பாடகர் மனோவின் மனைவி இந்த பிரபலம் தானா? விஜய் டிவி நிகழ்ச்சியில் அறிமுகம்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: பாடகர் மனோவின் மனைவியான ஜமீலா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார். இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ராக்ஸ்டார் மனோ என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதில் பாடகர் மனோ சீப் கெஸ்ட் ஆக கலந்து கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அவருடைய மனைவியும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
முதல் முறையாக சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மனோ அவருடைய மனைவியோடு கலந்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் மனோ தன்னுடைய மனைவிக்காக ஒரு பாடலையும் அந்த மேடையில் பாடியிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் நாம் எல்லோருமே சோகங்களாக இருந்தாலும் சரி, சந்தோஷங்கள் இருந்தாலும் சரி அதை கொண்டாடுவதற்கோ அல்லது அதை மறப்பதற்கோ தேடுவது இசை தான். அதிலும் நமக்கு மனதிற்கு பிடித்தமான பாடல்கள் ஒரு சிலவற்றை நாம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருப்போம். அந்த வகையில் குத்து பாடலாக இருந்தாலும் சரி சோகப் பாடல்களாக இருந்தாலும் சரி அதில் ரசிகர்களின் மனம் கவர்ந்தபடி வார்த்தைகளை பாடலால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர்களில் பாடகர் மனோவும் ஒருவர்.
இவர் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். அதுபோல 3000-க்கும் மேற்பட்ட கச்சேரிகளையும் நடத்தி இருக்கிறார். பாடகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் கமல்ஹாசன் ரஜினிகாந்த் போன்றோருக்கு குரல் கொடுத்திருக்கிறார். இப்படி இவருக்குள் பல திறமைகள் இருந்தாலும் இவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 90's கிட்ஸ்கள் மட்டுமல்லாமல் டூ கே கிட்ஸ்கள் வரைக்கும் பலரையும் சிரிக்க வைக்கும் ஒரு ஜாலியான நடுவராகத்தான் இருந்து வருகிறார்.

ஆனால் சமீபத்தில் சில சீசன்களில் இவர் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் பத்தாவது சீசனில் இந்த வாரம் ராக் ஸ்டார் மனோ என்ற தலைப்பில் பாடல்கள் போட்டியாளர்களால் பாடப்படுகிறது. அதில் கலந்து கொண்டிருக்கும் மனோவிற்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக அவருடைய மனைவி ஜமீலா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
அதுபோல பாடகர் மனோவிற்கு 1985 ஆம் ஆண்டுதான் ஜமீலா என்பவரோடு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இவருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன்னுடைய மனைவியை பார்த்ததும் மனோ "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்று சொல்லி தன்னுடைய மனைவிக்கு பொன்னாடை போற்றி வரவேற்று இருக்கிறார். இந்த க்யூட்டான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதுபோல இந்த வார எபிசோடுக்காக இப்ப வரைக்கும் 8 ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் எட்டாவது ப்ரோமோவில் ஒரு பாடகர் "அதோ மேக ஊர்வலம்" என்ற பாடலை பாடியிருந்தார் அந்த பாடலை கேட்டு மெய் மறந்த மனோ தன்னுடைய கையில் கட்டி இருந்த கோல்ட் வாட்ச்சை கழட்டி அந்த போட்டியாளருக்கு பரிசளித்திருக்கிறார்.
அதுபோல சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் மூன்று தலைமுறைகளை கண்ட நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியும் மனோவிற்காக இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக கலந்து கொண்டிருக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு வெண்ணிற ஆடை மூர்த்தி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தாலும் அவர் என்னுடைய மகன் மனோ என்று மனோவை பெருமைப்படுத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications