ரோகிணி பற்றி விஜயாவிற்கு மரண பயத்தை காட்டிய பார்வதி.. இனி நடப்பது இதுதானா? எதிர்பாரா முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி 11ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் ரோகினி வீட்டை விட்டு கிளம்பி போனதை தெரிந்து கொண்ட பார்வதி விஜயாவிடம் ஒன்றுக்கு இரண்டாக சொல்ல அதைக் கேட்டு விஜயா அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்.

அதே நேரத்தில் ரோகினியை தேடி அலைந்து கொண்டிருந்த முத்து, மீனா, மனோஜ்க்கு எதிர்பாராத விதமாக க்ரிஷ் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். ரோகிணி வீட்டிற்கு வந்திருக்கும் மீனா கேட்ட கேள்வியால் ரோகிணியின் அம்மா பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்.

அதுபோல ரோகிணிக்கு அவருடைய அம்மாவும் மனோஜ் வீட்டுக்கு போகும்படி அட்வைஸ் கொடுக்க இதனால் இனி ரோகிணி என்ன முடிவெடுக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

siragadikka aasai serial December January 11th episode Parvathi shows fear to Vijaya about Rohini

அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் முத்து மீனா மனோஜ் மூவரும் காரில் குமரி பாளையம் வந்து ரோகிணி குறித்து அவருடைய போட்டோவை காட்டி ஒவ்வொருத்தரிடமாக விசாரிக்க எல்லோரும் எங்களுக்கு தெரியலையே என்று சொல்லிவிடுகின்றனர். அடுத்ததாக ரோடு ரோடாக திரிந்து கொண்டிருப்பதால் முத்து மனோஜை திட்டிக்கொண்டே வருகிறார். மறுபக்கத்தில் ரோகினி அம்மா வீட்டிற்கு வந்து மனோஜும் என்னை ஏமாத்திட்டான் என்று அம்மாவை கட்டிப்பிடித்து அழுகிறார்.

மனோஜ் தன்னிடம் பொய் சொன்ன விஷயத்தை சொல்ல அவருடைய அம்மா மாப்பிள்ளை உனக்கு விஷயம் தெரிஞ்சா கஷ்டப்படுவான்னு தான் சொல்லாம இருந்திருக்கலாம் என்று அட்வைஸ் கொடுக்க அதற்கு நீயும் அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசாத என்று ரோகிணி கோபப்படுகிறார். அதற்கு அவருடைய அம்மா சின்ன சின்ன விஷயத்துக்கு எதுக்கு கோவிச்சுட்டு வந்த என்று கேள்வி கேட்க இது உனக்கு சின்ன விஷயமா தெரியுதா என்று ரோகிணி எதிர்த்து பேசுகிறார்.

siragadikka aasai serial December January 11th episode Parvathi shows fear to Vijaya about Rohini

அதற்கு ரோகிணி அம்மா சமாதானப்படுத்த பார்க்க ஒரு கட்டத்தில் கோபமான ரோகிணி நீயும் தான் பொய் சொல்லி இருக்கேன்னு என்ன நீ குத்தி காட்டுறியா என்று கேட்க, அதற்கு அம்மா நான் அப்படி கேட்கல உன் மனசாட்சி தான் உன்னை கொல்லுது என்று பதிலடி கொடுக்கிறார். அந்த நேரத்தில் கிரிஷ் வந்து அத்தை எப்ப வந்த? எப்படி இருக்க? நான் செகண்ட் ரேங்க் எடுத்திருக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கும்போது ரோகிணி அழுது இருப்பதை பார்த்து, ஏன் உன் கண்ணு சிவந்து இருக்கு? தூசி விழுந்துடுச்சா... நான் ஊதி விடவா என்று பாசமாக கேட்க,

அதற்கு ரோகிணி அவனை கட்டிப்பிடித்து அழுகிறார். அந்த நேரத்தில் விஜயா வீட்டிற்கு பார்வதி வருகிறார். வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் விஜயா சொல்ல அதற்கு பார்வதி இப்படி பணக்கார மருமகளை தொலைச்சிட்டு இருக்குற. அவ எங்க போனானு ஏதாவது தெரிஞ்சுதா இந்த காலத்து பெண்ணுங்க எல்லாம் சின்ன பிரச்சனை நாளும் உடனே அவங்க வாழ்க்கையையே வேண்டான்னு கோர்ட்டுக்கு போயிடுறாங்க அப்படி இல்லன்னா வாழ்க்கையை முடிச்சுக்கிறாங்க.

siragadikka aasai serial December January 11th episode Parvathi shows fear to Vijaya about Rohini

அதனால் மனோஜை ரயில்வே ட்ராக், மார்ச்சுவரியிலும் தேடி பார்க்க சொல்லு என்று பார்வதி பேசிக்கொண்டே போக விஜயா பயத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார். பிறகு பார்வதி சரி ஏதாவது தகவல் தெரிஞ்சா சொல்லு என்று கிளம்பி விடுகிறார். அதைத் தொடர்ந்து மறுபக்கத்தில் முத்து மனோஜை திட்டிக்கொண்டே வர அதற்கு மனோஜ் இனி உங்கார்ல வரல நான் நடந்தே தேடுகிறேன் என்று காரில் இருந்து இறங்குகிறார்.

அந்த நேரத்தில் அங்கு கிரிஷ் பந்து விளையாடிக் கொண்டிருக்க அந்த பந்து முத்துவின் காரில் விழுந்து விடுகிறது. முத்துவும் மீனாவும் கிரிஷை பார்த்ததும் என்ன இங்கே இருக்கிறா என்று நலம் விசாரித்துக் கொண்டு இருக்கின்றனர். அப்போது கிரிஷ் தன்னுடைய வீட்டிற்கு முத்து மற்றும் மீனாவை கூட்டிக்கொண்டு போகிறார். அந்த நேரத்தில் ரோகினி அம்மாவிடம் திரும்பவும் நான் அந்த வீட்டுக்கு போறதா இல்ல.

siragadikka aasai serial December January 11th episode Parvathi shows fear to Vijaya about Rohini

தினம் தினம் அவங்கள சமாளிக்க முடியல என் மாமியார் வேற உங்க அப்பா எப்ப வருவார் என்று கேட்டுக்கிட்டே இருக்காங்க என்று சொல்லிக்கொண்டு நான் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்று படுக்கப் போகும் நேரத்தில் தெருவில் ஒரு கார் நிற்கும் சத்தம் கேட்கிறது. அதை ரோகிணி எட்டிப் பார்க்க அங்கே மனோஜ், முத்து, மீனா வந்திருப்பதை பார்த்த அதிர்ச்சி அடைகிறார். அதனால் தன்னுடைய செருப்பு, பேக் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு பின்பக்கமாக ஓடி ஒளிந்து கொள்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+