சிறகடிக்க ஆசை: சிந்தாமணி வீட்டில் முத்து கண்டுபிடித்த உண்மை.. ஸ்ருதி கொடுத்த சர்ப்ரைஸ், கடைசியில் செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் 28ஆம் தேதிக்கான எபிசோடில் மீனாவின் பணத்தை சிந்தாமணியின் வீட்டில் இருந்து எடுப்பதற்காக முத்து பெரிய பிளான் போட்டு இருக்கிறார். கடைசியில் அந்த பிளானில் முத்து ஜெயித்தாரா? இல்லையா? என்பதுதான் கதை. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து சிந்தாமணி வீட்டிற்கு போய் இன்கம் டேக்ஸ் ஆபிஸராக நடித்து பணத்தை எடுத்துட்டு வரணும் என்று சொன்னதும் ரவி பயப்படுகிறார். ஆனால் ஸ்ருதி நான் பண்றேன் என்று ஒத்துக் கொள்கிறார். நான் நிறைய டப்பிங் பேசியிருக்கிறேன் அதனால எந்த இடத்தில் என்ன பண்ணனும்னு எனக்கு கண்டிப்பா தெரியும் என்று ஸ்ருதி தைரியமாக சொன்னதும் வேறு வழியில்லாமல் ரவியும் ஒத்துக்கொள்கிறார்.

வீட்டுக்குள் சென்ற முத்து குரூப்
பிறகு மறுநாள் காலையில் நான்கு பேரும் இன்கம் டேக்ஸ் ஆபிஸர்ஸ் போல கெட்டப் போட்டுக்கொண்டு சிந்தாமணி வீட்டிற்கு முன்பு காத்துக் கொண்டிருக்கிறார்கள். சிந்தாமணி அந்த நேரம் வேலை பார்ப்பவர்களிடம் மண்டபத்தில் இருந்து பணம் கொண்டு வருவாங்க வாங்கி வைங்க என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறார் இதை மறைந்து இருந்து கவனித்த முத்து சிந்தாமணி காரில் ஏறி செஞ்சதும் வீட்டிற்குள் போகிறார்கள்.
ஏமாந்த ஆட்கள்
அப்போதும் ரவி இவங்கள பார்த்தாலே எனக்கு பயமாயிருக்கு என்று சொல்கிறார். அதற்கு ஸ்ருதி தைரியம் கொடுத்ததும் உள்ளே எல்லோரும் போகிறார்கள். வீட்டிற்குள் இவர்களை பார்த்ததும் எல்லோரும் யாருன்னு தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒருவர் காசு கொடுக்க வருவாங்கன்னு சொன்னாங்களே அவர்களா இருக்கும் என்று சொல்கிறார். அதற்கு ஸ்ருதி ஹிந்தியில் பேச அதை அறிந்திருப்பவர்கள் புரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முத்துவின் நாடகம்
அப்போது ரவி சுருதி என்ன சொல்கிறார் என்று இங்கிலீஷில் சொல்கிறார். அதுவும் அங்கிருப்பவர்களுக்கு புரியவில்லை பிறகு முத்து தமிழில் நாங்கள் இன்கம் டேக்ஸ் ஆபிசர் என்று சொன்னதும் அவர்கள் அப்படினா என்ன என்று கேட்கிறார்கள். நாங்க வருமானவரித்துறையில் இருந்து வருகிறோம், சிந்தாமணி அரசாங்கத்துக்கு கணக்குல காட்டாத பணத்தை சேர்த்து வச்சிருக்காங்கன்னு எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது.
ஸ்ருதியின் ஆக்ஷன்
நாங்க சோதனை பண்ண போறோம் என்று சொன்னதும் அங்கு இருப்பவர்கள் எங்க அம்மா அப்படி எல்லாம் பண்ணி இருக்க மாட்டாங்க, ஆனா அவங்களுக்கு போன் பண்ணுவேன் என்று சொன்னதும் ஸ்ருதி அங்கு இருப்பவர்கள் போனை வாங்கி வைத்துக் கொள்ள அதனால் அங்கிருப்பவர்கள் எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அப்போது முத்து, ஸ்ருதி, ரவி, செல்வம் என நான்கு பேரும் பணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

பணம் கிடைத்தது
அதே நேரத்தில் பார்வதி வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த சிந்தாமணிக்கு வயிறு சரியில்லாமல் போகிறது. இதனால் இப்போ பார்வதி வீட்டுக்கு போக வேண்டாம் நாம வீட்டுக்கு போகலாம் என்று காரை திருப்பி வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்துவின் கையில் பணத்தை எடுத்து பார்த்ததும் இதுதான் மீனாவின் பணம் என்று புரிந்து கொள்கிறார். உடனே டேய் ரவி, பல குரல் என்று முத்து கூப்பிட எல்லோரும் அங்கு ஓடி போகின்றனர். பிறகு பணத்தை எடுத்தாச்சு என்று சொன்னதும் வாங்க இந்த இடத்தை விட்டு நம்ம வேகமா வெளியே போகணும் என்று கிளம்புகிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications