மாற்றம்னு சொல்லி ஏமாற்றம்.. கரண்ட் பில் மட்டுமல்ல முட்டை விலையும் கூடிடுச்சு! சீரியல் நடிகர் ஆதங்கம்
சென்னை: விஜய் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் பலரும் விலைவாசி உயர்ந்துவிட்டதாக கூறி ஆதங்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு சீரியல் நடிகை வைஷாலி தனக்கு கரண்டு பில் அதிகரித்துவிட்டது என்று ஒரு வீடியோ வெளியிட்டது பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு மின்சாரத் துறை வாரிய மறுப்பு தெரிவித்துள்ளது. இது ஒரு பக்கம் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கும் போது இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான நடிகர் பழனியப்பன் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் நல்லவேளை தவெகவிற்க்கு ஓட்டு போடல மாற்றம்னு சொல்லி ஏமாற்றம் தான் மிச்சம் என்று வருத்தத்துடன் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

சீரியல் நடிகர் பழனியப்பன்
நடிகர் பழனியப்பன் பேசுகையில், சட்டசபையில் என்ன நடக்கிறது என்று நாம இப்ப எல்லாருமே பாத்துட்டு தான் இருக்கிறோம். அங்க சிலர் தமிழையே தப்பு தப்பாக பேசுறாங்க. கணக்கை அரைகுறையாக பேசுறாங்க. வரலாறுவை வாய்க்கு வந்தபடி பேசுறாங்க. எதுவும் சரியாக இல்லை. இதற்கு என்ன சொல்றதுன்னு தெரியல.
விலையேற்றம்
இது ஒரு பக்கம் என்றால் விலைவாசி எல்லாம் இப்போ ஏன் இப்படி மாறிப் போய் இருக்கிறதுனு தெரியல. முட்டை விலை 5 ரூபாய்க்கு விற்றது, இப்போ 8 ரூபாயாக மாறிடுச்சு. அரிசி விலை 50 ரூபாய்க்கு விற்றது இப்போ 70வது ரூபாயாக மாறிடுச்சு. கரண்ட் பில் 1200 ரூபாய் வந்து இருந்தது இப்போ 2500 ரூபாய் மாறிடுச்சு. இது எனக்கு மட்டும்தானானு தெரியல. பலருக்கும் இதுபோல மாறி இருக்குனு நினைக்கிறேன்.

அரசியல் பதிவுகள்
நான் அரசியல் பதிவுகள் போட வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் இருக்கிற சூழ்நிலை சரியாக இல்ல. அதை சொல்றதுக்காகத்தான் இந்த பதிவு. இதனால் யாரும் திட்டினாலும் எனக்கு கவலை இல்லை. ஒருவேளை எனக்கு மட்டும்தான் விலை அதிகரித்து இருக்கா? இல்ல உங்க எல்லாருக்குமே விலை அதிகரித்து இருக்கா? ஒன்னு மட்டும் எனக்கு திருப்தி நல்ல வேலை நான் தவெகவிற்க்கு ஓட்டு போடவில்லை. தவெகவிற்கு ஓட்டு போட்டு என்னுடைய ஓட்டை நான் வேஸ்ட் பண்ணவில்லை என்று அவர் பேசி இருக்கிறார்.
பழனியப்பன் பேசியதற்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் விலையேற்றத்தை விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே சீரியல் நடிகை வைஷாலி, கரண்ட் பில் அதிகரிப்பதால் சாமானிய மக்களும், என்னை போன்றவர்களும் கஷ்டப்படுகிறோம். இதற்கு முன்பு தாங்கள் செலுத்தி வந்த மின்சார கட்டணத்தை விட இந்த மடங்கு பல மடங்கு அதிகரித்து இருக்கிறது என்று அவர் ஒரு வீடியோ வெளியிட்டது அதிகமாக ட்ரோல் ஆகி வருகிறது.
பொதுமக்கள் விமர்சனம்
இந்த நிலையில் இப்போது அதேபோல பழனியப்பனும் பேசி இருக்கும் நிலையில் தற்போதைய விலையேற்றம் பொதுமக்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களையும் பாதித்திருக்கிறது என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் வழக்கம்போல ஒரு சிலர் இவர் பேசியதை விமர்சித்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
