நீயா நானா கோபிநாத்தை நிராகரித்த சன் டிவி? வாரியணைத்த விஜய் டிவி.. கழண்டு விழும் பிராண்டுகள்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் பெயரளவுக்குதான் பிக்பாஸ் ஓடுகிறது. இப்படித்தான் ஒவ்வொரு பிராண்டுகளும் விஜய் டிவியிலிருந்து கீழே விழுகின்றன.. இதில், நீயா நானா கீழே விழவில்லை.. விழக்கூடிய நிலைமையில் மட்டுமே இருக்கிறது" என்று பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார். அத்துடன் நீயா நானா கோபிநாத், சன் டிவிக்கு செல்கிறாரா? என்பது குறித்தும் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார். Realone Media என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "கோபிநாத் மீது நிறைய விமர்சனங்கள் உண்டு.. ஆனால், ஒரு டாக் ஷோவை இத்தனை வருடம் வெற்றிகரமாக நடத்துவது என்பது எளிதான விஷயம் கிடையாது.

டாக் ஷோ என்றாலே அது வெளிநாடுகளில் மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது.. இங்கு முதன்முதலில் நடிகரும், இயக்குனருமான யூகி சேது என்பவர்தான் தூர்தர்ஷனில் டாக் ஷோ நடத்தினார். அதற்கு பிறகுதான் மற்றவர்கள் டாக் ஷோ நடத்த துவங்கினார்கள்.

18 வருடம் சக்ஸஸ்

விஜய் டிவியில் டாக் ஷோவை 18 வருடமாக கோபிநாத் நடத்தி வருவது பெரிய விஷயம்.. இந்த விவாதத்தில் எடுத்து கொள்ளப்படாத டாபிக்கே கிடையாது. ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு முன்னணிக்கு வந்தவர் கோபிநாத்.. ஆனால், இதே சன்டிவி அன்று கோபிநாத்தை தவிர்த்தது என்பதையும் இங்கு சொல்ல வேண்டியிருக்கிறது.

உதவாத டாப்பிக்குகள்

அன்று விஜய் டிவியை ஸ்டார் நிறுவனம் வாங்கியதுமே, அங்கு இணைந்தார் கோபிநாத்.. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகவும் பயன்படுத்திக் கொண்டார். எளிய மக்கள், நடுத்தர மக்கள், மேல்தட்டு மக்களிடமும் சேரக்கூடிய வகையில் நிகழ்ச்சியை கொண்டு போனார்.. அவரது மொழியாற்றல், கண்டெண்ட்களை தேர்வு செய்யும் விதம் போன்றவற்றிலும் சிறப்பாக செயல்பட்டார் கோபிநாத். உதவாத டாபிக்கை கூட பேசுகிறாரே? என்று விமர்சனங்களும் கோபிநாத் மீது உண்டு என்றாலும், அனைத்தையும் கடந்து இன்று முன்னணியில் உயர்ந்துள்ளார்..

சலிப்பை தந்த போட்டியாளர்கள்இந்நிலையில்தான், விஜய் டிவி , அம்பானி கைக்கு செல்கிறது.. கலர்ஸ் டிவிதான் விலைக்கு வாங்க போகிறது.. ஆனால், பிராண்டு நிகழ்ச்சிகள், அதாவது, நீயா நானா, சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி என பிராண்டட் நிகழ்ச்சிகளை கலர்ஸ் தொடர போவதாகவும், இதற்கெல்லாம் புதுமுகங்களை நியமித்து நிகழ்ச்சியை நடத்தப் போவதாகவும் சொல்கிறார்கள்.

இதில் கோபிநாத்தை மட்டும் மீண்டும் நிகழ்ச்சியை நடத்த அனுமதிப்பார்களா தெரியவில்லை. திறமைசாலிகளை பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை, ஆனால், ஒரே முகத்தையே திரும்ப திரும்ப பார்ப்பதால், நேயர்கள் சலிப்பாவது உண்மைதான்.

விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் அனைத்தும் இறங்குமுகமாக செல்ல காரணமே அவர்களது தவறான கான்செப்ட்தான்.. பிராண்டு, கண்டென்ட்கள் சரியாக இருந்தாலும், கான்செப்ட் , களமிறக்கப்படும் பங்கேற்பார்கள், போட்டியாளர்கள், ஆங்கர்கள் சலிப்பை என தந்துவிட்டது. விஜய் டிவிக்கு இவர்களை விட்டால் வேறு ஆட்களே இல்லையா? என்ற கேள்விதான் எழுந்தது.

பிராண்டு கீழே விழுகிறது

எனவேதான் இன்று பல விஜய் டிவி நிகழ்ச்சிகள் விழுந்துவிட்டன.. அன்று பாவாடை கட்டி கமல்ஹாசனை நிக்க வைத்தபோதே பிக்பாஸ் நிகழ்ச்சி விழுந்துவிட்டது.. மீண்டும் நிகழ்ச்சியை தூக்கி நிறுத்த முயன்றும்கூட தவறுகள் நடந்தன... குறிப்பாக, சிம்புவா? விஜய் சேதுபதியா? யார் நிகழ்ச்சியை நடத்துவது என்ற பேச்சு வந்தது. சிம்பு இதற்கு முன்பே பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திய அனுபவம் உள்ளது..

எனினும் சம்மந்தமே இல்லாமல் விஜய் சேதுபதியை தேர்ந்தெடுத்தார்கள்.. இது தவறான முடிவு.. சிம்பு நடத்தியிருந்தால், அது வேற லெவலில் இருந்திருக்கும். எனவே பெயரளவுக்குதான் பிக்பாஸ் ஓடுகிறது.

இப்படித்தான் ஒவ்வொரு பிராண்டுகளும் விஜய் டிவியிலிருந்து கீழே விழுகின்றன.. இதில், நீயா நானா மட்டும் கீழே விழவில்லை.. ஆனால், விழக்கூடிய நிலைமையில் மட்டுமே இருக்கிறது. எனினும், அம்பானி கையில் விஜய் டிவி போயிருப்பதால், திறமைசாலிகளை தேர்ந்தெடுத்து வருகிறார்கள். அந்தவகையில், மீண்டும் கோபிநாத்தையே தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+