• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஷிவானி போனா என்ன.. அதான் ஸ்ரீரஞ்சனி சைஸா வந்து உக்காந்துட்டாங்கள்ள.. இது போதும் கடவுளே!

|

சென்னை: ஷிவானி நாராயணன் பிக் பாஸ் வீட்டுக்குள் போனாலும் போனார் அவரது ரசிகர்கள் காட்டுக்குள் தனித்து விடப்பட்டது போல தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த நிலையில்தான் அவர்களின் மனசில் பால் வார்ப்பது போல வந்து சேர்ந்துள்ளார் ஸ்ரீரஞ்சனி.

பல நடிகைகள் கஷ்டப்பட்டு நடிச்சு வருடக்கணக்கில் நடித்த திரைப்படங்களில் வாங்கும் பெயரையும் இப்ப எல்லாம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் போட்டோ ஷூட் நடத்தி அசால்டாக தட்டி விடுகிறார்கள். அந்த மாதிரிதான் ஷிவானியும் ஒருவர்.

இவர் இன்ஸ்டாகிராமில் நாலு மணிக்கு போஸ்ட் போட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் அவருக்கான ஒரு இடத்தையும் பிடித்து விட்டார். ஆனால் தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார்.

ஃபுல்லா ப்ளூ.. பளிச்சுன்னு தூக்கல் அழகுடன்.. பிரியங்கா நல்கரி!ஃபுல்லா ப்ளூ.. பளிச்சுன்னு தூக்கல் அழகுடன்.. பிரியங்கா நல்கரி!

தலைவி இடத்தில் இன்னொரு தலைவி

தலைவி இடத்தில் இன்னொரு தலைவி

ஷிவானி இப்படிப் போய் விட்டதால் அவரது ரசிகர்கள் சோகமாகி விட்டனர். காய்ந்து கருவாடு போலாகி விட்டனர். ஆனால் அவரது இடத்தை அலேக்காக நிரப்ப வந்து விட்டார் ஸ்ரீரஞ்சனி. இவர் டிவி தொகுப்பாளர். ஸ்ரீரஞ்சனி அவரைப் பற்றி ஒரு இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டிருக்கிறார் அது வைரலாக பரவி வருகிறது. அதுவும் எப்படி தெரியுமா.. 2 மணி ரஞ்சனி என்று அவருக்கு அவரே பெயர் சூட்டி பட்டையைக் கிளப்பியுள்ளார்.

4 மணி ராணி ஷிவானி

4 மணி ராணி ஷிவானி

லாக்டோன் டைம்ல தொடர்ந்து 4 மணிக்கு போஸ்ட் போட்டுக்கொண்டிருந்ததால் ஷிவானியை பார்த்து ரசிகர்கள் நாலு மணி ஷிவானி என்று செல்லமாக அழைத்து வந்தனர் . தற்போது அவருடைய போஸ்ட்டை காணாத பல ரசிகர்களும் அவருக்காக பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் .அந்த அளவிற்கு அவருடைய ஃபேன்ஸ் அதிகமாகவே அவரை மிஸ் பண்ணுகிறார்கள்.

வந்துட்டாரு ரஞ்சனி

வந்துட்டாரு ரஞ்சனி

இந்த நிலையில்தான் டிவி தொகுப்பாளினியான ஸ்ரீரஞ்சனி ஒரு அதகள வீடியோ போட்டுள்ளார். அதில், வணக்கம் இன்றைய முக்கிய செய்திகள் நாலுமணி ஷிவானி பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கியிருக்கும் இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அவரது இல்லாமையே தீர்க்க 2 மணி ரஞ்சினி என்று யாரோ என்று வரப்போகிறார் என்று கலகலப்பாக கலாய்த்துள்ளார். அத்தோடு விட்டாரா.. ஷிவானி மாதிரி நீங்களும் குளுகுளுவென்று போட்டோ போடுவீர்களா என்று கேட்டால், இரண்டு மணிக்கு வந்து தினமும் பாருங்களேன் என்று கூறி சிரித்துள்ளார்.

