Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒல்லிக்குச்சி நடிகை நீலாங்கரை பீச் ரோட்டில் போட்ட ஆட்டம்! சென்னை ரிசார்ட்டில் நடிகரின் பார்ட்டி?: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்பாவை எதிர்த்துதான் வந்தனாவை திருமணம் செய்தார்.. வீடு வாடகைக்கு செல்லலாம் என்றபோதுகூட, சினிமாக்காரர் என்பதால் தனக்கு யாருமே வாடகைக்கு வீடு தரவில்லை என்று ஒருமுறை ஸ்ரீகாந்த் வருத்தப்பட்டு கூறியிருந்தார். தற்போது வந்தனாவுடன் அவர் இருந்தாலும், அவர் மட்டுமே தன்னுடைய மகனை கவனித்து கொள்ள முடியாது என்று ஸ்ரீகாந்த் ஜாமீனில் கோரியிருந்தும், அந்த காரணம் பரிசீலிக்கப்படவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Frontvoods TV என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "கொகைன் சாப்பிடும்போது, பசி எடுக்காது.. உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், எடையை மெயின்டெயின் செய்ய நினைப்பவர்கள் கொகைன் பயன்படுத்துவார்கள்..

Television slim actress chennai Neelankarai

சிட்டிகை அளவு நாக்கில் வைத்தாலே ரூ.12000 காலி.. இதே சிட்டிகை கொக்கைன் 40 ஆயிரம் விலையில் உள்ளது.. அது இன்னும் இந்தியாவுக்குள் வரவில்லை.. 45 நாட்கள் ரத்தத்தில் படிந்திருக்கும் கொக்கைன்.. வாடையும் வெளியே வராது..

விளையாட்டு வினை

விளையாட்டாக ஆரம்பித்து வினையாகிவிட்டது.. ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் நண்பர்கள்.. இருவரும் சங்கேத மொழியில் பேசியதால்தான், சிக்கியிருக்கிறார்கள்.. கொக்கைன் விற்பனை செய்வது உறுதியானால், 10 வருடம் தண்டனை கிடைக்கலாம் என்கிறார்கள்.. எனினும், இருவரின் கேரியரே கிட்டத்தட்ட முடிந்தது போலத்தான்..

கொக்கைன் சம்பவம் கேரளாவிலும் ஊடுருவியுள்ளதால், அங்கேயும் தமிழக போலீஸார் சென்று விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. ஏற்கனவே கேரள சினிமாவில் இந்த போதைப்பொருள் கலாச்சாரம் உள்ளது.. நடிக்க வருவதற்கு முன்பே, தண்ணி அடிக்க மாட்டேன், போதை மருந்து உட்கொள்ள மாட்டேன் என்றெல்லாம் எழுதி தந்துவிட்டுதான், அதற்கு பிறகு நடிக்க வரவேண்டும் என்று அங்குள்ள நடிகர் சங்கர் அம்மா, தெரிவித்துள்ளது..

தமிழகத்தில் அனுமதி பெற்ற டாஸ்மாக் கடைகள் தவிர, கஞ்சா, கொக்கைன் போன்றவற்றில் சிறுவர்கள், மாணவர்கள் பலர் சிக்கி கொள்வதால், முழுமையாகவே இந்த போதையை அகற்ற தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.. ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைதானது, தமிழ் சினிமாவில் கலக்கத்தை உண்டுபண்ணியிருக்கிறது..

ஒல்லிக்குச்சி நடிகை

ஏற்கனவே அந்த ஒல்லிக்குச்சி நடிகை, தான் ஒரு முன்னணி நடிகை, செலிபிரிட்டி என்பதையெல்லாம் மறந்து, நீலாங்கரை ரோட்டில் மதுஅருந்திவிட்டு டான்ஸ் ஆடி ரகளை செய்திருந்தார்.. அப்போது நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர்தான் விரைந்து சென்று,
நீங்களே இப்படி செய்யலாமா? என்று சொல்லி, மீட்டு பத்திரமாக அழைத்து சென்றுள்ளார்..

அதேபோல, இளம் இசையமைப்பாளர், மற்றும் மனைவியை உதறித்தள்ளிவிட்டு, தோழியுடன் ஊர் சுற்றிவரும் பிரபலம் உட்பட பார்ட்டிகள் நிறைய தருபவர்கள்.. அந்த பார்ட்டிகளில் கொக்கைன் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்றும் போலீசார் விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.

சமீபத்தில் பாடகி சுசித்ராவும், கொக்கைன் பயன்படுத்துவோர் குறித்து சில விஷயங்களை கூறியிருந்தார். ஏற்கனவே, டாப் ஸ்டார் நடத்திய பார்ட்டியில் வெள்ளி தட்டில் கொக்கைன் தந்ததை தான் பார்த்ததாக கூறியவர் சுசித்ரா.. கொக்கைன் சாப்பிட்டால், எப்படிப்பட்ட பாதிப்பு, ஏற்படும் என்பதை கூகுளில் சென்று தேடிப்பார்த்தால் கிடைக்கும்.. அதில் உள்ள பாதிப்புகளில் தற்போது எந்த நடிகர்கள் உள்ளார்களோ, அவர்கள் எல்லாம் கொக்கைன் பயன்படுத்துபவர்கள்தான் என்று சொல்லி உள்ளார்.

டாஸ்மாக், கஞ்சா

என்னுடைய வேண்டுகோள், தயவுசெய்து டாஸ்மாக் பக்கம் போக வேண்டாம்.. தெரிந்தோ தெரியாமலோ பணக்கார நண்பர்கள் கொக்கைன் பயன்படுத்தினால், அவர்களுடன் தொடர்பை துண்டித்து விடுங்கள்.

ஸ்ரீகாந்த் அன்று அனைத்தையும் செய்துவிட்டு இன்று கதறுகிறார்.. ஸ்ரீகாந்த் அப்பா, ஆந்திராவில் ஸ்டேட் பாங்க் மேனேஜராக உள்ளார்.. அம்மா கும்பகோணத்தை சேர்ந்தவர்.. 10 லட்சம் வாங்குபவரை, 50 லட்சம் வாங்கும்படி சொல்லி, ஸ்ரீகாந்த்தை கெடுத்ததில் அவரது அப்பாவுக்கும் பங்குள்ளது..

வாடகை வீட்டை தேடி சிரமப்பட்ட நடிகர்

எனவே, அப்பாவை எதிர்த்துதான் வந்தனாவை திருமணம் செய்தார்.. வீடு வாடகைக்கு செல்லலாம் என்றபோதுகூட, சினிமாக்காரர் என்பதால் தனக்கு யாருமே வாடகைக்கு வீடு தரவில்லை என்று ஒருமுறை ஸ்ரீகாந்த் வருத்தப்பட்டு கூறியிருந்தார்.

தற்போது வந்தனாவுடன் அவர் இருந்தாலும், அவர் மட்டுமே தன்னுடைய மகனை கவனித்து கொள்ள முடியாது என்று ஸ்ரீகாந்த் ஜாமீனில் கோரியிருந்தார். ஆனால், நோயாளி அப்பா, நோயாளி பையன், என்றெல்லாம் யார் சொல்லி ஜாமீன் கேட்டாலும், இவை யாவும் ஜாமீனுக்கான காரணமாக அமையாது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+