லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வான்டட் ஆக வாழ்த்து சொன்ன கிரிக்கெட் பிரபலம்.... கடவுள் இருக்காரு..!!
சென்னை : சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் தான் இயக்கும் ஐந்தாவது படத்தில் ஒரு நடிகரை அறிமுகப்படுத்துவதை குறித்து பெருமையாக கூறியுள்ளார்.
இதுவரை தான் அறிமுகப்படுத்திய நடிகர்கள் தமிழ் சினிமாவின் சொத்தாக மாறி உள்ளார்கள் என்றும் சிலாகித்து போட்டிருந்த பதிவிற்கு இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
பதிலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணனும் தன்னுடைய நன்றியை அந்த கிரிக்கெட் பிரபலத்துக்கு கூறியுள்ளார்.

இயக்குனராக லட்சுமி ராமகிருஷ்ணன்
நடிகராகவும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் மக்களிடம் நன்கு பிரபலமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு சிறந்த இயக்குனரும் கூட, அவருக்குள் இருக்கும் இயக்குனர் திறமைக்கு அவ்வப்போது அவரும் வேலை கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார். ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மானி,ஹவுஸ் ஓனர், போன்ற நான்கு படங்களை இயக்கி முடித்துள்ளார்.தற்பொழுது இளையராஜா இசையமைப்பில் சமுத்திரகனி, மிஸ்கின், ஆடுகளம் நரேன், அபிராமி, அனுபமா குமார், ரோபோ சங்கர் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து தனது ஐந்தாவது படத்தை இயக்கி வருகிறார்.

தரையில் அமர்ந்த சர்ச்சை
பொதுவாக புரட்சி கருத்துக்களையும், பெண்ணியம் போற்றும் விஷயங்களைப் பற்றியும் பேசும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது படத்தின் இசை சம்பந்தமான கலந்துரையாடலின் போது இசையமைப்பாளர் இளையராஜா முன்பு தரையில் அமர்ந்திருந்த புகைப்படம் கூட சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இளையராஜா தனது தந்தை போன்றவர் என்றும், அவரைப் போன்ற படைப்பாளர்கள் கடவுள் போன்றவர்கள் என்றும், இளையராஜா முன்பு அப்படி அமர்வது தன்னுடைய சுய விருப்பம் என்றும் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்திருந்தார்.

படம் தரத்திற்கு ஏற்ற வசூல் இல்லையே
பெயருக்காகவும், புகழுக்காகவும் தான் படம் எடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், தான் பெரும்பாலும் தனது மனதுக்கு நெருக்கமான உண்மை சம்பவங்களையே அடிப்படையாக வைத்து படத்தை எடுப்பதாகவும், அதன் மூலம் ஏதேனும் கருத்து மக்களிடம் சென்றடைவதையே தான் விரும்புவதாகவும் கூறியிருந்தார். சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமா பற்றிய எந்த அறிவும் இல்லாத நிலைமையில் இருந்து வந்து படம் இயக்கும் அளவிற்கு தான் வளர்ந்திருப்பதையே தான் பெருமையாக கருதுவதாக தன் கருத்தை பதிவு செய்திருந்தார்.

வாழ்த்திய கிரிக்கெட் பிரபலம்
சமீபத்தில் தன்னுடைய ஐந்தாவது படத்தில் சி.ஜி குமார் என்ற நடிகரை அறிமுகப்படுத்துவதை குறித்து பதிவு செய்திருந்த லட்சுமி ராமகிருஷ்ணன்.."கடவுளின் அருளால் எனது இயக்கத்தில் அறிமுகமான நடிகர்கள் தங்களை சிறந்த நடிகர்களாகவும், தமிழ் சினிமாவின் சொத்தாகவும் நிரூபித்துள்ளனர்.இந்த முறை இன்னும் நம்பிக்கைக்குறிய சிலரை அறிமுகப்படுத்துகிறேன். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அந்தப் பட்டியலில் முதலிடம் சிஜி குமார்க்கு.."என்று பதிவு செய்திருந்தார். இந்த பதிவை பார்த்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தனது வாழ்த்துக்களையும்,கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் என்றும் பதிவிட்டுள்ளார். பதிலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணனும் தனது நன்றியை தெரியப்படுத்தியுள்ளார். இந்த பதிவுகள் தற்பொழுது ட்விட்டரில் லட்சுமி ராமகிருஷ்ணன் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications