கர்ப்பமாக இருக்கும் ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட உருக்கமான பதிவு.. அறிவுரை கூறும் ரசிகர்கள்
சென்னை: ரோஜா சீரியலில் அனுவாக நடிக்கும் விஜே அக்ஷயா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட போஸ்ட் அனைவரையும் கவர்ந்துள்ளது.
வி ஜே அக்ஷயா தொகுப்பாளராக அறிமுகமாகி இருந்தாலும் தற்போது ரோஜா சீரியலின் வில்லி கேரக்டரில் பலரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டு உள்ளார்.
கர்ப்பமாக இருக்கும் அக்ஷயா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ள வார்த்தைகள் அர்த்தம் என்ன என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவருக்கு அறிவுரைகளும் அதிகரித்து வருகிறது.

வரவேற்ற வணக்கம் தமிழ்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் மூலமாக பல செலிப்ரட்டிகளை பேட்டி எடுத்த வீஜே அக்ஷயா தற்போது ரோஜா சீரியலில் வில்லி கேரக்டரில் அனைவரையும் மிரட்டி கொண்டிருக்கிறார். தன்னுடைய படபடப்பான பேச்சாளும் ஜாலியான கேரக்டராலும் ரசிகர்களை மட்டுமல்லாமல் பிரபலங்களையும் அக்ஷயா கவர்ந்துள்ளாராம். அதனால் இவர் ரோஜா சீரியலில் செய்யும் வில்லத்தனத்தை கூட ரசிகர்கள் பல முறை மன்னித்து விடுகிறார்களாம். ரோஜா சீரியலில் ஏற்கனவே நடித்து வந்த ஷாமிலி கர்ப்பமாக இருந்த காரணத்தினால் இந்த சீரியலை விட்டு விலகிய இருந்தார். இந்த நிலையில் ஷாமிலிக்கு பதிலாக அக்ஷயா வந்ததும் ஆரம்பத்தில் ரசிகர்கள் இவர் இந்த கேரக்டருக்கு செட் ஆவாரா?? என்று தான் கேள்விகளை எழுப்பி வந்தார்களாம்.

மகிழ்ச்சியான செய்தி
தற்போது ரோஜா சீரியலின் அனு கேரக்டரில் ரசிகர்களின் மனதை கவர்ந்த அக்ஷயா கர்ப்பமாக இருந்தாலும் இந்த சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார். இந்த சீரியலில் இவர் இனி தொடர்ந்து வருவாரா?? என்று பலர் கேள்வியை எழுப்பி வருகிறார்கள். ஆனாலும் அதற்கான பதிலை இன்னும் கூறாமல் அக்ஷயா இருந்து வருகிறார். இந்த நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் போது தன்னுடைய கணவருடன் போட்டோ சூட் ஒன்றை எடுத்து இருக்கிறார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒவ்வொன்றாக பதிவிட்டு அதற்கு மனதில் இருக்கும் வார்த்தைகளை கேப்ஷனாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

உருக்கமான பதிவு
அக்ஷயா கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேட்டு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில், தன்னுடைய குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்தாலும் பரவாயில்லை அது விரைவில் வரப்போகும் மகிழ்ச்சியை மட்டும் தான் அதிக அளவில் எதிர்பார்ப்பதாக கூறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தற்போது அவர் வெளியிட்ட போஸ்டில், "வாழ்க்கை உனக்குள் வளரும் வரை உனக்குத் தெரியாது இதைவிட அழகானது, எது??..." என்று என கேள்விக்குறியோடு முடித்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். இது யாருக்காக இருக்கும்?? இவருடைய குழந்தைக்காகவா?? அல்லது கணவருக்காகவா?? என்று கேள்விகளை கமெண்டுகளில் கேட்டு வருகிறார்கள்.

ரசிகர்களின் அறிவுரை
வி ஜே அக்ஷயாவுக்கு விரைவில் வளைகாப்பு இருக்கும் என்பதால் அதற்குப் பிறகு இந்த சீரியலில் அவர் தொடர்வாரா? ? அல்லது அவருக்கு பதில் வேறு ஒருவர் நடிப்பாரா? ? என்று பலர் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தாலும் இவருடைய ரசிகர்கள் தொடர்ந்து சீரியலில் நடித்து வருமாறு அன்பு கட்டளைகள் விட்டு வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் அக்ஷயாவின் குழந்தை நல்லபடியாக வளர வேண்டும் என்றும் சீரியலில் நடிக்கும் போது உடல் நலத்தில் அதிக கவனம் வேண்டும் என்றும் அதிக அறிவுரைகளை கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications