழந்தை ஆசை தோன்றுகிறது.
அதே சமயம், மீனா தனது தோழிகளுடன் பூ கட்டிக் கொண்டிருக்கும்போது, அவரது தோழி ஒருவர் குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா நடத்த இருப்பதாக ஸ்வீட் கொடுக்கிறார். உடனே அவரிடம், "நீ எப்போ குழந்த பெத்துக்கப் போற?" என்று கேட்க, "அதைப் பற்றி இன்னும் யோசிக்கல" என்று மீனா பதில் சொல்கிறார். ஆனால், "அப்படி எல்லாம் இருக்கக் கூடாது மீனா, எல்லாமே வயசுல பிறந்தாதான் கரெக்டா இருக்கும். ஒரு குட்டி மீனாவையோ இல்ல ஒரு குட்டி முத்துவையோ பெத்துக்கோ" என்று சொல்ல, மீனாவுக்கும் குழந்தை ஆசை வருகிறது.
பூ கட்டி வீடியோ எடுத்து ட்ரெண்டிங்
பிறகு, மீனா கட்டிலில் உட்கார்ந்து முத்து பூ வாங்கி வந்து ரொமான்ஸ் செய்வது போலக் கனவு காண்கிறார். அப்போது, மனோஜ் மல்லிகை பூவுடன் வந்து ரோகிணியைக் கூப்பிடுகிறார். பிறகு, ஸ்ருதியும் மல்லிகை பூவுடன் வர, இதுதான் ட்ரெண்ட் எனச் சொல்லிக்கொள்கின்றனர். உடனே மனோஜ், ரோகிணிக்கு பூ வைத்துவிடச் சொல்கிறார். அதை ஸ்ருதி வீடியோவாக எடுக்கிறார். பிறகு ரவியைக் கூப்பிட்டு, "எனக்கு பூ வச்சு விடு" என்று சொல்ல, மீனாவிடம் கொடுத்து அதையும் வீடியோ எடுக்கிறார்கள்.
அப்போது, விஜயாவும் அண்ணாமலையும் வர, "இப்ப எதுக்கு நீங்க எல்லாரும் பூ வச்சுக்கிட்டு இருக்கீங்க? இப்ப வியாபாரம் ஆகவும் உன் தலையில கட்டிட்டாடா?" என்று விஜயா கேட்கிறார். "நான்தான் ஆன்ட்டி வாங்கிட்டு வந்தேன்" என ஸ்ருதி சொல்ல, பிறகு அண்ணாமலை இடம் "நீங்க ஆன்ட்டிக்கு பூ வச்சு விடுங்க" என்று சொல்ல, "அதெல்லாம் நான் வச்சு விடுறது இல்லம்மா" என்று அண்ணாமலை சொல்ல, "இப்போ ட்ரெண்டிங் இதுதான் அங்கிள், தயவுசெய்து வச்சு விடுங்க" என்று ஸ்ருதி கெஞ்ச, அண்ணாமலையும் பூவை எடுத்து வைத்து விடுகிறார்.
அண்ணாமலையின் அட்வைஸ்
மறுபக்கம், அண்ணாமலை முத்துவுக்காகக் காத்திருக்கிறார். முத்து வந்ததும் "உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்" என்று சொல்லி, "கிரிஷைப் பார்க்கும்போது சொல்லு. கொஞ்சம் பணம் தர்றேன். அவனுக்கு டிரஸ் எடுத்து கொடு. பாவம் யாரும் இல்லாம பாசத்துக்காக ஏங்கிட்டு இருக்கான்" என்று சொல்கிறார். அப்போது, "இப்போவே எங்க அம்மாவால எங்க வீட்டுக்கு வர முடியல மாமா. உங்க பாட்டி வந்து கூட்டிட்டு போய்ட்டாங்க. அவ்வளவு உதவி பண்ண அவரையே, உங்க கூட இருந்தா ரவுடி மாதிரி வளர்வான்னு அவங்க பொண்ணு சொன்னாங்க" என்று வருத்தப்படுகிறார்.
"அவன் பண்ற நல்லது யாருக்குமே தெரிய மாட்டுது" என்று மீனா சொல்ல, அண்ணாமலை "முத்துவுக்கு சிறுவர் சீர்திருத்தப் பள்ளி விஷயம் பற்றித் தெரியும்" என்று பேச ஆரம்பிக்க, "எனக்குத் தெரியும் மாமா" என்று மீனா சொல்கிறார். "அன்னைக்கு முத்துவை காப்பாத்தாம விட்டது எனக்கு இன்னைக்கு வரைக்கும் குற்ற உணர்ச்சியா இருக்கு" என்று அண்ணாமலை வருத்தப்படுகிறார். "ரெண்டுமே உங்களோட பசங்க. உங்களால யாரை மாமா விட்டு கொடுக்க முடியும்?" என்று மீனா கேட்கிறார். "நீங்களும் உங்க மனசுக்கு நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பீங்க, குழந்தை குட்டி பெத்துப்பீங்க" என்று அண்ணாமலை சொல்ல, மீனா சந்தோஷப்படுகிறார்.
இறுதியில், முத்து மீனாவுக்குப் பூ வாங்கி வந்து வைத்து ரொமான்ஸ் செய்கிறார். அப்போது இருவரும் ஒரே விஷயத்தைப் பற்றி யோசித்துப் பேசுகின்றார்கள். கூடிய விரைவில் மேலே ரூம் கட்ட வேண்டும், அதன் பின்பு நடக்க வேண்டியதெல்லாம் நடக்கும் என்று முத்து கூறுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிந்தது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications