சன் டிவியில் விஜய் டிவி நடிகை நடிக்கும் மூன்று முடிச்சு சீரியல்.. அப்போ டாப் சீரியல் முடியப்போகிறதா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் நடித்த நடிகை சுவாதி சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் மூன்று முடிச்சு சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார். இதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் சன் டிவியில் முக்கிய சீரியல் முடிவடைய இருக்கிறது என்றும் தெரிகிறது. அதை பற்றி பார்க்கலாம்.
ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி மக்கள் மத்தியில் பிரபலம் அடைய தொடங்கிய காலகட்டத்தில் தூர்தர்ஷன் மட்டுமே இருந்து வந்த நிலையில் அந்த நேரத்தில் சன் டிவி புதியதாக சேனல் தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. ஆரம்பத்திலேயே மக்களை கவரும் விதத்தில் செய்திகள் மற்றும் சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பானதால் ரசிகர்கள் மத்தியில் தனக்குன்னு ஒரு இடத்தை பிடித்து விட்டது.

சன் டிவிக்கு போட்டியாக எத்தனையோ சேனல்கள் புதியது புதியதாக தொடங்கினாலும் இப்ப வரைக்கும் டிஆர்பியில் சன் டிவி சீரியல்களை அடித்துக் கொள்ள முடியாது என்ற நிலைமை தான் இருக்கிறது. ஆனாலும் சமீபத்தில் விஜய் டிவி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டு கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் விஜய் டிவியில் நடிக்கும் பல நடிகர்கள், நடிகைகள் தொடர்ச்சியாக சன் டிவி சீரியல்களுக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் அந்த சீரியலில் நடிகை ஆலியா மானசா சன் டிவியில் இனியா சீரியலுக்கு மாறியிருக்கிறார். அவருடைய கணவர் கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுபோல விஜய் டிவி மற்றும் ஜீ தமிழில் நடித்துக் கொண்டிருந்த நடிகை சைத்ரா ரெட்டி சன் டிவியில் சீரியலுக்கு மாறியிருக்கிறார். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் பிரபலமடைந்த கேப்ரில்லா மருமகள் சீரியலில் சன் டிவியில் நடிக்கிறார்.
அதுபோல ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் கேப்ரில்லாவின் அக்காவாக நடித்த நடிகை சுவாதி சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் மூன்று முடிச்சு சீரியலில் கதாநாயகியாக நடித்திருக்கும் நிலையில் அதற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது ஆனால் இந்த சீரியல் எப்போது இருந்து ஒளிபரப்பாக போகிறது என்று அதில் அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் இந்த சீரியல் எந்த நேரத்தில் ஒளிபரப்பாக போகிறது என்பது பற்றியும் அதில் தெரிவிக்கப்படவில்லை.

சீரியலின் ப்ரோமோவில் இப்போது கதாநாயகி மற்றும் அவருடைய குடும்பத்தை பற்றி தான் அறிமுகம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் கதாநாயகன் குடும்பத்தை பற்றி அடுத்த ப்ரோமோவில் தெரியவரும் என்று தெரிகிறது. இந்த நிலையில் இந்த சீரியல் ட்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது வானத்தைப்போல சீரியல் அல்லது சுந்தரி சீரியல் தான் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சீரியலுக்கு பதிலாக மூன்று முடிச்சு சீரியல் ஒளிபரப்பாகுவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications