தங்கத்திலேயே திருட்டுத்தனமாக தாலி கட்டிய நடிகர்.. முறை பெண்ணுக்கு சர்ப்ரைஸ் தந்து ஹேப்பி.. இது எப்போ?
சென்னை: நடிகர் பாலா தன்னுடைய திருமணம் குறித்து பேட்டி தந்துள்ளார். மறுமணம் செய்து கொள்ள நிறைய யோசித்ததாகவும், அன்புதான் வாழ்க்கையில் முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டபிறகுதான், இப்படியொரு முடிவெடுத்ததாகவும் மனம்திறந்து பேசியிருக்கிறார். அத்துடன், திருட்டுத்தனமாக தாலி கட்டியது குறித்தும் கூறியிருக்கிறார்.
Galatta யூடியூப் சேனலுக்கு பாலா தம்பதியினர் அளித்த பேட்டியில், தன்னுடைய உறவுக்கார பெண் கோகிலாவுடன், தனக்கு எப்படி திருமணம் நடந்தது? மறுமணம் செய்து கொள்ள மனம் மாறியது ஏன்? என்பது குறித்தெல்லாம் விரிவாக சொல்லி உள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

மாமா கூடவே நான் இருக்கணும்
"கடந்த ஒன்றரை வருட காலமாகவே என்னை கோகிலா கவனித்து கொண்டு வருகிறார்.. உதாரணத்துக்கு வீட்டில் 10 பேர் இருக்கிறார்கள் என்றால், வேறு யாரையுமே எனக்கு சாப்பாடு போட விடுவதில்லை.. மாமாவுக்கு நான் தான் சாப்பாடு போடுவேன் என்று சொல்லி விழுந்து விழுந்து கவனிப்பார்.. மாமா கூடவே இருக்கணும்னு சொல்லிட்டே இருப்பாங்க. இதுதான் எங்களுக்குள் அப்போது இருந்த தொடர்பு... மற்றபடி ஐலவ்யூ , டார்லிங் இதெல்லாம் என்னிடம் அவர் சொன்னதேயில்லை.
இவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஒருநாள் எனக்கு மனசில் தோன்றியது, அதனால் மறுநாளே தாலி வாங்க நகைக்கடைக்கு போனேன்.. ஆனால், கடைகள் மூடியிருந்தன.. வழக்கமாக கேரளாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் நகைக்கடைகள் திறக்க மாட்டார்கள். பிறகு, ஒரு கடையை திறக்க வைத்து, ஒரு தாலி வாங்கினேன். ஆனால், இங்குள்ள தாலி வேறு, அங்குள்ள தாலி வேறு மாதிரியாக இருக்கும்.
அந்த தாலியை வாங்கி, கோகிலாவுக்கு தெரியாமல் கட்டிவிட்டேன். "உனக்காக ஒரு கிப்ட் வாங்கி வந்திருக்கேன்" என்று சொல்லி, சாமி போட்டோ முன்பு வைத்து கட்டிவிட்டேன். அதற்கு பிறகுதான், ஜாதகப்படி திருமணம் நடந்தது.
அன்புதான் முக்கியம்
முதலில், எனக்குள்ளே சில நெருடல்கள் இருந்தன.. அதெல்லாம் என்னைவிட்டு போனபிறகுதான், வாழ்க்கையில் அன்புதான் முக்கியம் என்பதை உணர்ந்து இவரை திருமணம் செய்ய முடிவெடுத்தேன்.
போன வருடம் எனக்கு ஆபரேஷன் நடந்தது. அப்போது கடவுள் என்னை காப்பாற்றி விட்டார். அந்தசமயம், ஒரு மருந்து எனக்கு தப்பாக தந்துவிட்டார்கள்.. தப்பான மருந்து தந்தவர்கள் யார் என்று நான் சொல்ல விரும்பல.. இது தெரியாமலேயே நான் அந்த மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளேன். பிறகுதான், நான் மீண்டும் 10 நாள் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் நிலைமை வந்தது.
திருட்டுத்தனமாக தாலி கட்டினேன்
அந்த 10 நாளுமே என்னுடைய 2 கைகளிலும் டியூப் போடப்பட்டிருந்தது.. சாப்பிடுவது, குளிப்பது என அடிப்படையான விஷயத்தையும் என்னால் செய்ய முடியல. அப்படியே செய்வதானாலும் அதை, ஒரு தாய் மட்டுமே செய்ய முடியும். அப்போது கோகிலாதான் என்னை கூடவே கவனித்து கொண்டார்.. அன்றைக்குதான் நான் ஒருதாரத்தை பார்த்தேன்.,
என் மனசில் அப்போதுதான் தோன்றியது, இவள் உண்மையிலேயே நம்மை விரும்புகிறாள், சீரியஸாகவே நம்மை நேசிக்கிறாள் என்று புரிந்தது.. எப்போதுமே நான் அவளை சின்ன பொண்ணு என்றே நினைத்து கொண்டிருந்தேன். ஆனால், கோகிலாவுக்கு இருக்கும் முதிர்ச்சி, எனக்குகூட கிடையாது. இப்போது எங்களுக்கு கல்யாணம் ஆகி 3 மாசமாகுது.. அதற்கு முன்னாடியே நான் திருட்டுத்தனமாக அந்த தாலியை நான் கட்டிவிட்டேன்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications