எங்க ஆத்தா புது துணி போட்டதே இல்ல.. எனக்கு முதல் ஹீரோ எங்க மாமா! கார்த்தி பேச்சு.. சிவகுமார் எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கார்த்தி மெய்யழகன் திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது எங்க ஆத்தா புது துணி போட்டு நான் பார்த்ததே கிடையாது, அவங்க எப்போதும் குடும்பத்திற்காக வேலை செய்து கொண்டே இருப்பார்கள். என்னுடைய ஃபர்ஸ்ட் ஹீரோவே எங்க மாமா தான் என்று பேசியது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் முன்னணி நடிகர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். சிவகுமார் சில வருடங்களுக்கு முன்பு சினிமா மற்றும் சீரியலை விட்டு விலகி இருந்தார். அது குறித்து அவர் ஏற்கனவே சில பேட்டிகளில் பேசும்போதும் நான் செல்ஃப் ரெஸ்பெக்ட் வேண்டும் என்று நினைப்பவன்.

television sivakumar karthi

நாம் செய்யும் வேலையை உண்மையாகவும் சரியாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். நான் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சீரியலில் தான் எனக்கு அதிக வருமானம் கிடைத்தது. சித்தி, அண்ணாமலை போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறேன். நான் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு காட்சியில் நான் பாசமலர் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு தங்கச்சி மீது இருக்கும் தனக்குள்ள பாசத்தை வெளிப்படுத்துவாரோ அதுபோல நான் இரண்டு நாட்கள் தூங்காமல் அந்த காட்சிக்காக என்னை தயார்படுத்தி நடித்தேன்.

ஆனால் அங்கிருந்த ஒரு பெண் என்னை அலட்சியமாக பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தார். நான் கஷ்டப்பட்டு நடித்துக் கொண்டிருக்கும் போது அவர் அங்கிருந்து செய்த செயல் என்னை வருத்தமடைய செய்தது. அதனால் நான் சினிமாவே இனி வேண்டாம் என்று விட்டுவிட்டேன். ஆனால் என்னுடைய மகன்கள் அந்த சினிமாவில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அது பிடிக்கிறது என்றால் அவர்கள் வழியில் போகட்டும் என்று நானும் விட்டு விட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.

சூர்யா ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக நடித்து வந்த நிலையில் இப்போது கெத்தான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல கார்த்தியும் தன்னுடைய இயல்பான நடிப்பை காட்டிக் கொண்டிருக்கிறார். கார்த்தி நடிப்பில் மெய்யழகன் திரைப்படத்திற்கான ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அப்போது கார்த்தி பேசியதை கேட்டு சிவகுமார் உட்பட அவருடைய குடும்பத்தில் இருந்த எல்லோரும் கண்கலங்கி இருக்கின்றனர்.

கார்த்தி பேசுகையில் என்னுடைய ஆத்தா புது துணி போட்டு நான் பார்த்ததே இல்லை. அவங்க வீட்டில் சமைப்பாங்க குளிச்சிட்டு வருவாங்க திரும்ப சமைப்பாங்க அந்த அன்புக்காக தான் இந்த மெய்யழகன் திரைப்படம். அது போல எங்க பெரியம்மா எங்க வீட்டில் எட்டு பேருக்கு சலிக்காமல் சமைச்சு போடுவாங்க. பெரியம்மாவும் ஆத்தாவும் விறகு அடுப்புல தான் சமைக்கணும். எப்போதும் போதுமானு கேட்க மாட்டாங்க.

television sivakumar karthi

அதுபோல எங்க பெரியம்மா எப்பவும் குளிச்சு சுத்தமா வேர்வை இல்லாம நான் பார்த்ததே கிடையாது. அவங்கள பெருமைப்படுத்துற மாதிரி ஒரு படத்தை நான் எடுத்துட்டு அந்த படத்தை இங்க பங்க்ஷன் பண்ணுனா தான் பெருமை என்பதற்காக தான் நான் இங்கே பண்ணினேன். எங்களுக்கு ஃபர்ஸ்ட் ஹீரோவே எங்க மாமா தான். கிணத்துல மேலிருந்து குதிக்கலைன்னா நீ ஆம்பளையே இல்லைன்னு எங்கள உசுப்பேத்தி 20 அடியில் இருந்து குதிக்க வச்சிருவாரு.

அப்புறமா நீ மெட்ராசுக்கு போனா நீதாண்டா ஹீரோ என்று நம்முடைய மனதை மாற்றியது என எல்லா விஷயத்தையும் செய்தார். சம்மர் விடுமுறைக்கு ஸ்பெஷல் கிளாசுக்கு போறத விட அமச்சி வீட்டும், அத்தை வீட்டுக்கும், சித்தப்பா வீட்டுக்கும் போறது தான் ஸ்பெஷல் என்று நான் நினைக்கிறேன். இப்போதைய காலகட்டத்தில் எல்லோரும் செல்போனுக்குள் முடங்கி விட்டோம் ஆனால் எனக்கு என்னுடைய பழைய நினைவுகளை கொண்டு தந்தது இந்த திரைப்படம் தான்.

இந்த திரைப்படத்தின் கதையை ஒரு புக்காக என்னிடம் கொடுத்தார்கள் அந்த புத்தகத்தை படித்து பல இடங்களில் நான் அமெரிக்காவில் படித்திருந்தாலும் என்னுடைய அத்தை வீட்டிலும் பெரியப்பா வீட்டிலும் எனக்கு கிடைத்த பாசம், அனுபவம் காரணமாகத்தான் அந்த புத்தகத்தை என்னால் முழுமையாக படிக்க முடிந்தது என்று அந்த பேட்டியில் கார்த்தி பேச பேச அவருடைய அப்பா சிவகுமார் சூர்யா மற்றும் கார்த்தியின் குடும்பத்தினர் எல்லோரும் எமோஷனலாகி இருக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+