பகலா ராத்திரியா

பகலா ராத்திரியா

ரஞ்சனியின் வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் இனி மதியம் எல்லாம் பிரியாணி தான் என்று கலாய்த்து வருகிறார்கள். சிலர் இரண்டு மணி என்று சொன்னீர்களே அது மதியம் ரெண்டு மணியா இல்லை நைட்டு ரெண்டு மணியா என்றும் நக்கலாக கேட்டு வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு புறம் ஷிவானி அங்கு இருப்பவர்களுடன் யாருடனும் மிங்கிளாகாமல் தனியே தன்னந்தனியே என்று இருக்கிறார். இதை வைத்து கலாய்க்கவும் ஹார்ட் பிரேக் என்று ஒதுக்கவும் ஆரம்பித்து விட்டனர்.

தலைவி தலைவி

தலைவி தலைவி

அவர் பாட்டுக்கு தகதகவென போட்டோ, வீடியோஸ் போட்டுக் கொண்டு கொளுக் மொழுக்கென திரிந்து கொண்டிருந்தார். அவரைப் பிடித்து இப்படி கூண்டில் அடைத்து விட்டார்களே என அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியிருக்கும்போது சற்றே ஆறுதலாக வந்துள்ளார் ஸ்ரீரஞ்சனி. அவர் இல்லாத இடத்தை பிடிக்க இன்ஸ்டாகிராமில் பலரும் கிளம்ப தான் செய்வார்கள். அந்த மாதிரிதான் சும்மாவே வீட்டில் இருக்கிற நேரங்களில் ரஞ்சினி ஆட்டம் பாட்டத்துடன் தான் இருப்பார். இனி கேட்கவே வேண்டாம் என்று பல ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

ரீல் அந்து போச்சு

ரீல் அந்து போச்சு

ஸ்ரீரஞ்சனி முதன்முதலில் மெட்ராஸ் சென்ட்ரல் என்ற யூடியூப் சேனலில் தொகுத்து வழங்கும் வீடியோ ஜாக்கி ஆக இருந்தார் . முத்து உடன் சேர்ந்து ரீல் அந்து போச்சு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இவர் தனது தைரியத்துக்குப் பெயர் பெற்றவர். மோசமான தமிழ் படங்களை மதிப்பாய்வு செய்யும் ஒரு நிகழ்ச்சி தான் ரீல் அந்து போச்சு. அவருடைய திருநெல்வேலி குசும்பு பேச்சாலும் சைகையாளும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தார்.

காதலுடன் கல்யாணம்

காதலுடன் கல்யாணம்

பிறகு சேனலில் இருந்து வெளியேறி டிவிகளில் தோன்ற ஆரம்பித்தார். பல டிவிக்களிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு சீரியல் நடிகரானார் அமித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவரும் காதல் ஜோடிகளாக உலா வந்து கொண்டிருந்தனர் .அந்த நேரத்தில்தான் சீரியல்கள் ஜோடி நம்பர் ஒன் சீசனிலும் கலந்து கொண்டு செம ஆட்டம் போட்டார்கள். இவர்களின் ஆட்டத்தை பார்த்து பல ரசிகர்களும் இவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர் .

சந்தோஷ வாழ்க்கை

சந்தோஷ வாழ்க்கை

இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னமும் கொஞ்சமும் காதல் குறையாமல் குழந்தைகளைப் போல என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் காதலுக்கு அடையாளமாக ஒரு குழந்தையும் இருக்கிறது. பெண் குழந்தை பிறந்த பிறகு இவர் கூடுதலாக புசுபுசுவென ஆகிவிட்டார் . தற்போது இந்த லாக்டோன் டைமில் வீட்டிலிருந்து அமித்தின் துணையோடு உடற்பயிற்சியை மேற்கொண்டு மீண்டும் பழைய ஸ்லிம்மாக மாறிவிட்டார்.

ஷிவானி இடத்தை நிரப்புவாரா

ஷிவானி இடத்தை நிரப்புவாரா

அடிக்கடி இவரும் இவருடைய கணவரும் பாட்டுப்பாடி வெளியிடும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார். தற்போது ஷிவானியின் இடத்தை இரண்டு மணிக்கு வந்து பிடிக்கப் போகிறேன் என்று இவர் கூறியிருப்பது இவருடைய ரசிகர்களுக்கு நல்ல என்டர்டைன்மென்ட் என்று கூறி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இனி நெட்டிசன்களுக்கு கலாய்க்கிறதுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று கூறி வருகிறார்கள்.

English summary
Compere Sriranjani says she will fill the gap of Shivani Narayanan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X