அட நம்ம சுந்தரியா...இம்புட்டு அழகா இருக்காங்களே... எத்தனை வயசாச்சு தெரியுமா
சன்டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் நாயகிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை குவித்து விட்டனராம் ரசிகர்கள்.
சென்னை: சுந்தரி சீரியல் நாயகி கேப்ரியெல்லா செலஸ் நாளுக்கு நாள் அழகாகிக் கொண்டே வருவதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாடியுள்ள கேப்ரில்லா தன்னை வாழ்த்திய ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார். தனக்கு எத்தனை வயதாகிறது என்றும் தெரிவித்துள்ளார் கேப்ரில்லா.
அடியாத்தி நம்ம சுந்தரியா இது.. இங்க இருக்கிறப்ப கறுப்பா எம்புட்டு அழகா இருந்த... டவுனுக்கு போய் இப்படி மாறி வந்திருக்கியே என்று ஒரு பாட்டி வசனம் பேசுவார். சுந்தரி சீரியல் நாயகியின் மாற்றம்தான் கிராமத்து மக்களின் பேச்சாக இருக்கும்.
கிராமத்து பெண் சுந்தரி திருமணத்திற்குப்பிறகு கணவனுடன் நகரத்திற்கு செல்கிறது. தனது கணவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்ற தகவல் தெரிந்த உடன் கொந்தளிக்கிறாள். கறுப்பாக இருக்கிறாள் என்ற காரணத்திற்காக வெறுக்கிறான் சுந்தரியின் கணவன் கார்த்திக். கலெக்டர் கனவோடு சென்னை வந்த சுந்தரி தனது கணவனின் இரண்டாவது மனைவியின் அலுவலகத்திலேயே சிஇஒவாக வேலை செய்கிறார்.

மாடர்ன் சுந்தரி
சீரியலில் கிராமத்து பெண்ணாக இருந்தாலும் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் கலக்கலாக போஸ் கொடுத்து வீடியோ போட்டோக்களை பதிவிட்டுள்ளார். உன்னை இவ்வளவு தான் என்று மதிப்பிட ஒருபோதும் விடாதே என்ற வார்த்தையையும் எழுதியுள்ளார் சுந்தரி.

கறுப்பு உடையில் கலக்கல்
சுந்தரி அணியும் உடைகள் தனித்துவமாக இருக்கிறது. நடிப்பும் இயல்பாகவே இருக்கிறது. கறுப்பு நிற உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார் சுந்தரி. நூறு கருத்துக்களை உன்னிடம் சொன்னாலும், முடிவு ஒரு முறை எடுத்தாலும் சிறப்பானதாக இருக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார் சுந்தரி. சில நேரம் உந்தன் மௌனம் உணர்த்தட்டும் உந்தன் உணர்வுகளை என்றும் கூறியுள்ளார் சுந்தரி.

கடிதாசிக்காரி சுந்தரி
சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் கேப்ரியெல்லா செலஸ், நடிகர் ரஜினிகாந்தின் கபாலி நயன்தாராவின் ஐரா போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் 'கடிதாசிகாரி' என்ற தலைப்பில் வீடியோ பதிவிட்டு பிரபலமானார் கேப்ரியெல்லா. சுந்தரி சீரியல் மூலம் பலரது இல்லங்களில் உலா வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

28 வயசாச்சு மகிழ்ச்சியில் சுந்தரி
சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாடினார் கேப்ரியெல்லா. சமூக வலைத்தள பக்கங்களில் பலரும் வாழ்த்துக்களை குவித்து விட்டனராம். தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் உடனே நன்றி கூற முடியவில்லை என்று வீடியோ பதிவிட்டுள்ளார். தனக்கு 28 வயதாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார் கேப்ரியெல்லா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications