28 வருடங்களாக தொடர்கிறது.. பலமுறை வீடு வந்து அழுது இருக்கிறேன்.. மனம் திறந்த செய்திவாசிப்பாளர் ரத்னா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் பல வருடங்களாக செய்தி வாசிப்பாளராக ரத்னா பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் அவர் தன்னுடைய 28 வருட பயணத்தில் தான் பட்ட சந்தோஷங்கள் மற்றும் கஷ்டங்களை குறித்து பேசி இருக்கிறார்.

மனதிற்கு கஷ்டமான செய்திகளை முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல் படித்துவிட்டு பிறகு வீட்டில் போய் அழுது இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

செய்தி வாசிப்பாளர் ரத்னா

செய்தி வாசிப்பாளர் ரத்னா

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகிகளில் வரிசையில் செய்தி வாசிப்பாளர்களை பலரும் விரும்ப காரணம் அந்த காலகட்டத்தில் பலருடைய வீட்டில் டிவி இல்லாமல் இருந்தாலும் பக்கத்து வீட்டில் போய் எட்டி எட்டி பார்த்தது, ஒளிந்திருந்து பார்த்தது எல்லாம் செய்திகளாக மட்டும் தான் இருக்கும். அந்த நேரத்தில் செய்திகளில் கம்பீரமாக அமர்ந்து கொண்டு அன்றைய நிகழ்வுகளை அனைவருக்கும் தெரியப்படுத்தி கொண்டிருப்பவர்கள் தான் பலருக்கு கதாநாயகியாக தெரிந்து கொண்டிருப்பார்கள். அந்த வகையில் 90ஸ் ரசிகர்களுக்கு இப்ப வரைக்கும் பரிச்சயமான இருப்பவர் செய்தி வாசிப்பாளர் ரத்னாவும் ஒருவர். இவர் சமீபத்தில் தன்னுடைய இத்தனை வருட அனுபவங்களை பற்றி கூறியிருக்கிறார்.

28 வருட பயணம்

28 வருட பயணம்

அதில் தான் சினிமாவை பார்க்காமலே 18 வருஷமா திரைவிமர்சனம் செய்தேன் என்ற உண்மையையும் கொட்டி இருக்கிறார். இதை கேட்டு பலருக்கும் அதிர்ச்சியாகி என்னது? நாங்க வேற நீங்க பார்த்து உண்மையா தான் ஃபீல் பண்ணி இப்படி பேசுறீங்கன்னு நினைச்சு கிட்டு இருந்தோமே? என்று தங்களுடைய ஏமாற்றத்தை மனதிற்குள்ளே நினைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. ஆனாலும் சன் டிவியில் பிரபலமான செய்தி வசிப்பளராக இப்ப வரைக்கும் தொடர்ந்து கொண்டிருப்பவர் தான் ரத்னா. இவரை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இவர் 28 வருடமாக செய்தி வாசிப்பாளராக இருந்து வருகிறாராம். ஆனாலும் இது இவருடைய பார்ட் டைம் ஜாப்தானாம். இவர் கார்மெண்ட் பிசினஸ் தான் முழு நேரமாக வேலை செய்து கொண்டிருக்கிறாராம்.

தமிழ் மீது ஆர்வம்

தமிழ் மீது ஆர்வம்

செய்தி வாசிப்பாளர் ரத்னாவின் குடும்பத்தில் அவருக்கு மட்டும் தான் தமிழ் மீது அதிகமாக ஆர்வம் இருந்ததாம். அதோடு உலக நடப்பு விஷயங்களையும் தெரிந்து கொண்டு நண்பர்களோடு விவாதிக்கவும் செய்வாராம். அதனாலேயே அவருக்கு நியூஸ் ரீடராக வேண்டும் என்று ஆசை ஏற்பட்டதாம். தனியா சேனல்கள் இல்லாத அந்த காலத்தில் பொதிகை செய்தி வாசிப்பாளராக வேலைக்கு சென்று இருக்கிறார். எம் காம், காஸ்ட் அக்கவுண்டிங் கோர்ஸ் முடித்துவிட்டு 1989 ஆம் ஆண்டு பொதிகை சேனலில் வாய்ப்பு கேட்டு சென்றிருந்தாராம்.

கிடைத்த வேலை

கிடைத்த வேலை

அங்கு 250 பேருக்கு மேல் செய்தி வாசிப்பாளராக வேலைக்கு சேர வேண்டும் என்று காத்திருக்கிறார்களாம். ஆனால் கடைசியில் இவரோடு இரண்டு பேர் மட்டும்தான் வேலைக்கு தேர்வாகி இருந்தார்களாம். இந்த நிலையில் அந்த பொதிகை சேனலில் சில மாதங்கள் மட்டும்தான் இவர் வேலைக்கு செய்திருக்கிறார். பிறகு பிரேக் எடுத்துக்கொண்டு சன் டிவியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அப்ப இருந்து இப்ப வரைக்கும் நியூஸ் ரீடராக சன் டிவியில் மட்டும் தான் இவருடைய பயணம் சென்று கொண்டிருக்கிறது.

பல்வேறு தருணங்கள்

பல்வேறு தருணங்கள்

மேலும் சன் டிவிக்கு இவர் வந்த பிறகு தான் இவருடைய பெயரே பலருக்கும் தெரிந்ததுதாம். என்னுடைய கிராப் உயர்ந்தது என்று கூறி இருக்கிறார். இந்த மீடியா உலகத்தில் ஏராளமான மகிழ்ச்சியான, சுவாரசியமான, துக்கமான தருணங்கள் எல்லாம் சந்தித்துதான் வந்திருக்கிறாராம். அதிலும் சுனாமியும் கும்பகோணம் தீ விபத்தும் இவருடைய வாழ்வில் மறக்க முடியாத துயர சம்பவங்கள் என்று கூறி இருக்கிறார். சுனாமி வீடியோ கிளிப்சுகள் எல்லாம் பார்த்து ஹாலிவுட் படத்தில் பார்க்குற மாதிரியே இருக்கிறதே! இந்த செய்தி நிஜமா? கனவா? என்று அவருக்குள்ளே அப்போது சந்தேகம் வந்திருக்கிறதாம்.

துயரமான சம்பவங்கள்

துயரமான சம்பவங்கள்

பிறகு அந்த செய்திகளில் நூற்றுக்கணக்கான உயிர்கள் இறந்ததை சொல்லிக் கொண்டிருக்கும்போது மனதிற்குள் பயங்கரமான ஆதங்கமும், போராட்டமும் இருந்ததாம். அதுபோல கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் குழந்தைகள் உயிரிழந்தது. அவருடைய உடல்களை எல்லாம் எடுத்துக்கொண்டு போவதை பார்த்து வாசிக்கும் போது என்னுடைய மனதிற்குள் சொல்ல முடியாத துக்கம். அத்தோடு இந்த மாதிரி செய்திகளை எல்லாம் படிக்கும்போது தனிப்பட்ட உணர்வுகளை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் செய்தி படித்து விட வேண்டும் என்றும் ஆனால் பிறகு இவர் வீட்டுக்கு சென்று இதை நினைத்து ரொம்பவே அழுது இருக்கிறாராம்.

திரை விமர்சனம்

திரை விமர்சனம்

அதுமட்டுமில்லாமல் இவருடைய செய்தி துறையில் இவர் இன்னொரு புரட்சியும் செய்து இருக்கிறார். அது திரை விமர்சனம் தொகுத்து வழங்கியது தானாம். அந்த நேரத்தில் திரை விமர்சன நிகழ்ச்சியை உமா பத்மநாதன் வழங்கி இருந்திருக்கிறார். ஆனால் அவர் வேற நிகழ்ச்சிக்கு சென்று விட்டதால் இவர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதுவரைக்கும் 18 வருடங்களாக 850 எபிசோடுகளை அந்த நிகழ்ச்சி கடந்து இருக்கிறது. அத்தோடு இவருக்கு பெரிய அளவில் ரிச்சை கொடுத்ததும் அந்த நிகழ்ச்சி தானாம்.

படத்தை பார்க்காமலே விமர்சனம்

படத்தை பார்க்காமலே விமர்சனம்

அந்த நேரத்தில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமையில் ரசிகர்கள் பெரும்பாலாக இவருடைய திரை விமர்சனத்தை தெரிந்து கொண்ட பிறகு தான் படத்தை பார்க்கவே போவார்களாம். ஆனால் இவர் பெரும்பாலான படங்களை பார்க்காமலேயே இவருடைய குழு தயாரித்துக் கொடுத்த தகவல்களை மட்டும் தான் படித்திருக்கிறாரம். ஆனால் அது தெரியாமல் அந்த படத்தை பார்க்க போகலாமா? நல்லா இருக்கான்னு? கூட பலர் இவரிடம் சந்தித்தும், போன் மூலமாகவும் கேட்பார்கள் என்று கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+