சிறகடிக்க ஆசை: விஜயாவுக்கு பார்வதி சொன்ன புத்திமதி.. மீனா செய்த குழப்பம்.. அண்ணாமலையின் மன மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஆம் ஆண்டில் ஜனவரி இரண்டாம் தேதிக்கான எபிசோடில் மீனா அண்ணாமலையிடம் ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் பிரிந்து இருப்பது பற்றி ஃபீல் பண்ணி பேச அந்த நேரத்தில் வரும் விஜயா கோவப்பட்டு மீனாவை திட்டுகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா எத்தனை முறை அவமானப்பட்டாலும் மீண்டும் மீண்டும் மனோஜ் மற்றும் ரோகினி விஷயத்தில் தலையிட்டு மூக்கு உடைவது தான் வாடிக்கையாக இருக்கிறது. அதாவது இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா தன்னுடைய டெக்கரேஷன் மாடலை ஒரு திருமணம் மண்டபத்தில் செய்து வைத்திருக்கிறார்.

siragadikka aasai serial vijay tv

அப்போது முத்து நான் உனக்கு துணைக்கு இருக்கிறேன் என்று நின்று கொண்டிருக்கிறார். அதற்கு மீனா நீங்க எனக்கு எந்த இடத்திலும் துணையாக வந்துட்டு இருந்ததா இவன் பொண்டாட்டிக்கு உதவி செஞ்சிட்டு இருக்கிறான். இவன் இல்லாமல் அவளால் எதுவும் செய்ய முடியாதுனு சொல்லுவாங்க. என்னால் என்னுடைய பிசினஸை சரியாக கவனிக்க முடியும் நீங்க போங்க என்று முத்துவை அனுப்பி வைக்கிறார்.

பிறகு மீனாவின் பிசினஸ் எதிரி அங்கு வருகிறார். அந்த பெண் மீனா செய்து வைத்திருக்கும் மாடலை பார்த்து கிண்டல் செய்கிறார். அப்போது அந்தப் பெண்ணோடு வந்தவர்கள் மீனா செய்து வைத்திருந்த டிசைனை உடைத்து குப்பையில் போடுகிறார்கள். இதனால் கோபமான மீனா நீங்க இன்னைக்கு குப்பையில் போட்ட பொருள் நாளைக்கு கோபுரமாக உயர்ந்து நிற்கும்.

இதே பிசினஸில நான் கொடிகட்டி பறக்கும் காலம் வரும். எனக்குன்னு இந்த இடத்தில் ஒரு அடையாளத்தை உருவாக்குவேன் என்று அந்த பெண்ணிடம் சபதம் போட்டு விட்டு அங்கிருந்து கிளம்புகிறார். மறுபக்கத்தில் விஜயா பார்வதி வீட்டிற்கு வருகிறார். பார்வதி இடம் எதுக்காக என வர சொன்ன என்று கேட்க பார்வதி நீ என்ன சில நாட்களாக டேன்ஸ் கிளாசுக்கு வராததால் நான் தான் எனக்கு தெரிஞ்ச ஸ்டெப்பை சொல்லிக் கொடுத்துட்டு இருக்கேன்.

siragadikka aasai serial vijay tv

நீ ஏன் வரல என்று கேட்க, நான் விஜயா வீட்டில் நடந்த பிரச்சனைகள் எல்லாவற்றையும் சொல்கிறார். அதற்கு பார்வதி ஏற்கனவே ரோகிணி தன்னிடம் எல்லா விஷயத்தையும் சொல்லி இருந்தாலும் எதுவும் தெரியாதது போலவே அவரிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு ரோகிணி பாவம் அவள் நீ கொண்டுவந்த மருமகள் இப்படி நீ கோபப்பட்டு பேசாமல் இருந்தால் நாளைக்கு அவளுடைய அப்பாவின் சொத்து வரும்போது அவள் உன்னுடைய மகனை கூட்டிட்டு தனியா போயிருவா.

இப்போ நான் தனியா இந்த வீட்டில் இருப்பது போல நாளைக்கு நீயும் இருக்கணும் என்று பயமுறுத்துகிறார். அதற்கு விஜயா மனோஜ் போக மாட்டான் என்று சொல்ல, உன் மகன் ஏற்கனவே 27 லட்சத்தோடு ஜீவாவை கூட்டிக்கொண்டு உன்னை விட்டு போகத் துணிந்தவன் தானே என்று சொன்னதும் விஜயாவிற்கு பயம் வருகிறது.

மறுபக்கத்தில் வீட்டிற்கு வந்த மீனா அண்ணாமலை இடம் சாப்பிட்டாச்சா என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ரோகிணி மற்றும் மனோஜ் இருவரும் விஜயாவால் பேசாமல் இருப்பதாகவோ விஜயா பேசவிடாமல் செய்வதால் ரோகினி சாப்பிடாமல் இருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதனால் ரோகிணிக்கு சப்போர்ட் செய்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்து விஜயா மீனாவை திட்டுகிறார். நீ எதற்காக தேவை இல்லாத விஷயத்தில் தலையிடுற என்று திட்டுகிறார். பிறகு அண்ணாமலை விஜயாவிடம் ரோகிணியும் மனோஜும் மனம் விட்டு பேசினால் தான் அவங்க இன்னொரு முறை இதுபோல தப்பு பண்ண மாட்டாங்க என்று சொல்கிறார்.

அதற்கு விஜயா இன்னொரு முறை இப்படி தப்பு பண்ணுவாளா? என்று கோபப்படுகிறார். அதற்கு அண்ணாமலை உன் மகன் என்ன மூன்று மாத குழந்தையை அவனுக்கு எதுவும் தெரியாதா? என்று கேள்வி கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+