மனைவியின் ஆசையை திருமண பரிசாக நிறைவேற்றிய முனீஸ் ராஜா... ரசிகர்களிடம் உருக்கமான வேண்டுகோள்
சென்னை: சின்னத்திரை நடிகர் ஆன முனீஸ் ராஜா தனது மனைவிக்கு திருமண மணி பரிசாக அவருடைய ஆசையை நிறைவேற்றி உள்ளாராம்.
திடீர் திருமணம் செய்து ஒரே நாளில் ஓஹோ வென பிரபலமான சின்னத்திரை நடிகர் முனீஸ் ராஜா தற்போது ரசிகர்களிடம் உருக்கமான வேண்டுகோளையும் வைத்துள்ளார்.
முனீஸ் ராஜா மனைவிக்காக செய்த செயலை பலரும் வாழ்த்தியும், ஒரு சிலர் கலாய்த்தும் வருகிறார்கள்.

நாதஸ்வரம் சீரியலில் அறிமுகம்
சன் டிவியில் இயக்குனர் திருமுருகன் இயக்கி ஒளிபரப்பான சீரியல் தான் நாதஸ்வரம். இந்த சீரியலில் சம்பந்தம் கேரக்டரில் நடித்து பலரையும் கவர்ந்தவர் முனீஸ் ராஜா. இவருடைய பெயரை கூட பலருக்கும் இப்போது வரைக்கும் தெரியவில்லையாம். ஆனால், அவரை நாதஸ்வரம் சம்பந்தம் என்று சொன்னாலே பலருக்கு டக்கு என்று நினைவிற்கு வந்து விடுகிறது. அந்த அளவிற்கு முதல் சீரியலில் தன்னுடைய காமெடி மற்றும் கலக்கல் ஆன தனி நடை அழகை வைத்து அனைவரையும் கவர்ந்து விட்டார். நாதஸ்வரம் சீரியலுக்கு இவருடைய நடிப்பும் ஒரு பிளஸ் பாயிண்ட் என்பது பலருடைய கருத்தாக இருந்து வருகிறது.

அழகு தேவையில்லை திறமை போதும்
நாதஸ்வரம் சீரியலுக்குப் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' எனும் சீரியல் கதாநாயகனாக முனீஸ் ராஜா நடித்துள்ளார். அழகாக மற்றும் கம்பீரமான இருக்கும் நடிகர்கள் மட்டும்தான் கதாநாயகர்கள் என்று அல்ல, பக்கத்து வீட்டு பையன் போல எதார்த்தமாக இருப்பவர்களும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதை இந்த சீரியல் மூலமாக பலருக்கும் உணர்த்தியுள்ளார். முனீஸ் ராஜா, நடிகர் சண்முக ராஜனின் தம்பி என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக தான் இருந்து வந்துள்ளது .

அடுத்த வீடியோ
நடிகர் முனீஸ் ராஜா நடிகர் ராஜ்கிரனின் வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொண்டது சமூக வலைத்தளத்தில் பலருக்கும் வியப்பையும், பரபரப்பையும் கொடுத்திருந்தது. திருமணம் முடிந்த பிறகு ராஜ்கிரண், முனீஸ் ராஜாவை பற்றி தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதனால் ராஜ்கிரணின் தீவிரமான ரசிகர்கள் முனீஸ் ராஜாவின் மீது கோபத்தில் இருக்கும் நேரத்தில் முனீஸ் ராஜா மீண்டும் வெளியிட்ட வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மனைவியின் ஆசை
முனீஸ் ராஜா தன்னுடைய திருமணத்திற்கு பிறகு அவருடைய மனைவி ஆசைப்பட்ட பிசினஸை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறாராம். அதுவும் அந்த பிசினஸ் கூடிய விரைவில் தொடங்கப்பட இருக்கிறதாம். இந்த மாத இறுதியில் தொடங்கப்பட இருக்கும் அந்த பிசினஸுக்கு நண்பர்களும், உறவினர்களும், ரசிகர்களும் என்னுடைய அழைப்பை ஏற்று அந்த ஃபங்ஷனுக்கு வந்து எங்களுடைய பிசினஸை சிறப்பாக ஆசீர்வாதத்தோடு ஆரம்பித்து கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

குவியும் வாழ்த்துக்கள்
முனீஸ் ராஜாவின் இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். புதியதாக திருமணமான ஜோடிகளுக்கு பலர் ஆசீர்வாதங்களையும் வழங்கி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் தொடங்கி இருக்கும் பிசினஸால் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று வாழ்த்துக்கள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் பலர் திருமணத்திற்குப் பிறகு இவர்கள் மகிழ்ச்சியாக வாழ மாட்டார்கள். பணத்துக்காக திருமணம் செய்து கொண்டுள்ளார். என்றெல்லாம் இவருக்கு எதிராக கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications