சிறகடிக்க ஆசை: முத்து பார்த்த விஷயம்.. நகை திருட வந்த இடத்தில் வசமா சிக்கிய பிஏ.. ஸ்ருதி செய்த செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூலை நான்காம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி பிளான்படி பிஏ விஜயா வீட்டுக்கு நகை திருட வருகிறார். ஆனால் அங்கு மீனா மற்றும் ஸ்ருதியிடம் வசமாக சிக்கி இருக்கிறார். மறுபக்கத்தில் முத்து பார்வதி வீட்டிற்கு வந்து இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணி தூக்கத்தில் கத்தியதால் குடும்பத்தில் எல்லோரும் எழுந்து வந்து நின்று என்னாச்சு என்று கேட்கின்றனர். அப்போது தூக்கத்தில் ரோகிணி கத்தியது தெரிந்ததும் விஜயா யாரையும் நிம்மதியா தூங்க விட மாட்டியா என்று திட்டி விட்டு போகிறார். அதனால் தூக்கம் வராமல் இருக்கும் ரோகிணி பிஎவுக்கு போன் போடுகிறார். நான் யாரும் இல்லாத நேரம் பார்த்து சொல்லுறேன் நீ வந்து நகையை எடுத்துட்டு போ என்று சொன்னதும் சிட்டியும் இதுவும் நல்ல ஐடியா தான், நகை காணாம போயிடுச்சுன்னா அந்த சத்யா என்கிட்ட பணத்துக்கு வருவான் என்று சொல்கிறார்.

மறுநாள் காலையில் விஜயா டான்ஸ் கிளாஸில் டான்ஸ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது அங்கிருக்கும் ரதி தண்ணீர் குடிக்க போகிறார். பின்னாடியே அவருடைய காதலனும் சேர்ந்து போகிறார். இருவரும் ரொமான்ஸ் பண்ணி கொண்டு இருக்கின்றனர். அப்போது முத்து பழங்கள் பத்திரிக்கையுடன் பார்வதி வீட்டிற்கு வந்து மீனா தங்கச்சி கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்கிறார்.
அதை பார்த்ததும் பார்வதி முத்துவை பாராட்டி பேசுகிறார். அதற்கு வழக்கம் போல விஜயா கோபப்படுகிறார். பிறகு பார்வதி பத்தாயிரம் பணத்தை எடுத்து வந்து கல்யாணத்திற்கு செலவுக்கு வச்சுக்க என்று சொல்ல விஜயா உன்கிட்ட என்ன பணம் அதிகமா இருக்கா என்று கேட்டார். அதற்கு முத்து நீங்களே உங்க பையன் இல்லாமல் தனியா இருக்கீங்க என்று சொல்ல, என் பையன் வரலனாலும் காசு அனுப்பிடுவான் இதை நீ வச்சுக்கப்பா என்று வற்புறுத்தி கொடுக்கிறார்.
பிறகு முத்து அங்கிருந்து கிளம்பும்போது ரூமில் சிரிப்பு சத்தம் கேட்பதை பார்த்து யார் என்று திறந்து பார்க்க, அங்கு இருவரும் கொஞ்சி பேசுகின்றனர். முத்துவை பார்த்ததும் நடிக்கின்றனர். பிறகு அவர்களை அங்கிருந்து அனுப்பி விட்டு பார்வதியிடம் டான்ஸ் நடக்கும் ரூம் தவிர மற்ற ரூமை பூட்டி வைக்க சொல்லிவிட்டு போகிறார். மறுபக்கத்தில் வீட்டில் ஸ்ருதி மற்றும் மீனா நகை வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் வைக்கின்றனர்.
அப்போது மீனா வெளியே கடைக்கு போயிட்டு வரவேண்டும் என்று கிளம்புகிறார். அப்பொழுது ரோகிணியும் எனக்கு வேலை இருக்கிறது என்று வீட்டில் இருந்து கிளம்புகிறார். மீனா சாவியை எங்க வைக்கிறார் என்பதை கவனித்து விட்டு, மீனா போனதுமே அப்படியே ரோகிணி போன் போட்டு விஷயத்தை சொல்கிறார்கள். உடனே பிஏ வந்து நகைகளை எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது மனோஜ் சரியாக உள்ளே வந்து விடுகிறார்.
மனோஜ் பிஏவை பார்த்ததும் அதிர்ச்சியாகி யாருடா நீ என் வீட்டுக்குள் இருந்து வர என்று உள்ளே தள்ளி அடிக்க, பிஏ மனோஜ் கண்ணாடியை எடுத்து விடுகிறார். இதனால் மனோஜ்க்கு கண்ணு தெரியாமல் போய்விடுகிறது. தன்னுடைய தலையில் போட்டிருந்த மாஸ்க்கை மனோஜ் தலையில் போட்டுவிட்டு பிஏ வெளியே ஓடி வரும் போது மீனாவும் ஸ்ருதியும் வந்து விடுகின்றனர்.
அவர்கள் பிஏவை அடிக்கின்றனர். அப்போது மனோஜ் தலையில் மாஸ்க் மாட்டப்பட்டிருப்பதால் இவரும் திருடன் என்று ஸ்ருதி அவரை போட்டு அடிக்கிறார். ஆனால் பி ஏ தப்பித்து ஓடி விடுகிறார். அவன் போனால் போகட்டும் இவன் இருக்கிறான் இவனை பார்த்துக்கொள்ளலாம் என்று ஸ்ருதி மனோஜை போட்டு அடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications